மேலும் அறிய

Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தை குறித்து வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழாவது நாளாக மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்.

கடந்த 00.04.2024 அன்று மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுத்தையை பிடிக்க எடுக்கப்பட்ட வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக வெவ்வேறு புலிகள் காப்பகங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட சிறுத்தை பிடிக்கும் கூண்டுகள் 7 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தையின் நடமாட்டம் கண்காணிக்க தானியங்கி சென்சார் கேமராகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

நீர்நிலைகளில் வழியாக பயணம் செய்யும் சிறுத்தை 

கடந்த 4 நாட்களாக சிறுத்தையின் நடமாட்டம் குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் சிறுத்தையானது ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் வழிகளை அதிகமாக பயன்படுத்துவதாக அறியமுடிகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக மயிலாடுதுறை சுற்றுப்பகுதியில் உள்ள மஞ்சலாறு, மகிமலையாறு மற்றும் பழைய காவேரி ஆறு ஆகிய ஆறுகளில் சிறுத்தையின் நடமாட்டத்திற்கான அறிகுறிகள் காணப்பட்டுள்ளது‌. அதனை அடுத்து சிறுத்தையின் நடமாட்டத்தின் அடிப்படையில் மஞ்சலாறு, மறையூர் பகுதியில் 3 கூண்டுகளும் ஆரோக்கியநாத பகுதியல் கூண்டும் மகிமலையாறு பகுதியில் 2 கூண்டுகளும் ரயில்வே ஜங்சன் அருகில் காவேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் ஒரு கூண்டும் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

சிறுத்தையை தொடர்ந்து இடமாறும் கேமராக்கள்

மேலும், ஏற்கனவே 15 தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் 30 தானியங்கி கேமராக்கள் வரவழைக்கப்பட்டு அவற்றை சரியான இடங்களில் பொருத்தும் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய மறையூர், சித்தர்காடு, ஊர்க்குடி போன்ற பல கிராமங்களில் குழுக்களாக சென்று பொதுமக்களிடம் தகவல் குறித்து விபரங்கள் சேகரித்தும் ஆங்காங்கே வீடுகளிலும் கடைகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும் வரப்பட்டுள்ளது. 


Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

நாய்களின் உதவி

மேலும், உள்ளூரில் உள்ள நாட்டு வகை நாய்கள் வைத்திருப்பவரின் உதவியுடன் அந்த நாட்டுவகை நாய்களை கொண்டு புதர் பகுதிகளிலும், ஓடை பகுதிகளிலும் சிறுத்தை நடமாட்டத்தை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தையின் எச்சம்

இதனிடையில் மயிலாடுதுறை ரயில்வே ஜங்சன் அருகில் உள்ள காவேரி ஆற்று பாலத்தின் அருகில் சிறுத்தையின் எச்சம் கிடைக்கப்பெற்றது. அதனை, ஆய்வு செய்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சிறுத்தை உட்கொண்ட இரை தொடர்பாகவும், சிறுத்தையின் அடையாளம் குறித்தான சோதனைக்காகவும் சென்னை வண்டலூரில் உள்ள உயர் தொழில்நுட்ப வனஉயிரின மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டரில் சிறுத்தை நடமாட்டம்

இந்நிலையில் சிறுத்தை நேற்று மயிலாடுதுறை நகரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவு பயணித்து குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் கிராமத்தில் சுற்றி திரிந்ததாக அப்பகுதியை சேர்ந்த மாசிலாமணி என்பவர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து நேற்று அங்கு முகாமிட்ட வனத்துறையினர் 15 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தியும், ஆற்று ஓரங்களில் கூண்டுகள் அமைத்தும் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார். இந்த சூழலில் இன்று காலை வனத்துறை வந்து பார்த்தபோது  கூண்டுகளில் சிறுத்தை சிக்கவில்லை. மேலும் தானியங்கி கண்காணிப்பு கேமராவை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில் அதில் சிறுத்தையின் நடமாட்டம் தென்படவில்லை.


Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

அதே வேளையில் காஞ்சிவாய் கிராமத்தை அடுத்த பேராவூர் ஊராட்சியில் நாகராஜ் மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் சிறுத்தையை நேற்று இரவு பார்த்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மசினகுடியில் டி23 புலியை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் மற்றும் காலன் ஆகியோர் காஞ்சிவாய் ஊராட்சியை அடுத்த பேராவூர் ஊராட்சியில் சிறுத்தையின் கால் தடம் தென்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் ஆனால் அவ்வாறு எந்த கால்தடமும் அங்கு பதியவில்லை. மேற்கண்ட தகவல் மற்றும் கடந்த சில தினங்களாக சேகரித்த தகவல்கள் அடிப்படையில் காவேரி, பழைய காவேரி மற்றும் மஞ்சலாறு உட்பட்ட பகுதிகளின் நீர்வழிப் புதர்களிலேயே அச்சிறுத்தை இருக்கலாம் என்று அறியமுடிகிறது. அதற்கேற்றவாறு, கண்காணிப்பு குழுக்கள் தணிக்கை மேற்கொள்வதற்கும்,கூண்டுகளை இடமாற்றம் செய்து வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


Mayiladuthurai Leopard: சிறுத்தை பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை - போலீஸ் எச்சரிக்கை

பரவும் வதந்திகள் 

இந்நிலையில் சிறுத்தையை பற்றி  பொய்யான வதந்திகளை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலை தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்பவேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வெள்ளம் வந்தாலும், புயல் அடித்தாலும் கவலை வேண்டாம்: களமிறங்குகிறது மயிலாடுதுறை மீட்புப் படை! 
வெள்ளம் வந்தாலும், புயல் அடித்தாலும் கவலை வேண்டாம்: களமிறங்குகிறது மயிலாடுதுறை மீட்புப் படை! 
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
தூக்கத்தை தொலைத்த ரவுடிகள்! மயிலாடுதுறை போலீசாரின் ‘அதிரடி வேட்டை..!  
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
புத்தகங்கள் நனையாமல் இருக்க மழைநீரோடு போராட்டம்.. 10-ஆம் வகுப்பில் 473 மதிப்பெண் அள்ளிய அபர்ணா!
"அன்று சாத்தியமில்லை என்ற திமுக, அதிமுக.. இன்று வாயடைத்து நிற்கிறது!"- வெளுத்து வாங்கிய விசிக பாலாஜி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
Trichy Student: ”மூக்கு எலும்பில் பிரச்னை” திருச்சி மாணவி மரணம், ஆப்ரேஷனில் நடந்தது என்ன? அமைச்சர் ரமேஷ் விளக்கம்
TN Govt Power Cut: நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
நள்ளிரவில் மின்வெட்டு ஏன்? 10 காரணங்களை அடுக்கிய மின்சார வாரியம் - தவெக அரசு விளக்கம்
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
திருச்சி மருத்துவக் கல்லூரி நர்சிங் மாணவி பலி; உயர்மட்ட குழு அமைப்பு- விசாரணைக்கு உத்தரவு
Vijay vs Eps : வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாக செயல்படுங்க.! விஜய் அரசை இறங்கி அடிக்கும் இபிஎஸ்
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
CV Shanmugam: அய்யய்யோ.. அவசரப்பட்டுட்டோமோ? கப்சிப்பான சிவி சண்முகம்! அடுத்து என்ன செய்யப்போகிறார்?
TVK VIJAY: ”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
”மாடர்ன் சங்கான விசில்?” மின்வெட்டு, பெண்கள் பாதுகாப்பு, எக்ஸ்ட்ரா ரூ.20? - CM விஜய் ஆக்‌ஷன் எங்கே?
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
திருச்சி அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் நர்சிங் மாணவி பலி? உறவினர்கள் சாலை மறியல்!
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு... அவதிப்படும் மக்கள்.. அதிகாரிகள் அலட்சிய பதில்! நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு?
Embed widget