மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (18.06.2026) : மயிலாடுதுறை மக்களே மகிழ்ச்சி செய்தி! இன்று அறிவிக்கப்பட்ட மின் தடை திடீரென ரத்து!

Mayiladuthurai Power Shutdown 18.06.2026: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கொள்ளப்பட இருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்து.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்கு உட்பட்ட பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் ஆகிய முக்கிய துணைமின் நிலையங்களில் அவசர மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்றைய தினம் ஜூன் 18, 2026 (வியாழக்கிழமை)  இந்த துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பாலையூர் 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலைய உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன், தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் தடையற்ற மின்சாரத் தேவையை உறுதி செய்யும் பொருட்டு, ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் மின் கம்பங்கள், மின் மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்கள்) மற்றும் உயர் அழுத்த மின் பாதைகளில் உள்ள பழுதுகளை நீக்கும் பணிகள் வழக்கமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் இந்த மாதத்திற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மின் நிறுத்தம் செய்யப்படும் நேர விவரம்

தேதி: 18.06.2026 (வியாழக்கிழமை)

நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (சுமார் 8 மணி நேரம்)

பராமரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, நிர்ணயிக்கப்பட்ட மாலை 5.00 மணிக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் உடனடியாக மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என்றும், பணிகள் நீடிக்கும் பட்சத்தில் மின் விநியோகம் சீராக சற்று காலதாமதம் ஆகலாம் என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மின் பாதிப்புக்குள்ளாகும் கிராமங்கள் மற்றும் பகுதிகள்

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பின்வரும் கிராமங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சார விநியோகம் இருக்காது.

முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்கள்

* பாலையூர்

* பருத்திக்குடி

* காரனூர்

* நக்கம்பாடி

* மாந்தை

* கங்காதாரபுரம்

* தேரழந்தூர்

* கோமல்

* கள்ளிக்காடு

* பெரட்டக்குடி

* கந்தமங்கலம்

* வடமட்டம்

* காஞ்சிவாய்

* கோனேரிராஜபுரம்

* மேக்கிரிமங்கலம் 

* பழையகூடலூர் 

* கொக்கூர்

* திருவாலங்காடு 

* திருவாவடுதுறை

* பேராவூர்

இதர பகுதிகள்: மேற்கண்ட கிராமங்களைச் சுற்றியுள்ள அனைத்து சிறிய கிராமங்கள், விவசாயப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள்.

பொதுமக்களுக்கு மின் வாரியத்தின் முக்கிய வேண்டுகோள்

இந்த 8 மணி நேர மின் நிறுத்தத்தின் காரணமாக, அப்பகுதிகளில் உள்ள சிறு, குறு தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களுக்குத் தேவையான குடிநீர் தேவைகளை முன்னரே சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், மின்சார விநியோகம் இல்லாத நேரத்தில் மின் சாதனங்களை பாதுகாப்பாக கையாளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பாக, மின் வாரிய ஊழியர்கள் உயர் அழுத்த மின் பாதைகளில் நேரடியாக வேலை செய்வதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள இன்வெர்ட்டர் (Inverter) அல்லது ஜெனரேட்டர் (Generator) போன்ற சாதனங்களை மின்சார லைன்களுடன் மாற்றி இணைக்க வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

மயிலாடுதுறை கோட்ட மின் நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த மின் நிறுத்தத்திற்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு உதவி செயற் பொறியாளர் பொறிஞர். N. அருள்செல்வன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கனிவுடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மின் நிறுத்தம் வாபஸ்

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை (18.06.2026) திட்டமிடப்பட்டு இருந்த பாலையூர் & மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையம், மற்றும் சுற்று வட்டார பகுதி மாதாந்திர பராமரிப்பு பணி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
"காவிரி பொங்கி வரணும்!" - கண்ணீரும் பக்தியுமாக ஆடிப்பெருக்கை கொண்டாடிய மயிலாடுதுறை மக்கள்.
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
அனல் பறந்த தீக்குண்டம்... சிலிர்க்க வைத்த பக்தி! மாமாகுடி மாரியம்மன் கோயிலில் திரண்ட பக்தர்கள்!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget