Raghava Lawrence: ராகவா லாரன்ஸ் பிறந்தநாள்; தனது திறமையால் வாழ்த்து தெரிவித்த இளைஞர்
ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை அடுத்து மயிலாடுதுறையில் வித்தியாசமான முறையில் இளைஞர் வாழ்த்து தெரிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்தநாளினை முன்னிட்டு சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் மூலம் அவரது படத்தினை தத்ரூபமாக வரைந்து மயிலாடுதுறை இளைஞர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட்
மயிலாடுதுறை மாவட்டம் தோப்புத்தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் வெளிநாடுகளில் புகழ்பெற்ற கலையாக விளங்கும் சன் லைட் பர்னிங் வுட் ஆர்ட் என்ற கலையை ஆசியாவிலேயே முதல்முறையாக இந்தியாவில் அரங்கேற்றி வருகிறார். மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஒரே இடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ஓவியம் வரைவது பர்னிங் வுட் ஆர்ட் ஆகும். இளைஞர் விக்னேஷ் ஏற்கனவே இது போன்று பர்னிங் வுட் ஆர்ட் மூலம் விராட் கோலி, தோனி சந்திராயன் 3 விண்கலம், கடல் கொள்ளையன் ஜாக் ஸ்பேரோ, கடவுள் படங்கள், பெரியார், திருவள்ளுவர் படங்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்களை வரைந்து பிரபலமானவர்.
Raghava Lawrence : பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய ராகவா லாரண்ஸ்
ராகவா லாரன்ஸ் பிறந்தநாள்
மேலும் அவர் ஒரு மணி நேரத்தில் 10 திருக்குறள்களை அதில் உள்ள 70 வார்த்தைகள் 577 எழுத்துக்களை சூரிய ஒளி மூலம் எரிப்பதன் மூலம் வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் நடன பயிற்றுநரும், பிரபல நடிகர் மற்றும் இயக்குனருமான ராகவா லாரன்ஸின் 49 வது பிறந்தநாள் இன்று அவர் ரசிகர்களால் தமிழக முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே மயிலாடுதுறை சன் லைட் பர்னிங்வுட் ஆர்டிஸ்ட் விக்னேஷ் சன் லைட் பர்னிங்வுட் ஆர்ட் மூலம் ராகவா லாரன்ஸ் படத்தை வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
வைரலாகும் வீடியோ
அதற்காக தொடர்ந்து மரக்கட்டைகளில் லென்ஸ் மூலம் சூரிய கதிர்களை ஒரே இடத்தில் குவித்து அதில் தோன்றும் நெருப்பு மூலம் ராகவா லாரன்ஸின் ஓவியத்தினை ஒரு வார காலமாக வரைந்து அசத்தியுள்ளார். மேலும் விக்னேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஓவியம் வரைவது குறித்தான வீடியோ பதிவு இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
TNPSC Group 4: குரூப் 4 சான்றிதழ் சரிபார்ப்பு; தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு