மேலும் அறிய

நேருக்கு நேர் மோத வந்த லாரி.. வயலில் பேருந்தை இறக்கி பல உயிர்களைக் காத்த டிரைவர்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் புறவழிச்சாலை பணிக்காக வந்த லாரி மீது மோதாமல் இருக்க, அரசு பேருந்தை வயல்வெளியில் இறக்கி ஓட்டுநர் சாமர்த்தியமாகச் செயல்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

மயிலாடுதுறை:  மயிலாடுதுறையில் இன்று காலை அரசு பேருந்தும், மணல் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில், பேருந்து ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. பேருந்தை லாவகமாக வயல்வெளியில் இறக்கிய ஓட்டுநர் உட்பட 4 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நடந்தது என்ன?

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 7A எண் கொண்ட அரசு நகரப் பேருந்து சேத்தூர் நோக்கிப் புறப்பட்டது. இந்தப் பேருந்து ஆனந்ததாண்டவபுரம் சாலையில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில், அப்பகுதியில் புதிய புறவழிச்சாலை (Bye-pass Road) அமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏராளமான கனரக வாகனங்கள் அப்பகுதியில் மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச் சென்ற வண்ணம் உள்ளன. சாலை மிகவும் குறுகலாக இருந்த நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென பேருந்துக்கு குறுக்கே வந்துள்ளது.

ஓட்டுநரின் துரித செயல்பாடு

எதிரே வந்த லாரி பேருந்தின் மீது நேரடியாக மோதுவதை உணர்ந்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் (38) நொடிப் பொழுதில் முடிவெடுத்து லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறம் திருப்பினார். சாலைக்கு அருகில் இருந்த பள்ளமான வயல்வெளி நிலத்திற்குள் பேருந்தை அவர் லாவகமாக இறக்கினார். நேருக்கு நேர் மோதியிருந்தால் பேருந்து அப்பளம் போல நொறுங்கியிருக்கும். இருப்பினும், பேருந்தை திருப்பும் போது லாரியின் மீது உரசியதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி சுக்குநூறாக உடைந்து சிதறியுள்ளது.

காயமடைந்தவர்கள் விபரம்

இந்த விபத்தில் பேருந்தின் முன் பகுதியில் இருந்தவர்கள் கண்ணாடித் துகள்கள் பட்டதாலும், பேருந்து வயலில் இறங்கிய அதிர்வினாலும் காயமடைந்தனர்.  சிலம்பரசன் 38 அரசு பேருந்து ஓட்டுநர், பயணிகள் லலிதா (53), ராஜலட்சுமி (55), அஞ்சம்மாள் (57) உள்ளிட்டோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உடனடியாக ஓடிவந்து காயமடைந்தவர்களை மீட்டு, அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிருக்கு ஆபத்தான காயம் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பணிகள்

புறவழிச்சாலை பணிகளுக்காக வந்த லாரியால் விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் நிலவிய பதற்றமான சூழலைத் தொடர்ந்து புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் குறுகிய சாலைகளில் அதிவேகமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ இயக்கப்படுவதே விபத்துக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

போலீசார் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மயிலாடுதுறை போலீசார், விபத்துக்குள்ளான பேருந்து மற்றும் லாரியைப் பார்வையிட்டனர். விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், லாரி ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது சாலைக் குறுகலாக இருந்ததால் ஏற்பட்ட பிழையா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். "அதிகாலை நேரம் என்பதால் பேருந்தில் கூட்டம் குறைவாக இருந்தது. ஓட்டுநர் மட்டும் சமயோசிதமாக பேருந்தை வயலில் இறக்காமல் இருந்திருந்தால், பேருந்து லாரியும் நேருக்கு நேர் மோதி பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்," என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை பகுதியில் நடைபெறும் சாலைப் பணிகளின் போது பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
மாணவிகள் பாதுகாப்பில் நோ காம்ப்ரமைஸ்! - எஸ்பி ஸ்டாலின் - கலெக்டர் ஸ்ரீகாந்த் காட்டிய அதிரடி ஆக்ஷன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Embed widget