மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (29.01.2026): மயிலாடுதுறை: இன்று மின் தடை! உங்க ஏரியா இருக்கா? தெரிஞ்சிக்கோங்க..!

Mayiladuthurai Power Shutdown 29.01.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (29.01.2026) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மணக்குடி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின் கோட்டத்திற்கு உட்பட்ட மணக்குடி, துணை மின் நிலையத்தில் 29.01.2026 இன்றைய தினம் வியாழக்கிழமை மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் உதவி செயற்பொறியாளர் ம.விஜயபாரதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பணிகளின் அவசியம்

மின் விநியோகக் கட்டமைப்பு சீராக இயங்குவதற்கும், எதிர்பாராத மின்தடைகளைத் தவிர்ப்பதற்கும் ஒவ்வொரு மாதமும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பணியின் போது, பழுதடைந்த மின் கம்பிகள் மாற்றுதல், மின்மாற்றிகளில் (Transformers) எண்ணெய் அளவை சரிபார்த்தல், மின் பாதைகளில் உரசிக்கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்றுதல் மற்றும் சேதமடைந்த இன்சுலேட்டர்களைப் புதுப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறும். இப்பணிகள் காரணமாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மணக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்படும்.

* சோழசக்கரநல்லூர்

* சேமங்கலம் 

* ஆலவேலி

* நத்தம் 

* வேப்பங்குளம்

 * சாவடி

 * உளுத்துக்குப்பை

 * மொழையூர்

 * ஆனதாண்டவபுரம்

 * மணக்குடி

 * கீழிருப்பு

 * மாப்படுகை

இந்த இடங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற மின் இணைப்புகளுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு வேண்டுகோள்

எட்டு மணி நேர மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகளான குடிநீர் சேமிப்பு மற்றும் மின்சாரம் சார்ந்த பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மின் மோட்டார்கள் மூலம் நீர் ஏற்றுபவர்கள் மற்றும் சிறு குறு தொழிலாளர்கள் காலையிலேயே பணிகளை முடித்துக்கொள்ள மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், நிர்வாகக் காரணங்களுக்காகவோ அல்லது காலநிலையிலோ மாற்றம் ஏற்பட்டால், இந்த மின் நிறுத்தத் தேதியில் மாற்றங்கள் இருக்கலாம் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு

இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி மின்வாரிய அலுவலகங்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இப்பராமரிப்பு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
கல்லூரி சேரப்போறீங்களா? முன்னாள் படைவீரர் குழந்தைகளே மிஸ் பண்ணிடாதீங்க.. ஆட்சியர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மயிலாடுதுறை: மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கதவுகள்! மாவட்ட ஆட்சியரகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - பின்னணி என்ன?
மயிலாடுதுறை: மக்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட கதவுகள்! மாவட்ட ஆட்சியரகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் - பின்னணி என்ன?
Mayiladuthurai Power Shutdown (12.05.2026) : இங்கெல்லாம் நாளை மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க..!
Mayiladuthurai Power Shutdown (12.05.2026) : இங்கெல்லாம் நாளை மின்தடை - இதுல உங்க ஊர் இருக்கா பாருங்க..!
"மயிலாடுதுறை மக்களே அலர்ட்! நாளை முதல் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம் - முழு விவரம்."
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
திருமா நிபந்தனையற்ற ஆதரவு! முதல்வராகிறார் விஜய் பதவியேற்பு வேலைகள் RESTART!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
TVK ADMK: கவலை வேண்டாம் CM விஜய்..! 30 MLA-க்களின் ஆதரவை இன்று அறிவிக்கும் அதிமுக - அமைச்சரவை இடம்?
CM Vijay: போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
போட்டியே இல்லை..! CM விஜய்க்கு சட்டசபையில் கிடைத்த முதல் வெற்றி - முக்கிய பதவிகளின் அதிகாரம் என்ன?
AIADMK Clash: இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
இரண்டாக உடைந்த அதிமுக; இபிஎஸ் இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்; அடுத்த நகர்வு என்ன.?
AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
CM Vijay: எல்லாரையும் பார்த்த விஜய் இபிஎஸ்-ஐ சந்திக்காதது ஏன்? இதுதான் காரணமோ!
US Iran War Netanyahu: “உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
“உள்ள புகுந்து எடுக்கணும்“; ட்ரம்ப் கூறியது என்ன.? ‘போர் முடியவில்லை‘ என எச்சரிக்கும் நெதன்யாகு.!
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
வறுமையில் வளர்ந்தாரா? சுத்தப்பொய் ! பரபரப்பை கிளப்பிய முதல்வர் விஜயின் ஸ்கூல் மேட்
Most Unsafe Cars: ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
ஐய்யோ, இந்த பிரபலமான குடும்ப கார்கள்ல பாதுகாப்பே இல்லையா.?! அதிர்ச்சியளிக்கும் NCAP மதிப்பீடுகள்
Embed widget