மேலும் அறிய

மயிலாடுதுறை: மின் நுகர்வோர் கவனத்திற்கு! உங்கள் குறைகளுக்கு நாளை முற்றுப்புள்ளி..!

மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை மே 13 -ம் தேதி மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை மறுதினம் நடைபெற்ற உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் கலந்துக்கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு காணலாம் என மயிலாடுதுறை இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் (பொறுப்பு ) ரேணுகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மாதாந்திர கூட்ட அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த நிலையில் அதன் காரணமாக மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்களுக்கு வசதியாக, இனிவரும் காலங்களில் நிலையான ஒரு நடைமுறையை மின் வாரியம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை அன்று மயிலாடுதுறை கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் இந்தக் குறை தீர்க்கும் கூட்டம் முறையாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் மாதந்தோறும் உரிய அதிகாரியைச் சந்தித்துத் தீர்வு காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை 

தமிழ்நாடு அரசு மின்சார வாரிய துறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. மக்கள் எளிதில் அரசு திட்டங்களை அடைய வேண்டும் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மட்டும் பணிகளை அதிகாரிகள் எவ்வித இடையரும் இன்றி மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அதன் ஒன்றாக மின்சார வாரியத் துறையில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் எளிதில் தீர்த்துக் கொள்வதற்காக ஒவ்வொரு பகுதிகளிலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் மக்கள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட்டுகிறது. மேலும் அந்தக் கூட்டத்தின் மூலம் மின் துறையில் ஏற்படும் இடையூறுகளை களைய வழிவகை செய்து தருகிறது.

நாளை குறைதீர் கூட்டம்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் நாளைய தினம் 13.05.2026 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் நாகை மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.

மனுவாக குறைகள் 

இக்கூட்டத்தில் பொதுமக்களாகிய மின் நுகர்வோர் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்து மின்வாரியம் தொடர்பான குறைகளை சரி செய்துகொள்ளுமாறு மயிலாடுதுறை தமிழ்நாடு மின்உற்பத்தி பகிர்மான கழகம், இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற் பொறியாளர் (பொறுப்பு ) ரேணுகா தெரிவித்துள்ளார். இந்த கூட்டமானது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன் கிழமைகளில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் கவனத்திற்கு

இக்கூட்டத்தில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் அனைவரும் நேரில் கலந்துகொள்ளலாம்.

* புதிய மின் இணைப்பு கோருதல்.

* மின் அழுத்தக் குறைபாடுகள் குறித்த புகார்கள்.

* பழுதடைந்த மின் கம்பங்கள் அல்லது மின் மாற்றிகளை (Transformer) மாற்றுதல்.

* மின் கட்டணத்தில் உள்ள குளறுபடிகள்.

* பெயர் மாற்றம் மற்றும் இதர மின் வாரியம் சார்ந்த குறைகளைத் தெரிவித்தல்.

மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் மனுக்களை மேற்பார்வை பொறியாளரிடம் நேரடியாகச் சமர்ப்பித்து, அதற்குரிய பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு மின் வாரியச் செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
Honda Dio-வில் ‘சரக்கு’ சவாரி... எஸ்பி சினேஹா ப்ரியாவின் அதிரடி ஸ்கெட்ச்: வாலிபர் கதி?
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
உங்களிடம் NFDP அடையாள அட்டை இல்லையா? அப்படியானால் அரசு சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்..
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
ஆகாசத்தில் பறக்கப்போகும் மாங்கனிகள்! காரைக்காலில் ஜூன் 29-ல் அரிய ஆன்மீகப் பெருவிழா.. அரசு விடுமுறை அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
MK Stalin: எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்.. ரெடியா இருங்க.. திமுக-வினரை அலர்ட் செய்த மு.க.ஸ்டாலின்!
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
வெங்கட்நாராயணாவி்ற்கு பதவி; அப்செட்டில் தவெக நிர்வாகிகள் - சமாதானம் செய்வாரா விஜய்?
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
Ben Stokes Retirement: கிரிக்கெட்டிற்கு குட் பை சொன்னார் பென் ஸ்டோக்ஸ்! முடிவுக்கு வருகிறது தலைசிறந்த ஆல் ரவுண்டர் சகாப்தம்!
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அரசியலுக்கு அச்சாரம் போடும் சூர்யா? நற்பணி மன்ற நிர்வாகி பேச்சால் பரபரப்பு
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
அனைத்து பெண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம்; எப்போது அமல்? அமைச்சர் பார்த்திபன் தகவல்
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
ரீல்ஸ் தொந்தரவில்லை.. திமுக, அதிமுக குதிரை பேரம் - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி!
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
சிங்கிள் சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்! TVS X இ ஸ்கூட்டரை உடனே வாங்குங்க - விலை எவ்ளோ?
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
டொயோட்டா ஹைப்ரிட் கார்கள்: இந்திய சந்தையில் இன்னோவா, ஹைரைடர், பார்ச்சூனர் ஆதிக்கம்!
Embed widget