மேலும் அறிய

போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கணும்...காவலர்களுக்கு மயிலாடுதுறை எஸ்பி வழங்கிய அறிவுரைகள்..!

மயிலாடுதுறையில் விறுவிறுப்பாக நடந்த கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் விறுவிறுப்பாக நடந்த கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

காவல்துறையின் மிக முக்கிய அங்கமாக விளங்கும் ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் துரித செயல்பாட்டை பறைசாற்றும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த காவலர்களுக்கான வருடாந்திர கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி (Mob Parade)  மிகச் சிறப்பான முறையில் நிறைவடைந்தது.

பயிற்சியின் பின்னணி மற்றும் நோக்கம்

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆயுதப்படை காவலர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இத்தகைய சிறப்பு கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலினின் நேரடி உத்தரவின் பேரில், மாவட்ட ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்காக இந்தப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி 19, 2026 அன்று தொடங்கிய இந்தப் பயிற்சி முகாம், சுமார் 20 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று சிறப்பாக நிறைவுற்றது.

பயிற்சியில் வழங்கப்பட்ட முக்கிய அம்சங்கள்

இந்த 20 நாள் பயிற்சியில் காவலர்களுக்குப் பல்வேறு கட்டங்களாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
*கவாத்து நினைவூட்டல்: காவலர்களின் நடை மற்றும் அணிவகுப்பு முறைகளை மெருகேற்றும் பயிற்சிகள்.
*படைக்கலன்கள் வகுப்பு: காவல்துறையினர் பயன்படுத்தும் நவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களைக் கையாளும் முறைகள் குறித்த தொழில்நுட்ப வகுப்புகள்.
*கலவரக் கட்டுப்பாடு: அவசர காலங்களில் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாமல் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மற்றும் கலவரங்களை ஒடுக்குவது குறித்த நேரடி செயல்முறை பயிற்சிகள்.
ஒவ்வொரு நாளும் பயிற்சியினை மேற்பார்வையிட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு துணைக்காவல் கண்காணிப்பாளர் (DSP) நேரில் கலந்து கொண்டு காவலர்களை ஊக்கப்படுத்தினர்.

கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கண்காணிப்பாளர்

நிறைவு விழாவிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை தாங்கினார். மைதானத்தில் திரண்டிருந்த காவலர்களின் கம்பீரமான அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காவலர்கள் பயன்படுத்தும் படைக்கலன்கள், சீருடை மற்றும் பிற உபகரணங்களை அவர் தனித்தனியாக ஆய்வு செய்து, அவற்றின் பராமரிப்பு குறித்துக் கேட்டறிந்தார்.

காவலர்களுக்கு எஸ்பி வழங்கிய அதிரடி அறிவுரைகள்

நிகழ்வின் இறுதியில், காவலர்கள் மத்தியில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பணியின் போது கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான 7 கட்டளைகளை வழங்கினார்.
* ஒழுக்கம் மற்றும் கடமை: பணியில் எப்போதும் மிக உயர்ந்த ஒழுக்கத்தையும், கடமை தவறாத மனப்பான்மையையும் கொண்டிருக்க வேண்டும்.
*மிடுக்கான சீருடை: குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வரும்போது, சீருடையை மிகச் சுத்தமாகவும், மிடுக்காகவும் அணிந்து வர வேண்டும்.
* பாதுகாப்பு எச்சரிக்கை: முக்கியப் பிரமுகர்கள் அல்லது கைதிகளுக்கு வழிக்காவல் (Escort) செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
* ஆயுதக் கையாளுகை: பணியில் ஆயுதங்களைப் பயன்படுத்தும் காவலர்கள், அவற்றைப் பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும்.
*வாகனப் பராமரிப்பு: காவல் வாகனங்களை ஓட்டும் காவலர்கள் சாலை விதிகளை மதிப்பதோடு, வாகனங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
* விழிப்புடன் இருத்தல்: பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும்போது சிறு கவனச்சிதறலும் இன்றி விழிப்புடன் செயல்பட வேண்டும்.
* அதிகாரிகளின் உத்தரவு: உயர் அதிகாரிகள் வழங்கும் கட்டளைகளைத் துல்லியமாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுத்தினார்.

இந்நிகழ்வின் போது மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை துணைக்காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உடனிருந்தார். இந்தப் பயிற்சியின் மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடரத் தயாராகியுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
சாத்தன்குடி காதல் ஜோடி மரண விவகாரம் : முற்றுகையிட்ட சமுதாய அமைப்புகள்! பூட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகக் கதவுகள்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
ஏன் இந்த முக்குள தீர்த்தவாரி இவ்வளவு சிறப்பு? திருவெண்காட்டில் திரண்ட பக்தர்கள் கூட்டம்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
சீர்காழி அருகே இப்படி ஒரு அதிசயத் தலமா? மங்கைமடம் நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழா அப்டேட்ஸ்!
காவிரிக்கு வந்த சோதனை! காசிக்கு இணையான புண்ணிய பூமியில் வாட்டர் கேன் தண்ணீரில் தர்ப்பணம் கொடுத்த அவலம்!
காவிரிக்கு வந்த சோதனை! காசிக்கு இணையான புண்ணிய பூமியில் வாட்டர் கேன் தண்ணீரில் தர்ப்பணம் கொடுத்த அவலம்!

வீடியோ

CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
NEET UG Result 2026: நீட் தேர்வு முடிவுகள் எப்போது? வெளியான தகவல்! காத்திருக்கும் 20 லட்சம்+ மாணவர்கள்!
India Condemn Hormuz Attack: ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
ஹார்முஸில் டேங்க்கரை தாக்கிய ஈரான்; பலியான இந்திய மாலுமி; தாக்குதலை நிறுத்தக்கூறி இந்தியா கண்டனம்
Senthil Balaji: விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
விசாரணைக்கு வந்தா என்னை கைது செய்யக்கூடாது.! போலீசாருக்கு செந்தில் பாலாஜி பரபரப்பு கடிதம்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 vs புல்லட் 350: மைலேஜ், விலை,டிசைன்- எது பெஸ்ட்? முழு ஒப்பீடு
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
மக்கள் சொத்தை காப்பத்த முடியல.. உங்களுக்கு எதுக்கு அமைச்சர் பதவி.? திமுகவிடம் சிக்கிய அமைச்சர் ரமேஷ்
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
முதல்வர் விஜய் கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணை; 'கழிவிரக்கப் பார்வை'- திமுக கண்டனம்!
Embed widget