மேலும் அறிய

சாலைக்கு வந்த சில நாட்களிலேயே 'மக்கர்'... புதிய அரசுப் பேருந்தின் தரம் இதுதானா?

திருவாரூரில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து சில நாட்களே ஆன புதிய அரசுப் பேருந்து, திடீரெனப் பழுதாகி நின்றதால் பயணிகள் அதிர்ச்சி! மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடும் அவதியடைந்தனர்.

திருவாரூர்: தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பொதுப் போக்குவரத்துத் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் மாவட்டம் தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பழைய அரசுப் பேருந்துகள் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நிற்பதும், மழைக்காலங்களில் கூரை ஒழுகுவதும் வாடிக்கையாக இருந்தது.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், பழைய பேருந்துகளுக்கு மாற்றாக அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்துகளை இயக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் திருவாரூர் மாவட்டத்திற்கும் புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டன.

மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்

புதிய பேருந்துகளின் வருகை திருவாரூர் மாவட்ட மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இனிமேல் ஓட்டை உடைசல் பேருந்துகளில் தவிக்க வேண்டியதில்லை என்றும், எந்தவித இடையூறுமின்றி பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். குறிப்பாக, தினமும் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்களும் புதிய பேருந்து சேவையால் உரிய நேரத்திற்குச் செல்ல முடியும் எனப் பெரிதும் நம்பினர். ஆனால், மக்களின் அந்த எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே நீர்க்குமிழி போல உடைந்து போயுள்ளது.

நடுவழியில் நின்ற புதிய பேருந்து

இன்று காலை திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கிப் புத்தம் புதிய அரசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. காலை நேரமாக இருந்ததால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள், அலுவலகம் செல்வோர் எனப் பேருந்தில் கூட்டம் அலைமோதியது.

பேருந்து திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாகப் பேருந்தின் இயந்திரத்தில் திடீரெனக் கோளாறு ஏற்பட்டது. இதனால் பேருந்து மேற்கொண்டு நகர முடியாமல் நடுவழியில் அப்படியே நின்றது. ஓட்டுநர் பேருந்தை மீண்டும் இயக்கப் பலமுறை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை. புத்தம் புதிய பேருந்து இப்படிப் பாதியிலேயே மக்கர் செய்து நின்றதைப் பார்த்துப் பேருந்தில் இருந்த பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

மாணவர்கள், பணியாளர்கள் கடும் அவதி

பழைய பேருந்துகள் தான் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவழியில் நிற்கும் என்றால், சாலைக்கு வந்து சில நாட்களே ஆன புதிய பேருந்தும் பழுதாகி நின்றது பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பேருந்து உடனடியாகச் சரி செய்யப்பட்டுவிடும் எனப் பயணிகள் முதலில் காத்திருந்தனர். ஆனால், நேரம் செல்லச் செல்லப் பேருந்தைப் பழுதுபார்க்க முடியாத சூழல் ஏற்பட்டது. காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குத் தேர்வுக்கும், வகுப்புகளுக்கும் செல்ல வேண்டிய மாணவ, மாணவிகள் இதனால் பெரும் பதற்றத்திற்கு ஆளாகினர். அதேபோல், முக்கியப் பணிகளுக்காகவும், மருத்துவமனைகளுக்கும் சென்ற பொதுமக்களும் உரிய நேரத்திற்குச் செல்ல முடியாமல் நடுரோட்டில் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மாற்றுப் பேருந்தில் பயணம்

பின்னர் நடுவழியில் காத்திருந்த பயணிகள், வேறு வழியின்றி அவ்வழியே வந்த மற்ற பேருந்துகளில் ஏறிச் செல்லத் தொடங்கினர். ஏற்கனவே காலை நேரக் கூட்ட நெரிசலுடன் வந்த மாற்றுப் பேருந்துகளில், பழுதான பேருந்தின் பயணிகளும் முண்டியடித்துக் கொண்டு ஏறியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடியும், நின்றபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புதிய பேருந்துகளைச் சாலைகளில் இயக்குவதற்கு முன்பாக, அவற்றின் இயந்திரத் தரம் மற்றும் தொழில்நுட்பக் கூறுகளைப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முறையாகப் பரிசோதிக்கவில்லையா என்ற கேள்வியை இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.

பயணிகளின் கோரிக்கை

மக்களின் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும் புதிய பேருந்துகள், பயன்பாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே பழுதாவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சமூக ஆர்வலர்களும் பயணிகளும் குற்றம் சாட்டுகின்றனர். தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பேருந்துகளைப் பெறும்போதே தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளைக் கடுமையாக்க வேண்டும் என்றும், இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படாத வண்ணம் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய பேருந்துகளின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருவாரூர் மாவட்டம் மட்டும் இன்றி தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

வீக்கெண்ட் பிளான் ரெடியா? தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை இலவசமாகச் சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!
வீக்கெண்ட் பிளான் ரெடியா? தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை இலவசமாகச் சுற்றிப் பார்க்க செம சான்ஸ்!
சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறீர்களா? கருப்பு வேட்டி கட்டிய பக்தர்களுக்கு மட்டும் பிக் சர்ப்ரைஸ்!
சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கிறீர்களா? கருப்பு வேட்டி கட்டிய பக்தர்களுக்கு மட்டும் பிக் சர்ப்ரைஸ்!
"கொடியசைக்கச் சொன்னால் ஸ்டியரிங்கைப் பிடித்த எம்.எல்.ஏ!" ரீல்ஸ் மோகத்தால் ஏற்படும் அவலம்..
Mayiladuthurai Power Shutdown : மயிலாடுதுறை மாவட்ட மக்களே உஷார்! இன்று (நவ.19) பகல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு - உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இருக்கா?
Mayiladuthurai Power Shutdown : மயிலாடுதுறை மாவட்ட மக்களே உஷார்! இன்று (நவ.19) பகல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு - உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இருக்கா?
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
புதிய பொதுத்துறை நிறுவனம் உருவாக்கம்..! மணல் விற்பனையை கையிலெடுக்கும் அரசு? 12 குவாரிகள்?
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
OM Movie Review : தனுஷின் ஓம் திரைப்படம் விமர்சனம்
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
TRB: ஆசிரியர்களுக்கு முக்கிய அப்டேட்! இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு.. TRB சொன்ன இதோ 10 முக்கிய விதிமுறைகள்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.. 15 நாட்களில் ரூ.15,000 சரிவு.. இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?
Moorthy Raid: கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
கலக்கத்தில் திமுக..! முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு - குவாரி விதிமீறல் வழக்கு
Kolathur: கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலினா? புது ரூட்டில் உதயநிதி திமுக? ஆளும் தவெகவில் தணிகா Vs சதிஷ்குமார்?
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
VS Babu: வழக்கு போட்ட அடுத்த நாளே மரணம்! கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உயிரிழப்பில் சதி? போலீசில் பகீர் புகார்!
TN Weather News: இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
இன்று கரையை கடக்கும் அக்வான் புயல்..! சென்னை, காஞ்சியில் மழை? தமிழக வானிலை அறிக்கை
Embed widget