மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (07.02.2026) :மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பவர் கட் எங்கே தெரியுமா..?

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி கோட்டங்களைச் சேர்ந்த பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, இன்றைய தினம் பிப்ரவரி 07 (சனிக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அந்தந்தப் பகுதி உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி, ரேணுகா, விஜயபாரதி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளும் பொருட்டு, மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள் குறித்த விரிவான விவரங்கள் பின்வருமாறு:

மயிலாடுதுறை, பாலையூர், மேக்கிரிமங்கலம், மணக்குடி, அரசூர், ஆச்சாள்புரம் துணை மின் நிலையங்கள்

மயிலாடுதுறை மாவட்ட உதவி செயற்பொறியாளர்கள் (இயக்குதல் மற்றும் பராமரிப்பு) விடுத்துள்ள அறிக்கையில், மயிலாடுதுறை, பாலையூர், மணக்குடி, மேக்கிரிமங்கலம், அரசூர் , ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று (07.02.2026) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்நிறுத்தம் மேற்கொள்ளும் இடங்கள்

அரசூர் மற்றும் ஆச்சாள்புரம் துணைமின்நிலையங்கள்

ஆச்சாள்புரம், மாங்கனம்பட்டு, தைக்கால், கொள்ளிடம், ஆணைக்காரன்சத்திரம், நல்லூர், நாதல்படுகை, மகேந்திரப்பள்ளி, சரஸ்வதிவிளாகம், அளக்குடி, புளியந்துறை, பழையார், புதுப்பட்டினம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், தாண்டவன்குளம், மடவாமேடு, புத்தூர், எருக்கூர், மாதிரிவேளூர், வடரங்கம், அகணி, குன்னம், அரசூர்

பாலையூர் மற்றும் மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையங்கள்

பாலையூர், பருத்திக்குடி, காரனூர், நக்கம்பாடி, மாந்தை, கங்காதரபுரம், தேரழுந்தூர், கோமல், கள்ளிக்காடு, பெரட்டக்குடி, கந்தமங்கலம், வடமட்டம், காஞ்சிவாய், கோனோரிராஜபுரம், மேக்கரிமங்கலம், பழையகூடலூர், கொக்கூர், திருவாலங்காடு, திருவாடுதுறை, பேராவூர்

மயிலாடுதுறை மற்றும் மணக்குடி துணை மின் நிலையங்கள்

பழைய SBI தெரு, அரசு மருத்துவமனை சாலை, மகாதானத் தெரு, பெரிய கடைத் தெரு, பூம்புகார் ரோடு, தரங்கை சாலை, தருமபுரம் மெயின் ரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மன்னன் பந்தல், ஏவிசி கல்லூரி, சேமங்கலம், ஆலவெலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொழையூர், ஆனந்ததண்டவபுரம், மணக்குடி கீழிருப்பு, மாப்படுகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

அதிகாரிகளின் முக்கிய அறிவிப்பு

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், "மின்கட்டமைப்புகளைப் பலப்படுத்தவும், தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் இந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள் அவசியமானவை. பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் மீண்டும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், வானிலை மாற்றங்கள் அல்லது தொழில்நுட்பக் காரணங்களால் பராமரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டால், மின்தடை நேரம் மாற்றத்திற்கு உட்பட்டது," எனத் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் இந்த மின்தடை அறிவிப்பைக் கருத்தில் கொண்டு, தங்களுக்குத் தேவையான குடிநீர் சேமிப்பு மற்றும் இதர மின்சாரப் பணிகளை முன்கூட்டியே முடித்துக்கொண்டு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"தமிழ்நாட்டுல காலே வைக்க முடியல, இதுல 2031-ல ஆட்சியா?" - அண்ணாமலையை வாரிச் சுருட்டிய எம்பி சுதா!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி... ஏன் தெரியுமா?
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரைக்கம்பத்தில் பறந்த தேசியக்கொடி... ஏன் தெரியுமா?
"எப்போது இடிந்து விழுமோ?" - மயிலாடுதுறையில் 20 குழந்தைகளின் உயிரோடு விளையாடும் அதிகாரிகள்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!
பெற்றோர்களே உஷார்! 64 வயது தாத்தாவால் 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்... மயிலாடுதுறையில் பகீர்!

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
ADMK TO TVK : விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
விஜய் கட்சியா? வேண்டாம்ப்பா சாமி ! ரூட்டை மாற்றும் அதிமுக MLA-க்கள்.! - ஷாக்கிங் பின்னணி
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
VCK Thirumavalavan : ’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
’பொதுவேட்பாளர் சீமான்’ அச்சத்தில் திருமாவளவன் ? காரணம் என்ன ?
Hyundai Upcoming SUV: மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
மிட்-சைஸ் எஸ்யுவி CNG பிரிவில் மிரட்டும் மாருதி - ஹுண்டாய் ரைவல் ஆன் - தி வே..! விலை
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்
Embed widget