மேலும் அறிய

"ரூ.8.50 லட்சம் போச்சு... போலீஸ் நடவடிக்கை எடுக்கல!" - மயிலாடுதுறையில் கதறி அழுதபடி தீக்குளிக்க முயன்ற கூலித் தொழிலாளி!

அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக மோசடி சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை இல்லாததால்,3 குழந்தைகளுக்கு தந்தையான சுரேஷ் ஆட்சியர் அலுவலக வாசலில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை: அரசு வேலை மற்றும் வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8.50 லட்சம் வரை பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த நபர் ஒருவர், அதிகாரிகளின் நடவடிக்கையின்மையைக் கண்டித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி பணி நியமன ஆணை

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தலைச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் வெளிநாட்டில் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி அனிதா. கடந்த 2024-ஆம் ஆண்டு, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிவதாகக் கூறிக்கொண்ட கிரிஜா என்ற பெண், அனிதாவை அணுகியுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ (Junior Assistant) பணியிடத்தை அனிதாவிற்கு வாங்கித் தருவதாகக் கூறி, அதற்கு ரூ.4 லட்சம் பணம் பெற்றுள்ளார் கிரிஜா. தொடர்ந்து, ‘நேரடி பணி நியமன வாரியம்’ (Direct Recruitment Board) மூலம் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறி, மாவட்ட ஆட்சியரின் கையெழுத்தைப் போலியாகப் போட்டு, போலி பணி நியமன ஆணையையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டு வேலையைத் துறந்து வந்த கணவர்

தனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில், வெளிநாட்டில் செய்து வந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, தனது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்வதற்காக சுரேஷ் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பணி நியமன ஆணையை எடுத்துக்கொண்டு அனிதா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குப் பணியில் சேருவதற்காகச் சென்றுள்ளார். அங்கு அதிகாரிகளிடம் ஆணையைக் காண்பித்தபோதே, அது முற்றிலும் போலியான ஆணை என்பதும், கிரிஜா என்ற பெண் தங்களை ஏமாற்றியதும் தெரியவந்து அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

40-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி மோசடி

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட கிரிஜா, சுரேஷின் மனைவியைப் போல 40-க்கும் மேற்பட்ட நபர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு போலி பணி நியமன ஆணைகளை வழங்கியது வெளிச்சத்திற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டு காவல்துறையினர் கிரிஜாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இருப்பினும், சில மாதங்களில் அவர் ஜாமினில் வெளியே வந்தார்.

நீடிக்கும் அலட்சியம் - மீண்டும் ஒரு ஏமாற்றம்

கிரிஜாவிடம் கொடுத்த பணத்தை மீட்டுத் தரக் கோரி சுரேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளார். ஆனால், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, காவல்துறையினர் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் காலங்கடத்தி வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் கடந்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த சுரேஷ், மீண்டும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவு செய்தார். இதற்காக மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் ரூ.4.50 லட்சம் பணத்தைக் கடனாகப் பெற்றுக்கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவக்குமார், சுரேஷை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றியுள்ளார்.

அதிகாரிகளின் மெத்தனப்போக்கு

மீண்டும் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், இதுகுறித்து காவல் துறை சைபர் கிரைம் பிரிவு மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் தனித்தனியாகப் புகார் அளித்துள்ளார். இருப்பினும், காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு வேலை ஆசைகாட்டி ரூ.4 லட்சம், வெளிநாட்டு வேலை என நம்பவைத்து ரூ.4.50 லட்சம் என மொத்தம் ரூ.8.50 லட்சத்தை இழந்து, மூன்று குழந்தைகளுடன் நடுத்தெருவில் நின்ற சுரேஷ், பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிப்பு முயற்சி

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டிக்கும் வகையில், சுரேஷ் இன்று  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். திடீரென தான் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலைத் தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்குப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், நொடிப் பொழுதில் சுதாரித்துச் செயல்பட்டு, சுரேஷின் கையில் இருந்த பெட்ரோல் கேனைப் பிடுங்கி எறிந்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரைக் காப்பாற்றி விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட தொழிலாளி ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
உங்க ஏரியாவுல EB பிரச்சனை இருக்கா? மயிலாடுதுறையில் இன்று சிறப்பு குறைகேட்பு கூட்டம்! 
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ஏழை விவசாயியின் மகன் நீட் தேர்வில் தமிழ்நாடு அளவில் முதலிடம்! அரசு பள்ளியின் மாபெரும் சாதனை..!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget