(Source: ECI/ABP News/ABP Majha)
விபத்தில் இறந்தவர்களின் நினைவு தினத்தில்; விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்
சாலை பாதுகாப்பு விதிமுறையின் அவசியம் குறித்து மாணவர்கள் கிராமம் கிராமமாக சென்று மக்கள் கூடும் இடங்களில் சாலையை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்தி கைரேகையை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
விபத்தில் உயிரிழந்தவரின் நினைவாக கட்டப்பட்ட பள்ளியில் அவரது நினைவு தினத்தில் சாலை பாதுகாப்பு விதிமுறையின் அவசியம் குறித்து பள்ளி மாணவர்கள் கிராமம் கிராமமாக சென்று மக்கள் கூடும் இடங்களில் சாலையை பாதுகாப்பாக பயன்படுத்த வலியுறுத்தி கைரேகையை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தொழிலதிபர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள அரங்கக்குடியை சேர்ந்தவர் தொழிலதிபர் என்.எம்.எஸ் நேரு. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரின் நினைவாக அரங்கக்குடியில் என்.எம்.எஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தேசபற்றை உணர்த்தும் வகையில் மூவர்ணகொடியின் நிறத்தில் சீருடை அணிந்து வரும் இப்பள்ளி மாணவர்கள் விபத்தில் உயிரிழந்த என்.எம்.எஸ் நேருவின் நினைவு தினத்தை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாளாக கடைபிடித்து வருகின்றனர்.
Maharaja Box Office : இந்த ஆண்டின் அதிகவேக 50 கோடி வசூல்...மகாராஜா பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்ட நினைவு தினம்
அந்த வகையில் நேருவின் 9 -ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் என்.எம்.எஸ்.செல்வம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாலையை பொறுப்பாக பயன்படுத்துவோம் என்ற முழக்கத்தையும், சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்போம் என்று உறுதிமொழியேற்று, பாதுகாப்பாக பயணம் செய்வேம் என்ற வாசகத்துடன் கூடிய பதாகையில் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றொர்கள் கைரேகை வைத்தனர். தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த நேருவின் உருவ படத்திற்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர்.
Internatonal Yoga Day: எங்கு போனாலும் யோகாதான்! செல்ஃபியை பகிர்ந்து பெருமிதம் கொண்ட பிரதமர் மோடி
கிராமம் கிராமமாக சென்ற மாணவர்கள்
பின்னர் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வேனில் அரங்கக்குடி, வடகரை, கழனிவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்கள் கூடும் இடங்களில் சாலைவிதிகளை கடைப்பிடித்து, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள பொதுமக்களை வலியுறுத்தி பாதுகாப்பாக பயணம் செய்வேம் என்ற பலகையில் பொதுமக்கள் மக்களிடம் கைவிரல் ரேகை பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து வெயில் மற்றும் மழையில் குறுதொழில் வியாபாரம் செய்பவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் நிழல்தரும் பிரமாண்ட கொடையை பள்ளி தாளாளர் எம்.எஸ்.செல்வம் வழங்கினார். சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கைரேகை பெற்ற மாணவர்களின் செயல் வரவேற்பை பெற்றது.
S.M.Backer : மூத்த பத்திரிகையாளரும் மக்கள் உரிமைகளுக்காக போராடியவருமான எஸ்.எம்.பாக்கர் காலமானார்..!