மேலும் அறிய

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

சீர்காழி அருகே மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை நிலவிவருகிறது.

துர்கா ஸ்டாலின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காட்டில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை மற்றும் பாலம் வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களில் இறந்தவரின் உடலை தங்கள் உயிரை பணயம் வைத்து ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் அவல நிலை நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடரும் சுடுகாடு சாலை பிரச்சினைகள்

பொதுவாக சாலை பிரச்சனை தமிழக முழுவதும் பல பகுதிகளில் அதுவும் கிராமப்புறங்களில் தீர்க்க முடியாத பிரச்சனையாக நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக மயானத்திற்கு செல்லும் பாதை இல்லை எனக் கூறி இறந்தவர்களின் உடலுடன் போராட்டம் செய்யும் சம்பவங்களும் அவ்வபோது தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. ஆனால் அதற்கான முழுமையான தீர்வு என்பதை இன்றளவும் அரசால் சாத்தியப்படுத்த முடியவில்லை. நன்குவழிச் சாலை எட்டு வழி சாலை என சாலை விரிவாக்க பணிகளுக்காக பல லட்சம் ஏக்கரில் விலை நிலங்கள் குடியிருப்புகள் என கையகப்படுத்தி சாலை அமைக்கும் அரசுக்கு, சாமானிய மக்களுக்கான மயானங்களுக்கு சாலை என்பது இன்றளவும் சாத்தியம் அற்றதாகவே இருந்து வருகிறது.

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

திருவெண்காடில் சுடுகாடு சாலை 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருவெண்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பர் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு நடைபெறுகிறது. உயிரிழந்த முத்துகிருஷ்ணனின் உடலை நல்லடக்கம் செய்ய அவரது உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். இந்நிலையில் நல்லடக்கம் செய்ய மயானத்திற்கு செல்லும் சாலை போதிய வசதி இல்லாததால் வயல் மற்றும் வாய்க்கால்களின் வழியே அவரின் உடலை எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டது.

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

பொதுமக்களின் குற்றச்சாட்டு 

மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயான செல்லும் சாலை அமைத்து தரக்கோரி பலமுறை அப்பகுதி மக்கள் மனு அளித்தும், இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டை பதிவு செய்யும் கிராமவாசிகள், இறந்த முத்துகிருஷ்ணனின் உடலை வாயல் வழியே வாய்க்காலில் இறங்கி பாதுகாப்பு அற்ற முறையில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றனர். அப்பொழுது அவரது உறவினர்கள் வாய்க்காலில் இறங்கி ஏறும் போது வழுக்கி விழுந்து நிலை ஏற்பட்டது.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி: ஒரு வழியாக உண்மையை போட்டு உடைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

இதேபோல் இப்பகுதியில் இறப்பவர்களின்  உடல்களை நல்லடக்கம் செய்ய பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் அடக்கம் செய்வது வருவதாகவும், வாய்க்கால்களில் குறைந்த அளவு தண்ணீர் செல்லும் போது இந்த நிலையில் என்றால், மழைக்காலங்களில் இந்த நிலை மிகவும் மோசம இருக்கும் என்றும் எனவே இனிவரும் காலங்களிலாவது அரசு மணிக்கரணை கூழவாய்க்காலில் பாலம் அமைத்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை அமைத்து தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சரின் தாயார் ஊரில் அவலம் ; வாய்க்காலில் இறங்கி இறந்தவரின் உடலை எடுத்து செல்லும் மக்கள்

துர்கா ஸ்டாலினின் சொந்த ஊர்

மேலும் இந்த ஊர் தமிழக முதலமைச்சரின் துணைவியார் துர்கா ஸ்டாலினின் சொந்த ஊராகும், அது மட்டும் இன்றி அவரும், முதல்வர் , விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர் அவ்வபோது இங்கு வந்து செல்லும் நிலையில் இந்த ஊருக்கே இந்த நிலைமையா? என பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget