மேலும் அறிய

காலை காங்கிரஸ்.. மாலை திமுக.. சீர்காழியை அதிரவைத்த மோதல்: போலீசாருடன் மல்லுக்கட்டிய தொண்டர்கள்..!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுகவின் தீர்மான நகலை காங்கிரஸ் எரித்த நிலையில், பதிலடியாக திமுகவினர் ராகுல் காந்தி உருவப்பொம்மையை எரித்ததால் சீர்காழி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திமுக மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதல், ராகுல் காந்தியின் உருவப்பொம்மை எரிப்பு மற்றும் போலீசாருடன் தள்ளுமுள்ளு என அடுத்தடுத்து அரங்கேறிய சம்பவங்களால் ஒட்டுமொத்தப் பகுதியும் பெரும் பதற்றக் களமாக மாறியுள்ளது.

காலையில் வெடித்த மோதல்: தீர்மான நகல் எரிப்பு

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் நேற்று காலை காங்கிரஸ் கட்சியின் சார்பில் திடீர் போராட்டம் ஒன்று நடைபெற்றது. சமீபத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் அந்த தீர்மான நகலை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் இந்த அதிர்ச்சி சம்பவத்தைக் கேள்விப்பட்டு, சீர்காழி நகர திமுகவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், காங்கிரசாருடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் ஒருவரையொருவர் முழக்கமிட்டு சாடிக்கொண்டதால், அங்கு திடீரென சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சீர்காழி காவல்துறையினர், இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தி, சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். போலீசாரின் சமயோசித தலையீட்டால் காலையில் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாலையில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம்

காலையில் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,  மாலை சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாவட்ட இளைஞரணி செயலாளர் மருது தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சீர்காழி நகர திமுக செயலாளர் சுப்பராயன், சீர்காழி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான திமுகவினர் திரளாகக் கலந்துகொண்டனர். மாநில இளைஞரணி மாநாட்டு தீர்மான நகலை தீயிட்டு எரித்த காங்கிரஸ் நிர்வாகிகளைக் கண்டித்து, திமுகவினர் கடுமையான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ராகுல் காந்தி உருவப்பொம்மை எரிப்பு

ஆர்ப்பாட்டத்தில் போது, திமுகவினர் திடீரென காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தியின் உருவப்பொம்மையை மறைத்து எடுத்து வந்து, அதற்குத் தீயிட்டுக் கொளுத்தி பிரதான சாலையில் வீசினர். தேசியத் தலைவரின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டதால் அந்த இடமே மீண்டும் அதிரடி பதற்றத்திற்கு உள்ளானது. உருவப்பொம்மை எரிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும், சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சரவணன், காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையின் நடுவே எரிந்து கொண்டிருந்த ராகுல் காந்தியின் உருவப்பொம்மையை அணைத்து, அங்கிருந்து அகற்ற போலீசார் தீவிரமாக முயன்றனர்.

சம்பவ இடத்து பரபரப்பு

போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "எங்கள் கட்சியின் மாநாட்டு நகலை எரித்தவர்களைக் கண்டிக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது" எனக் கூறி போலீசாரை தடுத்தனர். இதனால் சீர்காழி காவல் ஆய்வாளருக்கும் திமுகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும், தள்ளுமுள்ளுவும் ஏற்பட்டது.

ஸ்தம்பித்த மயிலாடுதுறை - சிதம்பரம் நெடுஞ்சாலை

திமுகவினரின் இந்த திடீர் சாலை மறியல் மற்றும் போலீசாருடனான மோதல் காரணமாக, முக்கிய வழித்தடமான மயிலாடுதுறை - சிதம்பரம் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருதி, போலீசார் அதிரடியாகச் செயல்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சி மேற்கொண்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, எரியூட்டப்பட்ட உருவப்பொம்மையின் பாகங்கள் அகற்றப்பட்டு, சாலைப் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

தொடரும் பதற்றம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திமுக - காங்கிரஸ் ஆகிய கட்சிகளின், தலைவர்களின் நகல்களும் உருவப்பொம்மைகளும் அடுத்தடுத்து எரிக்கப்பட்ட இந்த அசாதாரண சம்பவங்கள் சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள், முக்கியச் சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் வட்டாரத்தில் இந்த மோதல் போக்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
கேரளா, கர்நாடகா வீரர்களைச் சமாளித்த தமிழகச் சிறுவர்கள்! - மயிலாடுதுறையில் பார்வையாளர்களை உரைய வைத்த மோதல்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
திருச்செந்தூருக்கு இணையான திருவிடைக்கழி முருகன் கோயில்! ஆடிக்கிருத்திகையில் அரோகரா கோஷம்!
"ஏ...தள்ளு தள்ளு தள்ளு.." ஆட்சிகள் மாறினாலும்... காட்சிகள் மாறாது - பொதுமக்கள் வேதனை..!
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget