மேலும் அறிய

மயிலாடுதுறையில் பாதுகாப்புக்கே பாதுகாப்பு இல்லாத நிலை.. அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

மயிலாடுதுறை மையப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை நகரப் பகுதியில் திருட்டுச் சம்பவங்களைத் தடுப்பதற்காகவும், வணிக நிறுவனங்களின் பாதுகாப்பிற்காகவும் கடைகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படும் சிசிடிவி (CCTV) கேமராக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவையே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் துணிகரச் செயல் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அரங்கேறியுள்ளது. இந்தத் திருட்டுக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவதால், வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியும், பாதுகாப்பு குறித்த கேள்வியும் எழுந்துள்ளது.

நள்ளிரவில் வெறிச்சோடும் நகரப் பகுதிகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பேருந்து நிலையம், கச்சேரி சாலை, கூறைநாடு, பட்டமங்கள தெரு உள்ளிட்ட முக்கியச் சாலைகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிறிய மற்றும் பெரிய வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பகல் நேரங்களில் பொதுமக்களின் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்தால் பரபரப்பாகக் காணப்படும் இந்தப் பகுதிகள், இரவு 10 மணிக்கு மேல் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்ட பின்னர் வெறிச்சோடிப் போகின்றன. நள்ளிரவில் ஒரு சில வெளி மாவட்ட அரசுப் பேருந்துகளும், தனியார் வாகனங்களும் மட்டுமே வந்து செல்கின்றன. இதனால், இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

பாதுகாப்புக் கவசத்திற்கே பாதுகாப்பு இல்லாத நிலை

இத்தகைய சூழலில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களது கடை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பிற்காகச் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி, காவல்துறை சார்பாகவும் நகரத்தின் முக்கியச் சந்திப்புகள் மற்றும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமான கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், சமீப காலமாக இரவு நேரங்களில் சில இடங்களில் சிசிடிவி கேமராக்கள் திருடப்படுவதாகக் கூறப்படும் செய்திகள், வணிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், மயிலாடுதுறை கச்சேரி சாலையில் உள்ள ஒரு வணிக நிறுவனத்தின் வெளிப்புறச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை, நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மிக லாபகரமாகத் திருடிச் செல்லும் காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

வைரலாகும் துணிகரத் திருட்டு வீடியோ

அந்தக் கடையில் பொருத்தப்பட்டிருந்த மற்றொரு சிசிடிவி கேமராவில் பதிவான திருட்டுக் காட்சியில், முகத்தை மூடியபடி வந்த ஒரு நபர், கச்சேரி சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நள்ளிரவு நேரத்தில் மெதுவாகக் கடையின் அருகில் வந்துள்ளார். பின்னர், சற்றும் தயக்கமின்றித் திறமையாகச் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவைப் பிடுங்கி, எடுத்துக்கொண்டு இருளில் மறைந்துள்ளார். திருட்டுச் சம்பவங்களைப் பதிவு செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கருவியையே எளிதாக ஒரு நபர் திருடிச் சென்றிருப்பது, சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பரவி, மயிலாடுதுறை மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வணிகர்களின் கவலை

பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவே திருடப்பட்டிருப்பது, மற்ற வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. "நாங்கள் திருட்டைத் தடுக்கவே கேமராக்களைப் பொருத்துகிறோம். ஆனால், அந்தக் கேமராவே திருடப்பட்டால் நாங்கள் எப்படிப் பாதுகாப்பாக வியாபாரம் செய்ய முடியும்? இரவில் போலீசார் ரோந்துப் பணியை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். இந்தச் சிசிடிவி திருடர்களை உடனே கைது செய்ய வேண்டும்" என்று கச்சேரி சாலையில் கடை வைத்திருக்கும் ஒரு வணிகர் வேதனையுடன் கருத்துத் தெரிவித்தார்.

இரவு நேரங்களில் வரும் வெளியூர் பேருந்துகளைப் பயன்படுத்தி இந்தத் திருட்டுச் செயல்கள் அரங்கேறுகிறதா அல்லது உள்ளூர் நபர்கள்தான் இந்தச் சங்கிலித் திருட்டுகளில் ஈடுபடுகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. திருடப்பட்ட சிசிடிவி கேமராவை விற்கும் நோக்குடன் இந்தச் செயலைச் செய்தாரா அல்லது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்னர் தங்கள் அடையாளம் பதிவாகிவிடக் கூடாது என்பதற்காகவே இதைத் திருடினாரா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறை விசாரணைத் தீவிரம்

இந்தச் சிசிடிவி திருட்டுச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மயிலாடுதுறை நகரக் காவல்துறையினர், வைரலான காணொளியின் அடிப்படையில் அந்த அடையாளம் தெரியாத நபரைக் கண்டறிந்து கைது செய்யும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், நகரத்தின் மற்ற பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் காட்சிகளையும் ஆய்வு செய்து, குற்றவாளியைப் பற்றிய துப்புகளைச் சேகரித்து வருகின்றனர்.

பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட கேமராவையே திருடும் துணிகரம், மயிலாடுதுறை நகரத்தின் இரவு நேரப் பாதுகாப்பு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்தக் குற்றவாளிகளைக் கைது செய்து, வணிகர்களுக்குப் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Roundup: மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை, விஜய்க்கு அஜித் ஆதரவு, சிறப்பு முகாம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை, விஜய்க்கு அஜித் ஆதரவு, சிறப்பு முகாம் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ajith Supports Vijay | ’’விஜய்க்கு தான் என் SUPPORT’’அஜித் பரபரப்பு விளக்கம் வெளியான திடீர் ஆடியோ
Madhampatti Rangaraj  | ”ஏய் பொண்டாட்டி மிஸ் யூ” கொஞ்சிய மாதம்பட்டி ரங்கராஜ் ட்விஸ்ட் கொடுத்த ஜாய்
Joy vs Shruti| ’’என் புருஷனை விட்டு போ’’ஸ்ருதியை மிரட்டிய ஜாய்!CHATS LEAKED Madhampatti Rangaraj
திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
Elon Musk: ஆத்தாடி..! சம்பளமே, ரூ.8,86,59,40,00,00,000 கோடியாம் - குத்தாட்டம் போட்டு கொண்டாடிய எலான் மஸ்க்
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
இரவோடு இரவாக 14 நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிசாமி.! இது தான் காரணமா.?
TN weather Report:  6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN weather Report: 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை நிலவரம் என்ன? தமிழக வானிலை அறிக்கை
TN Roundup: மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை, விஜய்க்கு அஜித் ஆதரவு, சிறப்பு முகாம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: மீண்டும் வெளுக்கப்போகும் கனமழை, விஜய்க்கு அஜித் ஆதரவு, சிறப்பு முகாம் - தமிழகத்தில் இதுவரை
Farmers: விவசாயிகளுக்கு ரூ.6000.? உடனே இதை செய்யுங்க, இல்லைனா கிடைக்கவே கிடைக்காது- வெளியான முக்கிய அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ.6000.? உடனே இதை செய்யுங்க, இல்லைனா கிடைக்கவே கிடைக்காது- வெளியான முக்கிய அறிவிப்பு
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
RCB Sale: ஆர்சிபி விற்பனைக்கு வந்தது ஏன்? புதிய ஓனர் யார்? அதானியை சமாளிக்குமா JSW? கோலி நிலை என்ன?
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Krishnagiri: எதிர்வீட்டு பெண்ணுடன் தொடர்பு.. குழந்தையை கொன்ற இளம்பெண்!
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM  ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Tata EV Discounts: லட்சத்தில் தள்ளுபடி, வரியும் இல்லை - 490KM ரேஞ்ச், டாடா மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Embed widget