மேலும் அறிய

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

காவிரிப்பூம்பட்டினம் அரசு பள்ளியில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா ஆய்வு மேற்கொண்டு, அப்பள்ளி குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்துள்ளார்.

காவிரிப்பூம்பட்டினம் அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதா பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாடி அவர்களுக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தார்.

கைது செய்யப்பட்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் 

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு, 4 பைபர் படகுகளில் கடந்த மாதம் செப்டம்பர் 20 -ம் தேதி 43 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். இவர்கள் மறுநாள் கரை திரும்ப வேண்டிய நிலை அவர்கள் கரை திரும்பததால் மீனவர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்தது.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

37 மீனவர்கள் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்வளத்துறை பணி மேற்பார்வையாளர்கள் தீனதயாளன் மற்றும் வாசன் ஆகியோர், இதுகுறித்து பூம்புகார் துறைமுகத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு விசைப்படகு மற்றும் இரண்டு பைபர் படகுகளில் இருந்த, மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 21 மீனவர்கள், சின்னமேடு கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள், சந்திரபாடி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உள்ளிட்ட 37 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

மயிலாடுதுறை எம்பியிடம் மீனவர்கள் கோரிக்கை 

இந்நிலையில், மீனவர்களின் உறவினர்கள் அனைத்து மீனவர்கள் மற்றும் படகுகளையும் பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 மீனவர்கள் உள்பட இலங்கை சிறையில் உள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யக்கோரி இலங்கையில் புதிதாக அதிபர் பதவியேற்றுள்ள அனுரா குமாரா திசநாயகவுக்கு மயிலாடுதுறை அவர் கடிதம் ஒன்றை எழுதினார்.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

இலங்கை அதிபருக்கு கடிதம் 

அந்த கடிதத்தில் இலங்கையின் புதிய அதிபருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்த எம்பி.சுதா மேலும் கடித்தில் கூறியதாவது: மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பூம்புகார், சந்திராபாடி, வானகிரி, சின்னமேடு, மடத்துக்குப்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். இவர்கள் படகு கவிழ்ந்ததில் துரதிர்ஷ்டவசமாக கடலில் மூழ்கிய இலங்கை மீனவ சகோதரரின் உடலை மீட்டெடுக்க இலங்கை கடற்படைக்கு உதவியவர்கள்.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

இச்சூழலில் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் இருதரப்பு உடன்படிக்கைகளில் உள்ள ஷரத்துகளை மீறி, இலங்கை கடற்படை ஆபத்தில் உதவிய எங்கள் மீனவர்கள் மீது சொல்ல இயலாத அட்டூழியங்களை கட்டவிழ்த்துவிட்டு, சட்டவிரோதமாக கைது செய்துள்ளது. எனவே, அந்த மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இதேபோல், இலங்கை சிறையில் வாடும் மற்ற இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் அவர்களின் அனைத்து படகுகளையும் கூடிய விரைவில் பயன்பாட்டு நிலையில் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்திருந்தார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 

இந்த நிலையில், அக்டோபர் கடந்த 4-ஆம் தேதி மீனவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பல்வேறு நடைமுறைகளுக்குப் பின்னர் திங்கள்கிழமை நள்ளிரவு விமான மூலம் அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்துக்கு வந்தனர். தொடர்ந்து அவர்களை விமான நிலையத்தில் ஆர். சுதா எம்.பி. சந்தித்து சால்வை அணிவித்து வரவேற்றார்.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

எம்பிக்கு தடபுடலாக விருந்து 

இந்த சூழலில் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நாள் முதல் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதாவிற்கு இலங்கையில் இருந்து ஊர் திரும்பிய மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் பூம்புகார் மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் விருந்து வைத்து நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். இதற்காக மீன், நண்டு, இரால், கணவாய் என தடபுடலாக கடல் உணவு வகைகளை சமைத்து அவர்கள் பறிமாற மீனவர்களுடன் தரையில் அமர்ந்து அவர் உணவருந்தினார்.

குழந்தைகளின் முத்த மழையில் நனைந்த மயிலாடுதுறை எம்பி - பூம்புகார் அரசு பள்ளியில் சுவாரஸ்யம்...!

பள்ளியில் நடந்த சுவாரஸ்யம்

தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தீடீர் ஆய்வு மேற்கொண்டு, அப்பள்ளி மாணவர்களுடன் தரையில் அமர்ந்து அவர்களின் பாடல், பேச்சு உள்ளிட்ட திறமைகளை கேட்டு வியந்தார். தொடர்ந்து அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் முன் மாணவர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுக்க, பள்ளி குழந்தைகளும் பதிலுக்கு பறக்கும் முத்தம் கொடுத்து எம்பி சுதாவை முத்த மழையில் நனைய செய்தனர். முன்னதாக இப்பள்ளி 15 மாணவர்கள் படித்த நிலையில், ஊர்மக்கள் ஒத்துழைப்புடன் பள்ளி சிறப்பாக நடைபெற்றுவருவதை அடுத்து தற்போது 500 மாணவர்கள் படித்து வருவதாகவும், ஆனால் இப்பள்ளியில் போதுமான கட்டடம் மட்டும் கழிவறை வசதிகள் இல்லை எனவும் அதனை அரசு செய்திதர வேண்டும் என்றும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் செய்து தர வேண்டும் என ஊர் பஞ்சாயத்தார்கள் கோரிக்கை வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
தீட்சிதர்கள் என்ன கடவுளா? காசு கொடுக்கலன்னா விபூதி கூட கிடைக்காது: கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம்
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
போடு வெடிய; தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Breaking News LIVE 19th OCT 2024: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஜாமின் மனு தள்ளுபடி செய்த சென்னை அமர்வு நீதிமன்றம்!
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
Largest Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடு எது? லிஸ்டில் இந்தியாவிற்கு இடம் உண்டா?
SK about Ajith:
SK about Ajith: "வெல்கம் டூ பிக் லீக்" சிவகார்த்திகேயனை வரவேற்ற அஜித் - காரணம் என்ன?
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டமா? கற்பனை உலகில் இருக்கும் ஆளுநர்: ப.சிதம்பரம் விமர்சனம்!
27 மாநிலங்களில் மும்மொழித் திட்டமா? கற்பனை உலகில் இருக்கும் ஆளுநர்: ப.சிதம்பரம் விமர்சனம்!
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
மாமல்லபுரத்தை உலுக்கிய சம்பவம்.. வெடித்தது வெடிகுண்டா ? சிக்கிய முக்கிய ஆதாரங்கள் ?
Disney+ Hotstar JIO: ரசிகர்கள் ஹாப்பி..! ஜியோ செயலிக்கு டாடா, ஐபிஎல் இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே - அம்பானி திட்டம்
Disney+ Hotstar JIO: ரசிகர்கள் ஹாப்பி..! ஜியோ செயலிக்கு டாடா, ஐபிஎல் இனி டிஸ்னி ஹாட் ஸ்டாரில் மட்டுமே - அம்பானி திட்டம்
Embed widget