மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (26.06.2025): மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்தடை - இதில் உங்க ஊர் இருக்கா பாருங்க?

Mayiladuthurai Power Shutdown 26.06.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (26.06.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழகத்தில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

சீர்காழி மின் கோட்ட செய்தி குறிப்பு 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களில் நாளைய 26.06.2025 வியாழக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 வரை மின் பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சீர்காழி மின்வாரிய கோட்டத்திலும் நாளை தினம் வைத்தீஸ்வரன்கோயில், ஆச்சாள்புரம், அரசூர் மற்றும் எடமணல் ஆகிய துணைமின் நிலையங்களில் மின்பாதைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மேற்கண்ட மின்பாதைகளில் இருந்து மின்விநியோகம் பெறும் கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சீர்காழி மின்வாரிய கோட்ட செயற் பொறியாளர்கள் மூர்த்தி வெளியியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்பட்டு இடங்கள் 

ஆச்சாள்புரம், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், அளக்குடி, தைக்கால், காட்டூர் , மகேந்திரபள்ளி, முதலைமேடு, கோதண்டபுரம், வெள்ளமணல், மாதானம், துளசேந்திரபுரம், கோபால சமுத்திரம், பழையார், தாண்டவன்குளம், புளியந்துறை, புதுப்பட்டினம், மடவாமேடு, தர்க்காஸ், அரசூர், புத்தூர், எருக்கூர், ஆனந்தகூத்தன், சோதியக்குடி, பொன்னங்காத்துப்படுகை, சிதம்பரநாதபுரம், மேலமாத்தூர், கீழமாத்தூர், ஓலையாம் புத்தூர், காப்பியக்குடி, மணளகரம், மாதிரவேளூர், வடரங்கம், அகணி,குன்னம் திருமுல்லைவாசல்,திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, திருக்கருக்காவூர், கூழையார், தொடுவாய் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோன்று தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட உதவி செயற் பொறியாளர் குத்தாலம் அருள்செல்வன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேக்கிரிமங்கலம் மற்றும் குத்தாலம் துணைமின் நிலையத்தில் நாளைய தினம் 26.06.2025 வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும், பழையகூடலூர், கொக்கூர், திருவாலங்காடு, திருவாடுதுறை, பேராவூர், குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரி மங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி, கீழவெளி, அகிய பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறுதலுக்கு உட்பட்டது 

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"இடம் ரெடி... மைதானம் எப்போது?" - மயிலாடுதுறை ஆட்சியரிடம் செம்பனார்கோவில் இளைஞர்கள் முன்வைத்த 'செக்'!
"எங்கள் வாழ்நாளைப் பள்ளிக்கே தந்துவிட்டோம்!" - அமைச்சரிடம் மனு அளித்து கதறிய பகுதிநேர ஆசிரியர்கள்!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
ஆடி மாத பிரதோஷம்: சீர்காழி ஆதி ஸ்ரீ நாகேஸ்வரமுடையார் திருக்கோயிலில் திரண்ட பக்தர்கள் கூட்டம்..!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!
நாகப்பட்டினம் இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க! அரசு போக்குவரத்துக் கழகத்தில் உதவித்தொகையுடன் 1 ஆண்டு பயிற்சி!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Nissan Tekton Analysis: நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
Embed widget