மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வாகனங்களில் அணிவகுத்த விவசாயிகள்
மயிலாடுதுறையில் மத்திய, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் டிராக்டர் கார், ஆட்டோ, இருசக்க வாகன பேரணியை நடத்தினர்.

மயிலாடுதுறையில் மத்திய, மாநில அரசை கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் டிராக்டர் கார், ஆட்டோ, இருசக்க வாகனங்களும் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
விவசாயி உண்ணாவிரதப் போராட்டம்
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க கோரியும், அதற்கான சட்டம் இயற்ற கோரியும் பஞ்சாப் மாநிலம் கணூரி எல்லையில் விவசாய சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். அவருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் டிராக்டர் பேரணி நடைபெரும் என ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது.
மயிலாடுதுறையில் நடைபெற்ற டிராக்டர் பேரணி
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவேரி நகர் மேம்பாலத்தில் இருந்து விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த டிராக்டர் பேரணியில் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் மட்டும் இன்றி ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் காய்களுடன் கலந்து கொண்டனர்.
மத்திய, மாநில அரசிற்கு எதிராக கண்டன கோஷம்
மேலும் மத்திய, மாநில அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய விவசாயிகள், விவசாய விலைப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்ப பெற வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்து விட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

