மேலும் அறிய

மார்ச் 31 -ம் தேதி கடைசி நாள்... எதற்கு தெரியுமா..? முழு விபரம் உள்ளே இருக்கு...!

மயிலாடுதுறை மாவட்ட குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 -ம் தேதிக்குள் தங்களது கைரேகைகளை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் மாா்ச் 31 -ம் தேதிக்குள் தங்களது குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கைரேகையினை ரேஷன் கடையில் உள்ள இயந்திரத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கட்டாய கைரேகை பதிவு 

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் தங்கள் கைரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். மேலும், 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 நபர்கள், தங்கள் ஆதார் எண்ணை தங்களது குடும்ப அட்டையோடு இணைத்துள்ளனர். 

ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம்

மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் அட்டைகளும் உள்ளன. இதுமட்டுமல்லாது, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு, ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளதாலும், கைரேகைப் பதிவு மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாலும், யார் வேண்டுமானாலும் எந்த நியாய விலைக் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை தற்பொழுது உள்ளது.

குறைவாக பதிவான கைரேகையை பதிவு 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட சதவீதத்தினர் மட்டுமே இந்த கைரேகையைப் பதிவை மேற்கொண்டனர், மற்றவர்களும் கட்டாயம் கைரேகையைப் பதிவு செய்ய வேண்டும் என தற்போது அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் கடை ஊழியர்கள் அறிவுறுத்தல் 

இந்த நிலையில், குடும்ப அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்கள் விரல் ரேகையைப் பதிவு செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால் பொருள்கள் அளவு குறைக்கப்படும் அல்லது பெயர் நீக்கப்படும் என நியாய விலைக் கடை ஊழியர்கள் தெரிவித்து வருவதால் பொதுமக்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக, இது குறித்து கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும். ஆனால், பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களால் தங்களுடைய கைரேகையைப் பதிவு செய்யவில்லை. ஆகவே, இது சம்பந்தமாக தற்பொழுது மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களுக்கு நியாய விலைக் கடை ஊழியர்கள் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் மார்ச் 31 கடைசி தேதி 

இந்நிலையில் இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் NFSA (PHH/AAY) பயனாளர்கள் 31.03.2025 -க்கு முன்னர் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினர்களின் (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவை E-KYC மூலம் மேற்கொள்ள என. தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள நியாய விலை அங்காடிகளில் 14.03.2025 15.03.2025, 21.03.2025, 22.03.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும், முகாம் இல்லாத இதர நாட்களில் விற்பனையாளர்கள் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று E-KYC (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவு செய்ய உதவுவார்கள். (PHH/AAY) குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை & ஆதார் அட்டை கொண்டு நியாய விலை அங்காடிகளுக்கு சென்று (மின்னனு அடையாள பதிவு) கைரேகை பதிவை E-KYC பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீ.காந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
கலை இளமணி முதல் கலை முதுமணி வரை.. மயிலாடுதுறையில் 15 பேருக்குக் கிடைக்கும் அரிய வாய்ப்பு!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
பிரம்மா பூஜித்த பழமை வாய்ந்த ஆலயம்.. சீர்காழி அருகே கோலாகலமாக நடந்த பிர்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
5 நிமிட வீடியோவை இந்த மெயிலுக்கு அனுப்புங்க.. மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..
தாத்தா வயதில் இப்படியொரு கொடூர புத்தியா? 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் - தட்டிக்கேட்ட வர்களுக்கு கத்திக்குத்து..

வீடியோ

CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
Group 1 Vacancy: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பணியிடங்கள் கடும் குறைப்பு: தேர்வர்கள் கொந்தளிப்பு, அதிகரிக்க கோரிக்கை!
TN EB Bill: 200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
200 யூனிட் இலவசம் மட்டுமில்ல..நடப்பாண்டில் மின்சார கட்டண உயர்வும் இல்லை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TVK DMK: தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
Venezuela Earthquake: வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: 1 லட்சத்தைத் தாண்டும் பலி எண்ணிக்கை?
DMK EV VELU FIR CASE : எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
எ.வ.வேலு மீது வழக்கு பதிவு.! லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை ஏன்.? FIR- யில் வெளியான ஷாக் தகவல்கள்
Tata Sumo: சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?
சியாரா ஓவர்.. 9 சீட்டராக ஒரிஜினல் SUV கிங்கை இறக்க டாடா திட்டம் - அப்க்ரேட் எடிஷன் எப்படி? எப்போ?
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல நாங்க.. இதைவிடப் பெரிய அடக்குமுறை பார்த்தவங்க- சீறிய ஸ்டாலின்
”அப்பாவ காணோமா” இங்க பாரு கண்ணா.! சிஎம் விஜய்க்கு அவர் ஸ்டைலில் ஸ்டாலின் பதிலடி 
”அப்பாவ காணோமா” இங்க பாரு கண்ணா.! சிஎம் விஜய்க்கு அவர் ஸ்டைலில் ஸ்டாலின் பதிலடி 
Embed widget