மேலும் அறிய

Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிவு இன்றி காணப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மழை பொழிவு இன்றியும் காணப்பட்டது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

வங்க கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனை தொடர்ந்து அதே மெதுவாக நகர்ந்து வரும் நிலையில், நாளை நவம்பர் 30-ம் தேதி மாமல்லபுரம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

மழை எச்சரிக்கை மாவட்டங்கள் 

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

நகராமல் நின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலம் 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே தொடர்கிறது. அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறி தரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டது. இந்த நிலையில் மிக மெதுவாகவே நகர்ந்து வந்தது. 10 கிலோமீட்டர் வேகத்தில் தொடங்கி 3 கிலோமீட்டர் வேகம் வரை நகர்ந்து வந்த அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில மணி நேரங்கள் நகராமல் அப்படியே நின்றது.


Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

இந்நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 9 கிமீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று 28 நவம்பர் 2024 அன்று நள்ளிரவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 390 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 330 கி.மீ. தொலைவிலும், நிலைக் கொண்டுள்ளது.


Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

புயலாக மாறாது 

இது வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை நவம்பர் 30-ம் தேதி காலை 45-55 கி.மீ வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே வட தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் ஃபெங்கல் புயலாக மாறாது என வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. 

இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக மழை பதிவாகி வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிய நிலையில், பல பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.


Rain Update: கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறையில் இதுதான் மழை

மாவட்டத்தின் மழையளவு 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக செம்பனார்கோயில் 8.80 மில்லி மீட்டர் மழையும், குறைந்த அளவாக மணல்மேடில் 2 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை - 6 மில்லி மீட்டர், சீர்காழி -7.60 மில்லி மீட்டர் தரங்கம்பாடியில் மழைப்பொழிவு இல்லை, கொள்ளிடம் - 6 மில்லி மீட்டர், மணல்மேடு 2 மில்லி மீட்டர், செம்பனார்கோயில் - 8.80 மில்லி மீட்டர் என மழையானது பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 5.07 மில்லி மீட்டர் (0.5 செமீ) மழையானது பதிவாகியுள்ளது. மொத்த மழை அளவு 30.40 மில்லி மீட்டர் ( 3 செமீ ) ஆகும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

செதுக்கப்பட்ட உடலமைப்பு, அனல் பறந்த போட்டி! நடுவர்களையே வியக்க வைத்த சீர்காழி முகேஷ்!
செதுக்கப்பட்ட உடலமைப்பு, அனல் பறந்த போட்டி! நடுவர்களையே வியக்க வைத்த சீர்காழி முகேஷ்!
அதிகாரப் நாற்காலியில் அமர ஆசையா? மயிலாடுதுறையில் குரூப் 1 தேர்வுக்கு 'ஃப்ரீ கோச்சிங்'!
அதிகாரப் நாற்காலியில் அமர ஆசையா? மயிலாடுதுறையில் குரூப் 1 தேர்வுக்கு 'ஃப்ரீ கோச்சிங்'!
Mayiladuthurai Power Shutdown (16.05.2026) :கவனம் மக்களே! மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே 16) மின்சாரம் கிடையாது: எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?
Mayiladuthurai Power Shutdown (16.05.2026) :கவனம் மக்களே! மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (மே 16) மின்சாரம் கிடையாது: எந்தெந்த பகுதிகள் தெரியுமா..?
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
மருத்துவர சூரனால் தாக்குதலுக்கு ஆளான நந்தி பகவான்...சிலிர்க்க வைக்கும் வரலாறு...
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சீனியர்கள் OUT, இளைஞர்கள் IN ரெடியாகும் திமுக 2.0 அதிரடி காட்டும் ஸ்டாலின்
கோட் சூட் அரசியல் TRENDSET செய்த விஜய் ஈர்க்கப்படும் இளைஞர்கள்!
திருச்சி கிழக்கில் ஸ்டாலின் போட்டி?திமுக கூட்டத்தில் முடிவு!
’’பாட்டிலுக்கு 10 ரூபாய் ’’TASMAC-ல் தொடரும் அவலம்பரபரப்பு வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: உண்மையான ரிப்போர்ட்தான் எனக்கு வேணும்.. ஜுன் இறுதிக்குள் ஆக்ஷன்! நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் காட்டம்
MK Stalin: உண்மையான ரிப்போர்ட்தான் எனக்கு வேணும்.. ஜுன் இறுதிக்குள் ஆக்ஷன்! நிர்வாகிகளிடம் மு.க.ஸ்டாலின் காட்டம்
2500 Uthavi Thogai: பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை எப்போது? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
2500 Uthavi Thogai: பெண்களுக்கு ரூபாய் 2500 உதவித்தொகை எப்போது? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
விவாகரத்து கிடைக்கும்வரை நடிக்க மாட்டேன்...நடிகர் ரவி மோகன் அதிரடி பேட்டி
CM Vijay: பள்ளி, கல்லூரிகளை குறிவைத்த சிஎம் விஜய்..! போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி உத்தரவு
பள்ளி, கல்லூரிகளை குறிவைத்த சிஎம் விஜய்..! போதைப்பொருட்களை ஒழிக்க அதிரடி உத்தரவு
BYD Electric Cars: எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச்; 3 சக்கரத்திலும் ஓடும்- புத்தம்புது தொழில்நுட்ப வசதிகள்!
BYD Electric Cars: எலக்ட்ரிக் காரில் 1380 கி.மீ. ரேஞ்ச்; 3 சக்கரத்திலும் ஓடும்- புத்தம்புது தொழில்நுட்ப வசதிகள்!
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
சூர்யாவின் ‘கருப்பு’ பட ரிலீஸ்... கருப்பு சட்டையில் ரசிகர்கள் மாஸ் என்ட்ரி...
ADMK DMK: ”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
”விஜய் ஆட்சி நம்ம கண்ட்ரோல்ல தான் இருக்கணும்” அதிமுகவிற்கு சட்ட உதவிகளை வழங்க திமுக முடிவு?
Mahindra Hybrid SUV: லிட்டருக்கு 25KM மைலேஜுடன் 7 சீட்டர் ஹைப்ரிட் ஆன் தி வே..! மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆதிக்கம்
லிட்டருக்கு 25KM மைலேஜுடன் 7 சீட்டர் ஹைப்ரிட் ஆன் தி வே..! மஹிந்த்ராவின் எஸ்யுவி ஆதிக்கம்
Embed widget