அபராதம் விதித்த அதிகாரிகள்: தற்கொலைக்கு முயன்ற ஊழியர் - நடந்தது என்ன?
சீர்காழி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தாளர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழி அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக பணியாற்றிவருபவர் ஆய்வின்போது அபராதம் விதித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு விஷம் அருந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி கடைமடை மாவட்டம்
காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் உரிய நேரத்தில் திறக்கப்படாதது, பயிர்களுக்கு தேவையான நேரத்தில் மழை இன்றி அறுவடை செய்யும் சமயத்தில் மழைப்பொழிவு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வரும் சூழல் என பல்வேறு மின்னல்களுக்கு இடையே இம் மாவட்ட விவசாயிகள் தங்களின் வாழ்வாதார காக்க விவசாயத்தை நம்பி செய்து வருகின்றனர்.
குறுவை சாகுபடி
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்தாண்டு மயிலாடுதுறை , தரங்கம்பாடி, சீர்காழி, குத்தாலம் ஆகிய மூன்று தாலுக்காகளில் குருவை மற்றும் தாளடி நெற்பயிர்கள் சுமார் ஒரு 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்தனர். அவைகள் அறுவடை செய்யப்பட்டு வரும் நிலையில் அவற்றை கொள்முதல் செய்ய மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.
பட்டியல் எழுத்தாளருக்கு ரூ.78 ஆயிரம் அபராதம்
இந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் 47 வயதான ஐயப்பன். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட அகணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தர கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி, உதவி தர ஆய்வாளர் கவிநிலவு ஆகியோர் அகணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரைபதத்தில் சுருங்கிய நெல்லாக இருப்பதாக கூறி பட்டியல் எழுத்தர் ஐயப்பனுக்கு 78 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
l
தற்கொலை முயற்சி
தொடர்ந்து அதிகாரிகள் சென்ற நிலையில் இதன் காரணமாக ஐயப்பன் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன் பிறகு அருகில் இருந்த பம்பு செட் அருகே மயங்கிய நிலையில் ஐயப்பன் கிடந்துள்ளார். அருகே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. இதனை கண்ட லோடுமேன்கள் மயங்கிய நிலையில் இருந்த ஐயப்பனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவல் அறிந்த மற்ற நெல் கொள்முதல் நிலைய எழுத்தர்கள், லோடுமேன்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக இதுகுறித்து சீர்காழி காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Suicidal Trigger Warning..
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)