மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (08.10.2025) : சீர்காழி தாலுக்காவில் பல்வேறு ஊர்களுக்கு இன்று மின் தடை! காரணம் என்ன? முக்கிய அறிவிப்பை வெளியீட்ட மின்வாரியம்

Mayiladuthurai Power Shutdown 08.10.2025: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இன்றைய தினம் புதன்கிழமை, 08.10.2025 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 வரை பல்வேறு இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது என தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சீர்காழி கோட்டம், இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவின் செயற்பொறியாளர் (பொறுப்பு), மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

எதற்காக மின்தடை?

சீர்காழி கோட்டத்தில் இயங்கி வரும் வைத்தீஸ்வரன்கோவில் 110/33/11 கி.வோ. துணை மின் நிலையம், அரசூர் 33/11 கி.வோ. துணை மின் நிலையம், மற்றும் எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதாக இந்த மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்கட்டமைப்பைப் பாதுகாக்கவும், சீரான மின் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் இந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் மிகவும் அவசியம் எனவும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை நேரம்

மின்தடை அமலில் இருக்கும் நாள் மற்றும் நேரம் பின்வருமாறு:

* நாள்: 08.10.2025 (புதன்கிழமை)

*நேரம்: காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை

சுமார் எட்டு மணி நேரம் மின்சாரம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்ட பகுதிகள்

வைத்தீஸ்வரன்கோவில், அரசூர், மற்றும் எடமணல் துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படும் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

1. வைத்தீஸ்வரன்கோவில் 110/33-11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * வைத்தீஸ்வரன்கோவில்

 * சீர்காழி முழுவதும்

 * புங்கனூர்

 * சட்டநாதபுரம்

 * மேலச்சாலை

 * கதிராமங்கலம்

 * ஆத்துக்குடி

 * திருப்புங்கூர்

 * தென்பாதி

 * பனமங்கலம்

 * கோவில்பத்து

 * கொள்ளிடம் முக்கூட்டு

 * விளந்திட சமுத்திரம்

 * புளிச்சகாடு

 * கற்பகம் நகர்

 * புதிய பேருந்து நிலையம்

 * பழைய பேருந்து நிலையம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

2.அரசூர் துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * புத்தூர்

 * எருக்கூர்

 * மாதிரிவேளுர்

 * வடரங்கம்

 * அகணி

 * குன்னம்

 * மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

3.எடமணல் 33/11 கி.வோ. துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகள்

 * எடமணல்

* திருமுல்லைவாசல் 

 * திட்டை

 * செம்மங்குடி

 மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

பொதுமக்கள் தங்களின் அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக்கொள்ளும் வகையில் இந்தத் தகவல் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.

கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது 

மின்நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், அன்றையதினம் மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதல்களுக்கு உட்பட்டது என்றும் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்தம் போது மேற்கொள்ளப்படும் பணிகள் 

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் பதிலடி! ரசிகர்கள் அதிர்ச்சி, அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் பதிலடி! ரசிகர்கள் அதிர்ச்சி, அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
Hyundai Venue: ஹுண்டாய் வென்யு Vs காம்பேக்ட் SUV-க்கள் - விலை, மைலேஜ், டிசைன் ஈடுகட்டுமா?  எகிறி அடிக்குமா?
Hyundai Venue: ஹுண்டாய் வென்யு Vs காம்பேக்ட் SUV-க்கள் - விலை, மைலேஜ், டிசைன் ஈடுகட்டுமா? எகிறி அடிக்குமா?
Hyundai Venue Diesel: டீசல் எடிஷனில் மாஸ் காட்டும் புதிய வென்யு? போட்டி எஸ்யுவிகளுக்கு டஃப்? முழு ஒப்பீடு
Hyundai Venue Diesel: டீசல் எடிஷனில் மாஸ் காட்டும் புதிய வென்யு? போட்டி எஸ்யுவிகளுக்கு டஃப்? முழு ஒப்பீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK
’’குழந்தைக்கு அப்பா நான் தான்! ஒத்துக்கொண்ட மாதம்பட்டி’’ ஜாய் க்ரிஷில்டா வழக்கில் ட்விஸ்ட்
பொன்முடிக்கு பதவி! இறங்கி வந்த கனிமொழி! ஸ்டாலின் போட்ட கண்டிஷன்
Costume designer பண மோசடி! EVP உரிமையாளர் பகீர் புகார்! பின்னணி என்ன?
ஓபிஎஸ் கூடாரம் காலி..திமுகவில் மனோஜ் பாண்டியன்!குஷியில் தென்மாவட்ட திமுக!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Indian Cricket Team: மண்ணள்ளிப்போடும் கம்பீர் & அகர்கர், அணியை சிதைக்கும் கில் - நாசமாய் போன ப்ளேயிங் லெவன்
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் பதிலடி! ரசிகர்கள் அதிர்ச்சி, அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
Tamil Thalaivas: தமிழ் தலைவாஸ் பயிற்சியாளர் குற்றச்சாட்டுக்கு நிர்வாகம் பதிலடி! ரசிகர்கள் அதிர்ச்சி, அடுத்த சீசனுக்கான திட்டம் என்ன?
Hyundai Venue: ஹுண்டாய் வென்யு Vs காம்பேக்ட் SUV-க்கள் - விலை, மைலேஜ், டிசைன் ஈடுகட்டுமா?  எகிறி அடிக்குமா?
Hyundai Venue: ஹுண்டாய் வென்யு Vs காம்பேக்ட் SUV-க்கள் - விலை, மைலேஜ், டிசைன் ஈடுகட்டுமா? எகிறி அடிக்குமா?
Hyundai Venue Diesel: டீசல் எடிஷனில் மாஸ் காட்டும் புதிய வென்யு? போட்டி எஸ்யுவிகளுக்கு டஃப்? முழு ஒப்பீடு
Hyundai Venue Diesel: டீசல் எடிஷனில் மாஸ் காட்டும் புதிய வென்யு? போட்டி எஸ்யுவிகளுக்கு டஃப்? முழு ஒப்பீடு
பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றம்! முக்கிய கல்வி அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு - முழு விவரம்!
பள்ளிக் கல்வித் துறையில் அதிரடி மாற்றம்! முக்கிய கல்வி அதிகாரிகள் இடமாற்றம், பதவி உயர்வு - முழு விவரம்!
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
Zohran Mamdani: ட்ரம்பை மதிக்காத நியூயார்க் மக்கள் - இந்திய வம்சாவளியை மேயராக்கி சம்பவம் - யார் இந்த ஜோரன் மம்தானி?
ADMK: என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
என்னையை எதிர்த்தால் செங்கோட்டையன் கதி தான்.! மாவட்ட செயலாளர்களை அலற விடப்போகும் எடப்பாடி பழனிசாமி
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: விஜய், எடப்பாடி ஆலோசனை, குறைந்த தங்கம் விலை, சென்னையில் புது ரூல் - தமிழகத்தில் இதுவரை
Embed widget