மேலும் அறிய

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 

மயிலாடுதுறை அருகே மகள் கண்முன்னே தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காவிற்கு உட்பட்ட பொறையார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலுப்பூர் கிராமத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூர கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கடுமையான அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடுத்தெருவில் வசித்து வந்த மகேந்திரன் என்ற அறுபது வயது முதியவர், தன் சொந்த வீட்டிலேயே கொடூரமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் நீண்ட காலம் பணியாற்றிவிட்டு ஊர் திரும்பிய இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துவிட்ட நிலையில், மற்றொரு மகள் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். 

இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவர் தன்னை துன்புறுத்துவதாக கூறி மூத்த மகளான மகாலட்சுமி தனது கணவர் பிரபாகரனைப் பிரிந்து தந்தையின் பாதுகாப்பில் வாழ்ந்து வந்த சூழலில், இந்தச் சோக நிகழ்வு நடந்துள்ளது.

குடும்பப் பிரச்சனையும் கணவர் கைது நடவடிக்கையும்

மகாலட்சுமி தனது கணவர் பிரபாகரனுடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். ஆனால் கணவர் பிரபாகரன் தொடர்ந்து தன்னை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மகாலட்சுமி கடந்த மாதம் பொறையார் காவல் நிலையத்தில் இதுகுறித்து முறைப்படி புகாரும் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பிரபாகரனை தீவிரமாகத் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை நான்கு மணியளவில் போலீசார் பிரபாகரனைக் கைது செய்துள்ளனர். கணவர் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த பயங்கர கொலை சம்பவம் அரங்கேறியிருப்பது பல சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

வீடு புகுந்து அரங்கேறிய கோரக் கொலை

கணவர் கைது செய்யப்பட்ட அதே நாளில் இரவு சுமார் எட்டு மணியளவில், மகேந்திரன் தனது மகள் மகாலட்சுமியுடன் வீட்டில் அமைதியாக அமர்ந்திருந்த போது திடீரென அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் திடீரென வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். எதையும் புரிந்து கொள்ளும் முன்னரே அவர்கள் வேகமாகச் செயல்பட்டு, வீட்டிற்குள் இருந்த மகாலட்சுமியைப் பலவந்தமாக வெளியே தள்ளி கதவை அடைத்துள்ளனர். மகள் கதறித் துடித்தபடியே வெளியே தள்ளப்பட்ட நிலையில், கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர்கள் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் மகேந்திரனை சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடியுள்ளனர். தன் கண்முன்னே தன் தந்தையின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிர் பிரிவதைக் கண்ட மகாலட்சுமி அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

உயர் அதிகாரிகளின் நேரில் விசாரணை மற்றும் மருத்துவமனை மாற்றம்

தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு கதறி அழுத மகாலட்சுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். உடனடியாக இச்சம்பவம் குறித்து பொறையார் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா ப்ரியா உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும், கொலை நடந்த விதம் மற்றும் தடயங்கள் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, பொறையார் போலீசார் கொல்லப்பட்ட மகேந்திரனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலைக்கான காரணங்கள் குறித்த பல்கோண விசாரணை

இந்த படுகொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து காவல்துறை பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, மகாலட்சுமியின் கணவர் பிரபாகரன் கைது செய்யப்பட்டதற்கும் இக்கொலைக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா அல்லது குடும்பப் பிரச்சனைகள் மற்றும் முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில், கொல்லப்பட்ட மகேந்திரன் வழக்கமாக தனது கையில் தங்க பிரேஸ்லெட் மற்றும் செயின் உள்ளிட்ட நகைகளை அணிந்திருக்கும் வழக்கம் உடையவர் என்றும், ஆனால் கொலை நடந்த பின் அவரது உடலில் அந்த நகைகள் எதுவும் இல்லை என்றும் அப்பகுதிவாசிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்விரோதத் கொலையா அல்லது நகை பறிக்கும் நோக்கத்துடன் திட்டமிடப்பட்ட கொள்ளைக் கொலையா என்ற கோணத்திலும் போலீசார் தங்களது விசாரணையை விரிவுபடுத்தி முடுக்கி விட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

தீபாவளிக்குள் போராட்டம்; சீர்காழி நகராட்சி கவுன்சிலர் எச்சரிக்கை!
தீபாவளிக்குள் போராட்டம்; சீர்காழி நகராட்சி கவுன்சிலர் எச்சரிக்கை!
காரைக்கால் வயல்வெளிகளில் முகாமிட்ட அபூர்வ வெளிநாட்டுப் பறவைகள்! காரணம் இதுதான்...
காரைக்கால் வயல்வெளிகளில் முகாமிட்ட அபூர்வ வெளிநாட்டுப் பறவைகள்! காரணம் இதுதான்...
திடீரென பாய்ந்த மாடு... நிலைதடுமாறிய கார்... சீர்காழி சாலையில் அரங்கேறிய அதிர வைக்கும் விபத்து!
திடீரென பாய்ந்த மாடு... நிலைதடுமாறிய கார்... சீர்காழி சாலையில் அரங்கேறிய அதிர வைக்கும் விபத்து!
மயிலாடுதுறையில் சாலையில் படுத்து உரிமையைக் கேட்ட விவசாயிகள்!
மயிலாடுதுறையில் சாலையில் படுத்து உரிமையைக் கேட்ட விவசாயிகள்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Jio IPO: நாளுக்கு நாள் உச்சம்.. இரண்டே நாளில் 3.47 மடங்கு சந்தா அதிகரிப்பு! 3.5 லட்சம் கோடியை கடந்த முதலீட்டாளர்கள் தேவை!
Light House Bridge: கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
கலங்கரை விளக்கம் டூ திரு.வி.க. மேம்பாலம்..! 4KM, ரூ.1000 கோடி பட்ஜெட் - சென்னையில் புதிய பறக்கும் சாலை
VanniArasu: விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
விசிக பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது..! சீமான், திமுகவை வெளுத்து வாங்கிய அமைச்சர் வன்னியரசு
Embed widget