மேலும் அறிய

வாய்ப்பை நழுவ விடாதீர்கள் இளைஞர்களே! காத்திருக்கும் 500 -க்கும் மேற்பட்ட பணியிடங்கள்...!

மயிலாடுதுறையில் நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 500 -க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.

மயிலாடுதுறையில் நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;

வேலைவாய்ப்பு முகாம் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில், மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப் ஆகியோருடன் இணைந்து பிரம்மாண்டமான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் வருகின்ற 16.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மயிலாடுதுறையில் நடைபெறவுள்ளது.

India pakistan Tension: இந்தியா - பாகிஸ்தான் எல்லை எங்கெல்லாம் அமைந்துள்ளது? இத்தனை ஆயிரம் கி.மீட்டரா?

25 -க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 

இந்த வேலைவாய்ப்பு முகாமில், மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 500-க்கும் அதிகமான பணியிடங்களை நிரப்பத் தகுதியான இளைஞர்களைத் தேர்வு செய்யவுள்ளன.

இந்தியாவின் 'பழைய' நண்பன்.. நேரு போட்ட விதை.. பாகிஸ்தான் போரில் நம்மை காப்பாற்றிய ரஷியா

யாருக்கெல்லாம் இந்த முகாம் கலந்துகொள்ளலாம்..? 

  •  வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள்.

 

  • கல்வித் தகுதி: 5-ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை, டிப்ளமோ முடித்தவர்கள், ஐடிஐ படித்தவர்கள், பி.இ. போன்ற அனைத்து பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது திறமைக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெற முடியும்.

 

இந்த முகாமில் வேலைவாய்ப்பு மட்டுமல்ல, இன்னும் பல நன்மைகள்

 

  • உங்களுக்குத் தேவையான திறன் பயிற்சிகள் பற்றிய விவரங்களை இலவசமாகப் பெறலாம்.

 

  •  சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறவர்களுக்கு அதற்கான வங்கிக் கடன் வசதிகள் பற்றிய ஆலோசனைகளையும் தகவல்களையும் பெறலாம்.

 

  •  அயல்நாட்டில் வேலை செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.

 

  •  அரசு வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு போட்டித் தேர்வுகள் பற்றிய முக்கியமான தகவல்களும் ஆலோசனைகளும் இலவசமாக வழங்கப்படும்.

 

முகாமில் கலந்துகொள்ளும்போது மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டியவை:

  • முழுமையான சுய விவர அறிக்கை (Resume).

 

  • அனைத்து கல்விச் சான்றிதழ்களின் நகல்கள்.

 

  • ஆதார் அட்டையின் நகல்.

 

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

 

  • முன் அனுபவம் ஏதும் இருந்தால், அதற்கான சான்றிதழ்களின் நகல்கள்.

 

மேலும், இந்த முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள தனியார் நிறுவனங்களும், வேலை தேடும் இளைஞர்களும் தங்களது விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு, கீழ்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்: 04364-299790 / 94990-55904 மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் துறைகளில் வேலை தேடும் திறமையான இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

யானை முன்னே செல்ல, பச்சைக்காளி பவளக்காளி ஆட... மயிலாடுதுறையை ஸ்தம்பிக்க வைத்த 45-வது ஆண்டு பால்குட திருவிழா!
யானை முன்னே செல்ல, பச்சைக்காளி பவளக்காளி ஆட... மயிலாடுதுறையை ஸ்தம்பிக்க வைத்த 45-வது ஆண்டு பால்குட திருவிழா!
படித்துறை ஆஞ்சநேயர் கோவில் டூ பத்திரகாளி அம்மன் கோயில்: சீர்காழியில் ஸ்தம்பித்த முக்கிய வீதிகள்... என்ன காரணம்?
படித்துறை ஆஞ்சநேயர் கோவில் டூ பத்திரகாளி அம்மன் கோயில்: சீர்காழியில் ஸ்தம்பித்த முக்கிய வீதிகள்... என்ன காரணம்?
ஜூலை 31-க்குள் இதை செய்ய தவறவிடாதீர்கள்! பொதுமக்களுக்கு சீர்காழி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்..
ஜூலை 31-க்குள் இதை செய்ய தவறவிடாதீர்கள்! பொதுமக்களுக்கு சீர்காழி எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்..
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!
சீர்காழி புறவழிச்சாலையில் போகும் போது உஷார்! ஹெல்மெட் கொள்ளையர்கள் வெறிச்செயல்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
திமுகவின் முடிவை மாற்றிய அரசு.! தமிழ்நாடு தினம் கொண்டாட்டம் - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு
DMK BJP Alliance:
DMK BJP Alliance: "மோடியை விமர்சிக்க வேண்டாம்.." மு.க.ஸ்டாலின் தந்த அட்வைஸ்! அப்போ திமுக - பாஜக கூட்டணி உறுதியா?
TN Weather Update: சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை? எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்? தமிழக வானிலை அறிக்கை
"தொட்டுப் பார்க்க முடியாது.. நான் ரவுடிக்கு ரவுடி.." முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் சர்ச்சைப் பேச்சு
Rohit Sharma: ”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
”யாருங்க சொன்னா ரோகித் சர்மாக்கு லார்ட்ஸ் லாஸ்ட் மேட்ச்சுன்னு” - BCCI போட்டுடைத்த உண்மை
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Embed widget