மேலும் அறிய

மக்கள் கவனத்திற்கு! குறைகளை உடனே தீர்க்க ஒரு வாய்ப்பு!

சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளைய தினம் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. 

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தின் சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாளை, டிசம்பர் 17, 2025 புதன்கிழமை அன்று மின் நுகர்வோர் குறைதீர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மின் நுகர்வோர் தங்கள் குறைகளை நேரடியாகத் தெரிவித்து தீர்வு காணலாம் என சீர்காழி கோட்ட இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் (பொறுப்பு) மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அரசின் முயற்சி

பொதுமக்களுக்கு அரசின் திட்டங்களும் சேவைகளும் எளிதில் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மின்சார வாரியத் துறையில் ஏற்படும் இடர்பாடுகளையும், சிக்கல்களையும் பொதுமக்கள் எளிதில் தீர்த்துக்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒவ்வொரு மாதமும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த கூட்டங்கள், மின் துறை தொடர்பான புகார்கள், புதிய மின் இணைப்பு கோரிக்கைகள், மின் கட்டணத்தில் ஏற்படும் குழப்பங்கள் போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண உதவுகின்றன. இது பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுகுவதை எளிதாக்குகிறது, மேலும் அரசு இயந்திரத்தின் வெளிப்படைத்தன்மையையும், செயல்திறனையும் அதிகரிக்கிறது.

நாளை நடைபெறும் குறைதீர் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், நாளைய தினம், புதன்கிழமை, காலை 10:30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் சீர்காழி மின்வாரிய கோட்ட அலுவலகத்தில், நாகை மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை கோட்ட மேற்பார்வை பொறியாளர் காளிதாஸ் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கம், மின் நுகர்வோர்களின் பிரச்சனைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வுகளை வழங்குவதே ஆகும்.

புகார்களை மனுவாக அளிக்கலாம்

இக்கூட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்கள், தங்களின் குறைகளை மனுவாக எழுதி அதிகாரிகளிடம் நேரடியாக அளிக்கலாம். புதிய மின் இணைப்பு கோரிக்கை, மின் கட்டணம் தொடர்பான புகார்கள், மின் அழுத்தம் குறைதல், மின் மாற்றியில் ஏற்படும் பழுதுகள், தெருவிளக்குகள் எரியாதது, மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் மனுக்களை சமர்ப்பிக்கலாம். இந்த மனுக்கள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தீர்வு காணும்படி அறிவுறுத்தப்படும். இதன் மூலம், கால தாமதமின்றி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்.

பொதுமக்கள் பங்கேற்பின் முக்கியத்துவம்

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களையும், பிரச்சனைகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. அதிகாரிகள் ஒரே இடத்தில் கூடி இருப்பதால், பல துறைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கும் உடனடியாக ஒருங்கிணைந்த தீர்வுகளை காண முடியும். இது மின்சார வாரியத்தின் சேவைகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றங்களை கொண்டு வரவும் உதவுகிறது. இந்தக் கூட்டங்கள் மாதந்தோறும் நடத்தப்படும் என்பதால், எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் பொதுமக்கள் திட்டமிட்டு பங்கேற்று தீர்வு காண முடியும். எனவே, மின்சார வாரியத்தின் சேவைகளில் திருப்தியற்றவர்கள் அல்லது ஏதேனும் பிரச்சனைகள் உள்ளவர்கள், நாளை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் குறைகளைத் தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது ஒரு முக்கியமான வாய்ப்பு, இதை பொதுமக்கள் முறையாகப்பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கீழ்க்கண்ட ஊர்களும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மனு அளிக்கலாம்

* சீர்காழி

* கொள்ளிடம்

* மாதானம்

* அரகூர்

* பூம்புகார்

* காளி

* மணல்மேடு

* வைத்தீஸ்வரன்கோவில்

* ஆக்கூர்

* திருக்கடையூர் 

* கிடாரங்கொண்டான்

* செம்பனார் கோவில்

* தரங்கம்பாடி

* திருவெண்காடு

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் - ஜூன் 28 முக்கிய முகாம்!
உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் - ஜூன் 28 முக்கிய முகாம்!
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Maruti Suzuki: பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
பட்ஜெட் கார் பிரியர்கள் ஷாக்..! ஸ்விஃப்ட் டூ எர்டிகா, விலையை உயர்த்திய மாருதி - எந்த மாடலுக்கு எவ்ளோ?
Gold rate today : ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
ஒரே நாளில் ரூ.5000 உயர்ந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை என்ன.?
Cm Vijay vs EV Velu : முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
முதல் ரெய்டே தோல்வியா.? லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் எ.வ.வேலு வீட்டில் சிக்கியது என்ன.?
Embed widget