மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (07.02.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பவர் கட் எங்கே தெரியுமா..?

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை பிப்ரவரி 07 (சனிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தந்தப் பகுதி உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி, ரேணுகா, விஜயபாரதி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் பொருட்டு, மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:

மயிலாடுதுறை, பாலையூர், மேக்கிரிமங்கலம், மணக்குடி, அரசூர், ஆச்சாள்புரம் துணை மின் நிலையங்கள்

மயிலாடுதுறை மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு) விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை, பாலையூர், மணக்குடி, மேக்கிரிமங்கலம், அரசூர் , ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், நாளை (07.02.2026) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் மேற்கொள்ளும் இடங்கள்

அரசூர் மற்றும் ஆச்சாள்புரம் துணைமின்நிலையங்கள்

ஆச்சாள்புரம், மாங்கனம்பட்டு, தைக்கால், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், நாதல்படுகை, மகேந்திரப்பள்ளி, சரஸ்வதிவிளாகம், அளக்குடி, புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், தாண்டவன்குளம், மடவாமேடு, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர்

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்கள்

பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, மாந்தை, கங்காதரபுரம், தேரழுந்தூர், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனோரிராஜபுரம், மேக்கரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், திருவாலங்காடு, திருவாடுதுறை, பேராவூர்

மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்கள்

பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை சாலை, மகாதானத் தெரு, பெரிய கடைத் தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னன் பந்தல், ஏவிசி கல்லூரி, சேமங்கலம், ஆலவெலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனந்ததண்டவபுரம், மணக்குடி கீழிருப்பு, மாப்படுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "மின்கட்டமைப்புகளைப் பலப்படுத்தவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அவசியமானவை. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வானிலை மாற்றங்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் பராமரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், மின்தடை நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது," எனத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர மின்சாரப் பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget