மேலும் அறிய

பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

மயிலாடுதுறையில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவில் தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிக்கு பொக்கே கொடுத்து எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்

ஒவ்வொரு ஆண்டும் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளுக்கு மத்தியில், அனைவருக்கும் பாதுகாப்பான சாலைகள் என்பதை நோக்கமாக கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்பட்டது. மக்கள் மத்தியில் சாலை பாதுகாப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டு தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கொண்டாடப்படுகிறது.

பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

சாலை விபத்துகள்

அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில் அதிவேகமாக செல்வது, வாகனங்களுக்கு இடையில் முறையான தொலைவு இடைவெளி இல்லாமல் செல்வது மற்றும் டிரைவிங்கின் போது உடல்நல கோளாறுகளால் ஏற்படும் அசவுகரியம் அல்லது கவனக்குறைவு, போதையில் வாகனம் ஓட்டுவது, செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவது, சோர்வு உள்ளிட்டவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. வாகன ஓட்டிகள் எதிர் பாதையில் நுழையும் போது, கார் சிக்னல்களை சரியாக பயன்படுத்தாமல் அல்லது வேறு வாகனத்தை முந்தி செல்ல முயற்சிக்கும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் சாலை நிலைமைகளும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.

பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

தேசிய சாலை பாதுகாப்பு மாதம்

இந்நிலையில் நமது நாட்டில், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு ஜனவரி 15 முதல் பிப்ரவரி 14 வரை தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்படுகிறது. சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். தமிழ்நாடு அரசின் விபத்தில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் பொருட்டு, தமிழ்நாடு அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 2023-2024 ஆம் ஆண்டிற்கு, சாலைப் பாதுகாப்பிற்காக அரசு 135 கோடியே 84 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியானது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அடிக்கடி விபத்து நிகழும் பகுதிகளைக் கண்டறிந்து மேம்படுத்தவும், நவீன சமிக்ஞை விளக்குகள், சாலைக் கட்டமைப்புகள் மற்றும் சாலைத் தடுப்பான்களை நிறுவுவதற்காகவும் செலவிடப்பட்டு வருகிறது.

பைக்கில் வந்தவரை நிறுத்தி ஃப்ளவர் பொக்கே கொடுத்து பாராட்டிய எஸ்.பி! ஏன் தெரியுமா?

மயிலாடுதுறையில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழா

அதன் ஒரு நிகழ்வாக தேசிய சாலை பாதுகாப்பு மாதம் விழா மயிலாடுதுறையில் அனுசரிக்கப்பட்டது. விழாவையொட்டி மயிலாடுதுறை வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கலந்துகொண்டு ஹெல்மெட் பேரணியை தொடக்கி வைத்தார். இதில், வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகத்தினர் கலந்துகொண்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை பேரணியாக சென்றனர். முன்னதாக, சாலையில் ஹெல்மெட் அணிந்து வந்த முதல் இருசக்கர வாகன ஓட்டியை நிறுத்தி, அவருக்கு ப்ளவர் பொக்கே கொடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பாராட்டு தெரிவித்தார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
Tamil Nadu Budget 2026 LIVE: திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
திருமணம் செய்யும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் - பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
TN Budget 2026: ’’சூப்பர் சிஎம் ஆட்சியில் சூப்பர் சேஃப்டி’’ Super Clean- Super Campus திட்டம், காமராசர் சிறப்பு பள்ளிகள் அறிவிப்பு!
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
TN Budget 2026: தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல்.. பிரச்னையை கிளப்ப எதிர்க்கட்சிகள் பிளான்!
Vijay vs Udhayanidhi : கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
கைதுக்கு பின் நேருக்கு நேர் சந்தித்த விஜய்- உதயநிதி.! சட்டப்பேரவையில் நடந்தது என்ன.?
Embed widget