மேலும் அறிய

காவிரியின் புனிதத்தைக் காக்க தமிழக அரசு உடனே தலையிட வேண்டும்: தருமபுரம் ஆதீனம் 

புனித காவிரியில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்கவும், அண்டை மாநிலத்திடமிருந்து உரிய நீரைப் பெற்றுத் தரவும் அரசு நடவடிக்கை எடுக்க தருமபுரம் ஆதீனம் வலியுறுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும், அண்டை மாநிலத்திடமிருந்து தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை உரிய முறையில் பெற்றுத் தரவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார். 

மேலும், வரும் காலங்களில் நடைபெறும் பிரசித்தி பெற்ற ஐப்பசி துலா உற்சவ தீர்த்தவாரியில் பக்தர்கள் எவ்வித சிரமமுமின்றிப் புனித நீராடுவதற்குத் தேவையான உரிய முன்னேற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் ஏமாற்றம்

மயிலாடுதுறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும் ஐப்பசி மாத துலா உற்சவத்தின் சிகர நிகழ்ச்சியான கடைமுகத் தீர்த்தவாரி திருவிழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்தப் புனித நிகழ்வில் பங்கேற்று காவிரியில் நீராடுவதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த நம்பிக்கையோடும் பக்திப் பரவசத்தோடும் மயிலாடுதுறையில் குவிந்திருந்தனர். ஆனால், திருவிழாவையொட்டி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படாததால் ஆறு வறண்டு காணப்பட்டது. இதனால், புனித நீராட வந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றமும் மன வருத்தமும் அடைந்தனர்.

இந்நிலையில், பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற காவிரி கடைமுகத் தீர்த்தவாரியில் பங்கேற்ற தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம், ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளைக் கிணற்று நீரில் (போர்வேல் வாட்டர்) புனித நீராடினார். முன்னதாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், காவிரியின் தொன்மை, ஆன்மீகச் சிறப்பு மற்றும் தற்போதைய அவல நிலை குறித்து மிகுந்த வேதனையுடன் தனது கருத்துகளைப் பதிவு செய்தார்.

காவிரியின் ஆன்மீக மற்றும் இலக்கியப் பெருமை

செய்தியாளர்களிடம் பேசிய தருமபுரம் ஆதீனம், காவிரி நதியின் மகத்துவத்தை நினைவுகூர்ந்தார். "நடந்தாய் வாழி காவேரி" என சிலப்பதிகாரம் முதலான பழந்தமிழ் சங்க இலக்கியங்களும், சைவத் திருமுறைகளும் காவிரித் தாயின் பெருமையைப் போற்றிப் பாடுகின்றன. புராண வரலாறுகளின்படி, காசியில் ஓடும் கங்கை நதியில் மக்கள் தங்களின் பாவங்களைக் கரைப்பதாகவும், அவ்வாறு சேர்ந்த பாவச் சுமைகளை கங்காதேவியே ஐப்பசி மாதத்தில் மயிலாடுதுறை காவிரித் துலாக்கட்டத்தில் நீராடிப் போக்கிக்கொள்வதாகவும் 'காவிரி மகாத்மியம்' என்னும் புனித நூல் எடுத்துரைக்கிறது.

இத்தகைய சிறப்புமிக்க காவிரி நதி, பூம்புகாரில் கடலோடு கலக்கும் இடம் வரை இரு மருங்கும் அமைந்துள்ள அனைத்துச் சிவாலயங்களிலும் ஐப்பசி கடைமுழுக்கு விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மயிலாடுதுறையில் எழுந்தருளியுள்ள வதான்யேஸ்வரர், மயூரநாதசுவாமி, விஸ்வநாதர், ஐயாறப்பர் உள்ளிட்ட ஏழு விஸ்வநாதர்கள் காவிரிக் கரையில் எழுந்தருளி பக்தர்களுக்குத் தீர்த்தம் கொடுக்கும் இந்த அற்புத விழாவைக் காணவும், புனித நீராடவும் திருச்செந்தூர் உள்ளிட்ட தொலைதூர ஊர்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் மிகுந்த ஆவலுடன் வருகை தந்துள்ளனர்.

மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாதது வருத்தமளிக்கிறது

பக்தர்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட குருமகா சன்னிதானம், திருவிழாவிற்காகக் காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் எனப் பெரிதும் எதிர்பார்த்து வந்த பக்தர்களுக்கு இன்று ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாகக் குறிப்பிட்டார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இத்தகைய வறண்ட சூழல் ஏற்படுவது வேதனைக்குரியது. ஆற்றில் இயற்கையாகத் தண்ணீர் இல்லாத சூழல் நிலவும் போது, நிர்வாகத் தரப்பில் குறைந்தபட்சம் பக்தர்கள் புனித நீராடுவதற்கு ஏதுவாகத் தற்காலிகத் தொட்டிகளை அமைத்தாவது உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்திருக்கலாம். ஆனால், அத்தகைய ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படாததால் வயதானவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

சுகாதாரச் சீர்கேடு

மேலும், புனித நதியாகப் போற்றப்படும் காவிரி ஆற்றில் நகரின் கழிவுநீர் மற்றும் சாக்கடை நீர் நேரடியாகக் கலப்பதை அவர் வன்மையாகக் கண்டித்தார். ஆற்றில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரால் அப்பகுதியில் கடுமையான சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தொற்றுநோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. கோடிப் புண்ணியம் தரும் புண்ணிய நதியான காவிரியின் புனிதம் கெடும் வகையில் சாக்கடை நீர் கலப்பதைத் தடுக்க உள்ளாட்சி நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இறுதியாக, அண்டை மாநில அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தியும், சட்டரீதியாக மேல்முறையீடு செய்தும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை எவ்விதச் சமரசமுமின்றி முறையாகப் பெற்றுத் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இனி வரும் காலங்களில் இது போன்ற கசப்பான நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, ஆன்மீக அன்பர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் காவிரியில் புனித நீராடுவதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

பாவம் போக்கும் காவிரி எங்கே? போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்...
பாவம் போக்கும் காவிரி எங்கே? போர்வெல் நீரில் புனித நீராடிய பக்தர்கள்...
'தென்னிந்திய கும்பமேளா'வுக்கு இப்படியொரு நிலையா? வறண்ட காவிரியில் போர்வெல் நீரில் குளித்த அவலம்!
'தென்னிந்திய கும்பமேளா'வுக்கு இப்படியொரு நிலையா? வறண்ட காவிரியில் போர்வெல் நீரில் குளித்த அவலம்!
மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனம்.. நாளை இந்த ஊர்களில் கரண்ட் இருக்காது!
மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனம்.. நாளை இந்த ஊர்களில் கரண்ட் இருக்காது!
பெற்றோர் செய்த சின்ன தவறு.. நள்ளிரவில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி - இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
பெற்றோர் செய்த சின்ன தவறு.. நள்ளிரவில் காருடன் கடத்தப்பட்ட சிறுமி - இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate: 11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
11 மாத காத்திருப்பு..! ரூ.1 லட்சத்திற்கும் கீழ் சரிந்த தங்கம் விலை - ஒரு சவரன், கிராம் எவ்வளவு தெரியுமா?
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
திருமணத்திற்கு மறுத்த பெண்.. சதி செய்த நாற்பது வயது ரோமியோ! போக்சோவில் சிக்கிய அப்பாவி இளைஞன்!
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
சூரசம்ஹாரத்தில் முருகனையும், விஜய்யையும் சேர்த்துப் பாடியது ஏன்? புஷ்பவனம் குப்புசாமி விளக்கம்
Anbil Mahesh: ”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
”எல்லாம் தெரியும்” அன்பில் மகேஷை போட்டுக்கொடுத்த முத்துக்குமார்? ஜாமின் கனவு தானா?
Sonia Gandhi:
Sonia Gandhi: "இந்திரா காந்தியை அம்மானு கூப்பிட விருப்பமில்ல..." உண்மையை உடைத்த சோனியா காந்தி
TN Weather News: தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
தீவிரமடையும் அக்வான் புயல், இன்று எங்கெல்லாம் கனமழை? மீனவர்களுக்கு வார்னிங் - தமிழக வானிலை அறிக்கை
Viral Video:
"எங்க அப்பனையே அடிக்கிறீங்களா" கடையை அடித்து நொறுக்கிய 2 மகள்கள் - வீடியோ வைரல்
Anbil Mahesh: 23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
23 நாட்களாக சிறையில்..! அன்பிலிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? ”உடல்நிலை” பேரில் கோரிக்கை
Embed widget