மேலும் அறிய

சாகுபடி இலக்கை எட்ட ரெடியான மயிலாடுதுறை! விவசாயிகளுக்கு ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடுத்த முக்கிய அப்டேட்!

மயிலாடுதுறையில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் மேட்டூர் அணை நீர் இருப்பு, குறுவை சாகுபடி இலக்குகள் மற்றும் உரங்கள் இருப்பு குறித்த முக்கிய விவரங்களை ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வேளாண் உற்பத்தியை பெருக்கவும் திட்டமிடப்பட்ட மாதாந்திர விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமை தாங்கி, விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்ததுடன், நடப்பு ஆண்டின் வேளாண் பணிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மழைப்பொழிவு மற்றும் மேட்டூர் அணை நீர் இருப்பு விவரம்

கூட்டத்தில் மாவட்டத்தின் நீர் ஆதாரம் மற்றும் மழைப்பொழிவு குறித்து ஆட்சியர் விவரித்தார். மயிலாடுதுறை மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 1332.20 மி.மீ. ஆகும். நடப்பு 2026 ஆம் ஆண்டு மே மாதம் இன்று வரை மாவட்டத்தில் 127.57 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

டெல்டா பாசனத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 78.81 அடியாக (40,781 மில்லியன் கன அடி) உள்ளது. அணைக்கு வரும் நீர் வரத்து விநாடிக்கு 1,709 கன அடியாகவும், பாசனத்திற்காக அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஒரு விநாடிக்கு 1,003 கன அடியாகவும் உள்ளது என்று நீர் இருப்பு குறித்த புள்ளிவிவரங்களை ஆட்சியர் சமர்ப்பித்தார்.

மயிலாடுதுறை மாவட்ட சாகுபடி பரப்பளவு

மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒட்டுமொத்த சாகுபடி பரப்பு மற்றும் வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது:

* நிகர சாகுபடி பரப்பு: 73,184.28 எக்டர்

* மொத்த சாகுபடி பரப்பு: 1,69,018.65 எக்டர்

வேளாண் பயிர் சாகுபடி விழுக்காடு: மாவட்டத்தின் மொத்த பரப்பில் வேளாண் சாகுபடி பயிர் பரப்பு மட்டும் 63% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல் சாகுபடி இலக்குகள் மற்றும் தற்போதைய நிலவரம்

நடப்பு 2026-27 ஆம் நிதியாண்டில் நெல் சாகுபடியை தீவிரப்படுத்த இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

1. குறுவை நெல் சாகுபடி: நடப்பு குறுவைப் பருவத்திற்கு 38,880 எக்டர் சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இதுவரை 12,046 எக்டர் பரப்பளவில் (31%) குறுவை சாகுபடி பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

2. சம்பா / தாளடி பருவம்: வரவிருக்கும் சம்பா மற்றும் தாளடி பருவ நெல் சாகுபடிக்காக 68,730 எக்டர் பரப்பளவு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. கோடை நெல் சாகுபடி: இப்பருவத்திற்காக 90 எக்டர் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நெல் சாகுபடி

2026 ஆம் ஆண்டிற்கு மாவட்டத்தின் மொத்த நெல் சாகுபடி இலக்காக 1,07,700 எக்டர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை 12,046 எக்டர் (11%) சாகுபடி பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய இலக்குகளை உரிய காலத்திற்குள் எட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதர பயிர்கள் சாகுபடி மற்றும் நெல் தரிசு பயிர்கள்

நெல் சாகுபடி மட்டுமின்றி, மாற்றுப் பயிர்கள் மற்றும் சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கவும் விரிவான இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன;

* சிறுதானியப் பயிர்கள்: 65 எக்டர் சாகுபடி பரப்பு.

* பயறு வகைப் பயிர்கள்: 51,250 எக்டர் சாகுபடி இலக்கு.

* கரும்பு பயிர்: 530 எக்டர் சாகுபடி பரப்பு இலக்கு.

* எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருத்தி: எண்ணெய் வித்துப் பயிர்களுக்கு 2,120 எக்டர்

* பருத்தி பயிருக்கு 6,545 எக்டரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு: இந்த எண்ணெய் வித்து மற்றும் பருத்தி பயிர்கள் அனைத்தும் முழுமையாக நெல் அறுவடைக்கு பிந்தைய "நெல் தரிசு பயிராக" எதிர்வரும் மார்ச் மாதத்தில் பயிரிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 1,68,210 எக்டர் சாகுபடி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் தொய்வின்றி நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விதை மற்றும் உரங்கள் இருப்பு விபரம்

விவசாயிகளுக்குத் தேவையான வேளாண் உள்ளீடுகள் தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய கூட்டுறவு மற்றும் வேளாண் துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

நெல் விதைகள்: நடப்பு குறுவைப் பருவத்திற்கு தேவையான 380 மெட்ரிக் டன் தரமான நெல் விதைகள் மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தாராளமாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இரசாயன உரங்கள் (நவம்பர் மாதத் தேவைக்கான இருப்பு)

* யூரியா – 2,222 மெட்ரிக் டன்

* டி.ஏ.பி (DAP) – 294.59 மெட்ரிக் டன்

* பொட்டாஷ் – 398.87 மெட்ரிக் டன்

* கலப்பு உரம் – 1,085.77 மெட்ரிக் டன்

* சூப்பர் பாஸ்பேட் – 224.80 மெட்ரிக் டன்

தற்போது மாவட்டத்தில் கூடுதலாக ஒட்டுமொத்தமாக 4,226.03 மெட்ரிக் டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார். உரங்களை எக்காரணம் கொண்டும் கூடுதல் விலைக்கு விற்கக் கூடாது என்றும், பதுக்கலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
எமனை வென்ற திருக்கடையூரில் சிலிர்க்க வைத்த ஆன்மீக வைபவம்! என்ன தெரியுமா..?
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பெண்களுக்குச் சூப்பர் வாய்ப்பு! அரசு நலத்திட்டங்களைப் பெற ஆன்லைனில் உடனே பதிவு செய்யுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget