மேலும் அறிய

தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

சீர்காழியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் மாணவர்கள் மத்தியில் சட்டமேதை அம்பேத்கராக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன்.

சீர்காழியில் அம்பேத்கர் நினைவு தினத்தில் மாணவர்கள் மத்தியில் டாக்டர் அம்பேத்கராக மாறியுள்ளார் அரசு பள்ளி ஆசிரியர் தாமஸ் ஜெபர்சனின் செயல் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

அளப்பரிய ஆசிரியர் பணி

சுயநலம் மிக்க இந்த உலகில் எந்த எதிர்பார்ப்புகளுமின்றி தாய், தந்தையை காட்டிலும் நமது வெற்றியை கண்டு உச்ச மகிழ்ச்சியை அடைபவர் யார் எனில் அது ஆசிரியர்களே. அம்மாவின் இடுப்பை விடுவித்து, அழுது, ஆர்ப்பாட்டம் செய்து பால்வாடிக்கு செல்லும் குழந்தையை, தாயை போல் கவனித்து அரவணைக்கும் டீச்சர் முதல், பட்ட படிப்பு வரை நம்மை செதுக்குவதில் நமது ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது. 

தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

வாழ்வின் வழிகாட்டி 

ஆசிரியர் என்பவர் மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குபவர். ஒன்றுமே தெரியாமல் பள்ளியில் சேரும் குழந்தைகளை ஒரு பொக்கிஷ புத்தகமாக மாற்றுவதே ஆசிரியர்கள் தான். ஆசிரியர் என்பவர் ஒட்டுமொத்த உலக அறிவையும் ஒரே இடத்தில் இருந்து மாணவர்களுக்கு சொல்லி தருபவர்கள். நாம் படிக்கும் பள்ளியில் நமக்கு கிடைத்த ஒரு அறிய புதையல் தான் ஆசிரியர்கள்.ஏன் இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு உயிர்களும் ஆசிரியர் தான். சிறிய மண்புழு கூட மண்ணை எப்படி உரமாக்குவது என்பதை கற்று தருகிறது. “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” என்னும் பழமொழியை வைத்து, மனிதன் ஆறு அறிவுடன் பிறந்திருந்தாலும் அவனுடைய அறிவை பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டி தேவை. அந்த வழிகாட்டி தான் ஆசிரியர்கள். 

தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

“எழுத்தறிவித்தவன் இறைவனாவான்” என்ற பழமொழிக்கேற்ப ஒரு மனிதனுக்கு யாரெல்லாம் கல்வியறிவை கற்றுத் தருகிறார்களோ அவர்களெல்லாம் இறைவனுக்கு நிகரானவர்கள் என்று கூறப்படுகிறது. அதுபோல, ஆசிரியர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள். ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் கிடைத்த நல்ல நண்பன். நாம் கற்கும் கல்வியை தவிர இந்த உலகிலுள்ள அனைத்தும் அழியக்கூடியவை. அழிவில்லா கல்வியை கற்று தரும் ஆசிரியர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். மற்ற செல்வங்கள் எல்லாம் அழிந்து விடும். ஆனால் கல்வி செல்வமானது அழிவில்லா செல்வமாகும். அந்த கல்வி செல்வத்தை அள்ளித் தரும் ஆசிரியர்கள் உயர்ந்த இடத்தில் இருக்க வேண்டும்.

தனது நினைவு நாளில் வந்த சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் - எங்கே தெரியுமா..?

அம்பேத்கர் நினைவு தினம் 

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அருகே சட்டநாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகளவில் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக தாமஸ் ஜெபர்சன் என்பவர் பணியாற்றி வருகிறார். மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மாணவர்களுக்கு எளிதாக புரியும் வண்ணம் வித்தியாசமாக ஏதாவது செய்து பாடம் நடத்தி வருகிறார். இதன் காரணமாக அப்பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் மீது மிகுந்த பற்று. மேலும் அவர் தேசப்பற்றயும், தேச தலைவர்களையும் பற்றி மாணவர்கள் அறிந்துகொள்ள அவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களில் அவர்களை போன்று பாரதியார், காமராஜர், காந்தியடிகள் என வேடம் அணிந்து பள்ளிக்கு வந்து அன்றையதினம் முழுவதும் அந்த தலைவர்கள் போலவே நடந்து கொள்கிறார். இதன் மூலம் தலைவர்கள் பற்றிய புரிதலை மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தெரிந்துக்கொள்வது மட்டும் இன்றி அவர்களை பற்றி எளிதாக அறிய முடிகிறது என மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழலில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினம் டிசம்பர் 6-ம் தேதி அனுசரிக்கப்படுவதை அடுத்து ஆசிரியர் தாமஸ் ஜெபர்சன் டாக்டர் அம்பேத்கர் வேடம் அணிந்து பள்ளி வந்து மாணவர்கள் மத்தியில் டாக்டர் அம்பேத்கர் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து அன்றை தினம் அம்பேத்கராகவே மாணவர்கள் மத்தியில் நடந்துக்கொண்டார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தற்போது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், இதுபோன்ற அறப்பணி உடன் பல ஆசிரியர்கள் ஆசிரியர் பணியை அறப்பணியாக கருதி வருவது பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
மயிலாடுதுறையில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை.! என்ன தெரியுமா..?
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
காவலர்களின் மனஅழுத்தம் போக்க புதிய முயற்சி: மயிலாடுதுறையில் உடற்பயிற்சி மையம் மற்றும் குழந்தைகள் காப்பகம்..
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
திமுகவினரின் தேர்தல் வேகம்: வேட்பாளர் அறிவிக்கும் முன்னே களமிறங்கிய மயிலாடுதுறை காளி காந்தி குழுவினர்!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
சீர்காழியில் போர் பதற்றம் தணிய வழிபாடு: மயிலாடுதுறையில் 30 யாக குண்டங்களில் சிறப்பு வேள்வி!
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK alliance seat allocation : திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
திமுக கூட்டணியில் இத்தனை கட்சிகளா.!! எந்த எந்த கட்சிக்கு எத்தனை தொகுதி.? இதோ சீக்ரெட் லிஸ்ட்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
T20 World Cup Prize Money: கோப்பையுடன் கோடிகள் யாருக்கு? 2வது இடம், சூப்பர் 8 சுற்றுக்கான பரிசு - முழு விவரங்கள்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Womens Day 2026 Wishes: இல்லத்தரசிகள் டூ காவல் தெய்வங்கள் - சிங்கப் பெண்களுக்கான மகளிர் தின வாழ்த்துகள் - ட்ரெண்டிங் விஷ்
Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: ஸ்டாலின் பெருமிதம், விஜயின் கொண்டாட்டம், உயர்ந்த தங்கம் விலை -தமிழகத்தில் இதுவரை
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
செங்கல்பட்டு பரணூர் புதிய டோல் கட்டணம் அறிவிப்பு.! 50% வரை தள்ளுபடி.? - யாருக்கு தெரியுமா.?
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
LPG Cylinder Price: வீட்டிற்கே வந்த போர்..! நள்ளிரவில் அதிரடியாக உயர்ந்த கேஸ் சிலிண்டர் விலை - தாய்மார்கள் ஷாக்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
IND Vs NZ T20 WC Final: சூப்பரப்பு..! ராசி, நட்சத்திரம் பார்க்கும் பிசிசிஐ - ”பேட் லக்குன்னு” இந்திய அணி செய்த காரியம்
Embed widget