மேலும் அறிய

வைத்தீஸ்வரன்கோயிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரிய வழிபாடு - பலநூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு லட்ச கணக்கான நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாட்டில் ஈடுப்பட்டனர்.

ஒருவார கால நடைபயணமாக வைத்தீஸ்வரன் கோயிலுக்கு வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு மேற்கொண்டனர்.

வைத்தீஸ்வரன்கோயில்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற மிகவும் பழமை வாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். 

வைத்தீஸ்வரன்கோயிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரிய வழிபாடு - பலநூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.

நகரத்தார் குலதெய்வ வழிபாடு

இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் இரண்டாவது செவ்வாய்கிழமை குலதெய்வ வழிபாடு நடத்துவதற்காக, காரைக்குடி, கந்தர்வகோட்டை, சிவகங்கை, பரமகுடி, மானாமதுரை, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பல நூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வைத்தீஸ்வரன்கோயிலுக்கு வருவது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்தாண்டு திரளான மக்கள் வழிபாடு செய்ய வைத்தீஸ்வரன் கோயில் திரண்டுள்ளனர். நகரத்தார் மக்கள் கிராமம் கிராமமாக சித்திரை மாதம் முதல் செவ்வாய் கிழமை விரதம் இருந்து புறப்படுட்டு இரண்டாவது செவ்வாய் கிழமை இங்கு வந்து சேர்கின்றனர். குலதெய்வ வழிபாடாகவும், அதே சமயம் ஸ்ரீ தையல்நாயகி அம்மன் தங்கள் ஊர் பெண் என்ற ஐதீகத்தின்படி மக்கள் சீர்வரிசையை கூண்டு வண்டிகளில் ஏற்றியும், நடைபயனமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

வைத்தீஸ்வரன்கோயிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரிய வழிபாடு - பலநூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.

1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள்

இந்த ஆண்டும் பாதயாத்திரையாக சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்று தையல்நாயகி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து தாங்கள் வேண்டுகளுக்காகவும் வழிநடைக்கு துணையாகவும் கொண்டு வந்த மஞ்சள் தடவிய வெப்பிலை கட்டிய குச்சியினை வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக கோயில் கொடிமரத்தில் செலுத்தினர். மீண்டும் மறு வேண்டுதல் நிறைவேற அங்கிருந்து ஒரு குச்சியை தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

வைத்தீஸ்வரன்கோயிலில் 200 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் பாரம்பரிய வழிபாடு - பலநூறு கிலோமீட்டர் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்.

தொடரும் அன்னதான திட்டம் 

வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு சித்திரை இரண்டாவது செவ்வாய்க்கிழமை நகரத்தார் பாதயாத்திரையை முன்னிட்டு வைத்தீஸ்வரன்கோயில் ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை சார்பாக திருக்கோயில் அலுவலகம் முன்பு நேற்று இன்று என இரண்டு நாட்களாக லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வை, வைத்தீஸ்வரா அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர், தலைவர், செயலர், பொருளாளர், வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர், துணை தலைவர், அறக்கட்டளையின் சட்ட ஆலோசகர், திருக்கோயில் நிர்வாகிகள் பொதுமக்கள், அறங்காவலர்களும் கலந்து கொண்டனர். கடந்த பல ஆண்டுகளாக இவ்விழாவிற்கு வருகை தரும் லட்ச கணக்கான பக்தர்களுக்கு இவர்கள் அன்னதானம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
மயிலாடுதுறை: மின் ஊழியர் உயிரிழப்பு விவகாரம் - மரணத்திற்கு நீதி கிடைத்ததா? முழு விபரம்..!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. காலைல கருப்புக்கொடி.. மாலைல மாலை மரியாதை! மயிலாடுதுறையில் நடந்த ட்விஸ்ட்!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.. காலைல கருப்புக்கொடி.. மாலைல மாலை மரியாதை! மயிலாடுதுறையில் நடந்த ட்விஸ்ட்!
எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?
எம்எல்ஏ சீட் விற்பனைக்கு..? மயிலாடுதுறை காங்கிரஸ் நிர்வாகிகள் எம்பி சுதாவிற்கு கருப்புக்கொடி காட்ட முடிவு?
மயிலாடுதுறையின் புதிய நம்பிக் 'கை'.. காந்தியடிகளுக்கே காசோலை வழங்கிய குடும்ப வாரிசு: யார் இந்த ஜமால் முகமது யூனுஸ்?
மயிலாடுதுறையின் புதிய நம்பிக் 'கை'.. காந்தியடிகளுக்கே காசோலை வழங்கிய குடும்ப வாரிசு: யார் இந்த ஜமால் முகமது யூனுஸ்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
எரிவாயு சிலிண்டர் முன்பதிவில் அதிரடி மாற்றம்! காத்திருப்பு காலம் அதிகரிப்பு: காரணம் என்ன?
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
IPL 2026 RCB vs CSK: ஆர்சிபி பிரம்மாண்ட வெற்றி! போராடிய சிஎஸ்கே மிடில் ஆர்டர்! சென்னைக்கு 3வது தோல்வி!
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
TVK: இதுதான் எங்கள் மீதான Case! வேட்பாளர்கள் மீதான குற்றங்களை வெளியிட்ட தவெக! மற்ற கட்சியும் செய்யுமா?
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகம், வடகிழக்கு இந்தியாவில் கனமழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
TVK Vijay Campaign: நெருங்கும் தேர்தல்.. விஜய் நாளை மீண்டும் பரப்புரை! எங்கே தெரியுமா?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
Trump Dead: என்னது.. ட்ரம்ப் செத்துட்டாரா? கூகுளில் ட்ரெண்டாகும் Trump Dead- நடந்தது என்ன?
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு: முழு விபரம் இதோ!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Election 2026: இன்னும் 3 நாளில் 3 மாநில தேர்தல்! அனல் பறக்கும் இறுதிக்கட்ட பரப்புரை!
Embed widget