மேலும் அறிய

Mayiladuthurai Power Shutdown (19.11.2026): மயிலாடுதுறை மாவட்ட மக்களே உஷார்! நாளை (நவ.19) பகல் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு - உங்கள் ஊர் இந்தப் பட்டியலில் இருக்கா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (19.12.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்பாதைகள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், வரும் நவம்பர் 19-ம் தேதி வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நகர்ப்புற மற்றும் மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர்கள் ரமேஷ் , விஜயபாரதி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதன்படி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும், எந்தெந்த கிராம மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்த முழு விவரங்கள் வெளியாகியுள்ளன.

மின்வாரியத்தின் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் மின்சார விநியோகத்தைச் சீராக வழங்குவதற்காக அவ்வப்போது துணை மின் நிலையங்கள் மற்றும் மின்பாதைகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சில துணை மின் நிலையங்களில் நவம்பர் 19-ம் தேதி பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இந்தப் பணிகளின்போது மின்சார விநியோகம் செய்யப்படும் மின்பாதைகள் பாதுகாப்பு கருதி நிறுத்தப்படுவதால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்கும் தற்காலிகமாக மின்சாரம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பூர் துணை மின் நிலையம் 

பெரம்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இதன்படி பெரம்பூர், கடக்கம், கிளியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆதார் ஆகிய ஊர்களிலும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது அன்றாடப் பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக மின்சாரத்தைச் சார்ந்து இயங்கும் சிறு தொழில் நிறுவனங்கள், கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பணிகளை மேற்கொள்பவர்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

மணக்குடி துணை மின் நிலையம் 

மணக்குடி  துணை மின் நிலையத்தில் நடைபெற உள்ள பராமரிப்புப் பணிகளின் காரணமாக, அதனுடன் தொடர்புடைய பல்வேறு மின்பாதைகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதன்படி சேமங்கலம், ஆலவேலி, நத்தம், வேப்பங்குளம், சாவடி, உளுத்துக்குப்பை, மொளையூர், ஆதனூர், மணக்குடி, கீழ்மருதாந்தநல்லூர் மற்றும் மாப்படுகை ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

மேலும், சேமங்கலம், வேப்பங்குளம், மணக்குடி மற்றும் மாப்படுகை ஆகிய மின்பாதைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீடூர் துணை மின் நிலையம் 

நீடூர் துணை மின் நிலையத்திலும் நவம்பர் 19-ம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்னாச்சல்லூர், மாப்படுகை, ஆனந்தக்குடி, சோழம்பேட்டை, மணலூர் ஆகிய பகுதிகளிலும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையம் 

இதேபோன்று நாளை சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.  

வைத்தீஸ்வரன் கோயில் துணை மின் நிலையத்தில் அவசர கால மற்றும் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளன. தரமான, தடையற்ற மற்றும் சீரான மின் விநியோகத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

இதன் காரணமாக, நாளை 19.11.2026 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்

வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி,  ஆத்துக்குடி, திருப்புன்கூர்,  புங்கனூர், சட்டநாதபுரம், எடமணல், மேலச்சாலை, திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, தொடுவாய்,  தென்பாதி, கோவில்பத்து,  கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, கற்பகம் நகர்  

பராமரிப்புப் பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி விரைவாக முடிக்கப்பட்டு, இயன்றவரை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின் வாரியத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்

பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டுகோள்

மின்தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக குடிநீர் சேமிப்பு, மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பது, வணிக நிறுவனங்களின் பணிகள் மற்றும் மின்சாரத்தைச் சார்ந்த தொழில்களை மேற்கொள்பவர்கள் உரிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரம்பூர், மணக்குடி, நீடூர் மற்றும் வைதீஸ்வரன்கோயில் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 19-ம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்தடை ஏற்படும். எனவே, இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு மின்வாரிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

அடிப்படை உரிமையான குடிநீருக்கே இத்தனை போராட்டமா? சீர்காழி அருகே ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
அடிப்படை உரிமையான குடிநீருக்கே இத்தனை போராட்டமா? சீர்காழி அருகே ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை!
"இதுதான் எதிர்பார்த்த மாற்றமா?" - சீர்காழி ரேஷன் கடையில் புழு அரிசி விநியோகம்; இளைஞர் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
தூய்மைப் பணியாளர்களுக்கு நேர்ந்த கொடுமை! நாகூர் கந்தூரி விழா முடிந்து திரும்பியபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சமத்துவம் தழைக்க... சகோதரத்துவம் ஓங்க... சவேரியார் ஆலயத்தில் ஏற்றப்பட்டது திருவிழா கொடி!
சமத்துவம் தழைக்க... சகோதரத்துவம் ஓங்க... சவேரியார் ஆலயத்தில் ஏற்றப்பட்டது திருவிழா கொடி!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
திருப்பரங்குன்றத்தில் உச்சக்கட்ட பரபரப்பு... ஏற்றப்பட்ட தீபம் - எங்கு தெரியுமா?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
விண்ணை முட்டிய அரோகரா கோஷம்! - திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம்! எத்தனை நாட்கள் தீபம் எரியும்? எவ்வளவு தூரம் தெரியும்?
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
Tiruvannamalai Deepam 2026 LIVE: திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்.. ஜோதியாய் ஈசன்.. மெய்சிலிர்க்க வைக்கும் தரிசனம்
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
பட்டையை கிளப்பிய சூர்யவன்ஷி: 52 பந்துகளில் இரட்டை சதம் எடுத்து அசாத்திய ஆட்டம்!
"கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்" - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
பெண் பாடகிக்கு தண்டனையாக 74 சவுக்கடிகள் வழங்கப்பட்ட கொடூரம்! - எங்கே? ஏன் தெரியுமா?
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
“பொடனிக்குப் பின்னாலேயே இருந்து தப்பு செய்த எம்எல்ஏவுக்கு தீபாவளி பரிசு வேற” ஆட்சியா இது? - மு.க.ஸ்டாலின் ஆவேசம்
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
நாளை வெளுத்து வாங்கப்போகும் கனமழை - எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை தெரியுமா?
Embed widget