சாதித்த காரைக்கால் மருத்துவர்கள் - டெல்டாவில் முதல் முறையாக 70 வயது மூதாட்டிக்கு மூளையில் அறுவை சிகிச்சை
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக மூளையில் ரத்த உரைதல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த 70 வயது மூதாட்டிக்கு காரைக்கால் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றியுள்ளனர்.
70 வயது மூதாட்டிக்கு மூளையில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி ரேவதி. இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பக்க வாதம் ஏற்பட்டு வலது கை, கால் செயலிழந்து, வாய் குளறு ஏற்ப்பட்டது. இதனை அடுத்து குடும்பத்தினர் மூதாட்டியை ஆபத்தான நிலையில் காரைக்கால் சேத்திலால் நகரில் உள்ள ஜிஎல் என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மூதாட்டி பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் இரு பக்கமும் ரத்தம் உறைந்திருப்பது கண்டுபிடித்தனர். இதனையடுத்து நரம்பியல் மருத்துவர் செந்தில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மூதாட்டி ரேவதிக்கு தற்போதைய காலத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பான பக்கவாதத்திற்கான மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சை முறையை பயன்படத்தி நுண்துளையீட்டு, பெரிய ரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தும் ரத்த கட்டிகள் கருவிகளைப் பயன்படுத்தி அகற்றப்பட்டி, ரத்த ஓட்டம் மீட்டெடுத்து, ரத்த ஓட்டம் இல்லாமல் இறக்கும் அபாயத்தில் இருந்த மூளை திசுக்களைக் இது காப்பாற்றியுள்ளனர்.
செய்தியாளர்களிடம் மருத்துவர் சொன்ன தகவல்
அதனைத் தொடர்ந்து மூதாட்டி ரேவதி தற்போது ஆரோக்கியமுடன் இருந்து வருகிறார். இதுகுறித்து மருத்துவமனை மேலாண் இயக்குநர் மருத்துவர் சேதுராஜா செய்தியாளரிடம் தெரிவிக்கையில், மூதாட்டி ரேவதி சுயநினைவின்றி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், மருத்துவக் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து மூதாட்டி இயல்பு நிலைக்கு திரும்பி மிகவும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாகவும், இது போன்ற அறுவை சிகிச்சை டெல்டா மாவட்டங்களிலே காரைக்காலில் முதல் முறையாக வெற்றிகரமாக நடைபெற்ற சிகிச்சை என தெரிவித்தார். சரியான நேரத்தில் மெக்கானிக்கல் த்ரோம்பெக்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டால் ரத்த நாளத்தில் உள்ள ரத்தக் கட்டிகளை விரைவாகவும் திறம்படவும் அகற்றலாம். இந்த சிகிச்சை முறை, நோயாளிகள் விரைந்து குணமடையவும், வழக்கமான உடல் செயல்பாடுகளை மீட்டெடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
பக்கவாதம் நோய் குறித்து ஓர் பார்வை
பக்கவாதம் என்பது மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் செல்லாமல் இருப்பதால் ஏற்படும் ஒருவித நோய் ஆகும். உலக அளவில் இறப்பு மற்றும் இயலாமைக்கு 3வது காரணமாக பக்கவாத நோய் உள்ளது. பக்கவாத நோயில் இருந்து தப்பிப் பிழைத்த மூன்றில் ஒரு பங்கு பேர் நிரந்தர இயலாமைக்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் பல நாடுகளில் உள்ளதைப் போலவே, இந்தியாவிலும் பக்கவாத நோய் குறிப்பிடத்தக்க சுகாதார கவலையாக உள்ளது. இது எல்லா வயதினரையும் பாதிப்பதோடு, வயதுக்கு ஏற்ப ஆபத்தும் அதிக அளவில் உள்ளது. சமீப காலமாக வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் வயதானவர்களின் அதிக மக்கள் தொகை காரணமாக இந்த நோய் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை காரணமாக தொற்று நோய் அபாயத்துடன், பக்கவாத பாதிப்பும் அதிக அளவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 18 லட்சம் பேர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
தடுக்க வழிமுறைகள்
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, புகைபிடிப்பதைத் தவிர்த்து, வழக்கமான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம். பக்கவாதம் வராமல் தடுக்கலாம். பக்கவாதத்தில் இஸ்கிமிக் மற்றும் ஹெமோர்ராஜிக் என்னும் இரண்டு வகை உள்ளது. இஸ்கிமிக் பக்கவாதம் என்பது மூளையில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் ஓட்டம் இல்லாமல் உறைவதால் ஏற்படுகிறது. மற்றொரு ஹெமோர்ராஜிக் பக்கவாதம் என்பது மூளையில் உள்ள ரத்த நாளங்களில் கசிவு காரணமாக உண்டாகிறது. பக்கவாத நோயைப் பொறுத்தவரை 80 முதல் 85 சதவீதம் பேருக்கு இஸ்கிமிக் வகை பக்கவாதமே ஏற்கிறது. பெரிய ரத்த நாளங்கள் அல்லது சிறிய ரத்த நாளங்கள் அடைப்பு காரணமாக பக்கவாதம் வருகிறது.
இஸ்கிமிக் பக்கவாதத்தைப் பொறுத்தவரை 3–ல் ஒருவருக்கு மூளையில் உள்ள பெரிய ரத்த நாளங்களில் அடைப்பு (LVO) காரணமாக ஏற்படுகிறது. சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு காரணமாக ஏற்படும் பக்கவாதத்தைவிட பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பால் வரும் பக்கவாதம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த பக்கவாதம் பொதுவாக இதயத்தில் இருந்து ஒரு ரத்த உறைவு இடம் பெயர்வதால் மூளையில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது அல்லது 'கொழுப்பு' குவிப்பால் மூளையின் ரத்த நாளத்தில் ரத்தம் உறைதல் ஏற்படுகிறது. மூளையின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பிறகு ஒரு நொடிக்கு சுமார் 30000 நியூரான்கள் இறக்கின்றன. பக்கவாதம் போன்ற நோய் அறிகுறி தென்பட்டவுடன் நோயாளிகள் உடனடியாக அருகில் உள்ள "ஸ்ட்ரோக் ரெடி சென்டருக்கு" முடிந்தவரை வேகமாக செல்வது நல்லது.
பக்கவததின் அறிகுறிகள்
பக்கவததின் அறிகுறிகளை BE FAST என எளிதில் நினைவில் கொள்ள வேண்டும்.
Balance: உடற்சமநிலை இழத்தல்
Eyes : ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல்
Face : முகம் ஒரு புறமாக இழுத்து கொள்ளுதல்
Arm : ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயல்பட இயலாதது
Speech : பேச்சில் குளறுதல்
Time : சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாடுதல்