மேலும் அறிய

மயிலாடுதுறை கிராமசபை: குடியரசு தினத்தில் முக்கிய அறிவிப்பு! உங்கள் ஊரின் எதிர்காலம் குறித்த விவாத பொருள் இதுதான்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள 241 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து 241 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள விரிவான செய்திக் குறிப்பு பின்வருமாறு:

நிர்வாகம் மற்றும் நிதி மேலாண்மை குறித்த விவாதம்

இந்த கிராமசபைக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக ஊராட்சி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை கருதப்படுகிறது.

* செலவின அறிக்கை: கடந்த 01.04.2025 முதல் 31.12.2025 வரையிலான காலக்கட்டத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த அறிக்கை மற்றும் இதர விவரங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.

* தணிக்கை அறிக்கை: கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கையினை (Audit Report) பொதுமக்கள் முன்னிலையில் வைத்து விவாதித்து உரிய ஒப்புதல் பெறுதல் இக்கூட்டத்தின் முக்கிய கடமையாகும்.

சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள்

தற்போதுள்ள பருவகால மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தூய்மைப் பணிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களைச் சீரமைப்பது குறித்து பொதுமக்களின் ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (100 நாள் வேலை)

வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2025-2026-ஆம் நிதியாண்டிற்கான தொழிலாளர் வரவு-செலவுத் திட்டத்தினை, டிசம்பர் 31 வரையிலான முன்னேற்ற அறிக்கையுடன் ஒப்பிட்டு விவாதிக்கப்படும். மேலும், 2026-2027-ஆம் நிதியாண்டிற்காக புதிதாக உருவாக்கப்பட்ட ‘வளர்ச்சியடைந்த இந்தியா – ஊரக வேலைவாய்ப்பு உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தின்’ கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய பணிகளின் பட்டியலை முக்கியப் பிரிவுகளில் தேர்வு செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும்.

குடிநீர் மற்றும் சுகாதார சான்றிதழ் அங்கீகாரம்

மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களான ‘தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்)’ மற்றும் ‘ஜல் ஜீவன்’ திட்டங்களின் சாதனைகளை இச்சபையில் அங்கீகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

* சுத்தமான ஊராட்சி: வீடு தோறும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட சான்றிதழ் பெற்றுள்ள ஊராட்சிகளுக்கு “சுத்தமான மற்றும் சுகாதாரமான ஊராட்சி” என கிராம சபையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

* ஜல் ஜீவன் திட்டம்: 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகள், “வீடுதோறும் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி” எனத் தீர்மானம் நிறைவேற்றி, சான்றிதழ் வழங்கப்படும்.

பாசனம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு

*சிறு பாசன ஏரிகள்: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், சிறு பாசன ஏரிகளைப் புதுப்பித்தல் மற்றும் தூர்வாருதல் குறித்து விவாதிக்கப்படும்.

* தொகுதி மேம்பாட்டுத் திட்டம்: நடப்பாண்டில் (2025-26) மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் வரும் நிதியாண்டில் (2026-27) முன்னுரிமை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

முக்கிய விவாதப் பொருட்கள் - ஒரு பார்வையில்

மாவட்ட ஆட்சியரின் வேண்டுகோள்:

"கிராமசபை என்பது ஜனநாயகத்தின் அடிப்படைத் தூண். இதில் அனைத்து ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எவ்விதத் தொய்வுமின்றி கலந்து கொள்ள வேண்டும். தங்கள் ஊராட்சியின் தேவைகள், கோரிக்கைகள் மற்றும் திட்டங்களில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி விவாதிக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்," என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இந்த கிராமசபை கூட்டங்கள் அனைத்தும் உரிய நேரத்தில் அந்தந்த ஊராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் தங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ள பட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN 10th Result 2026: பத்தாம் வகுப்பு ரிசல்ட்: மயிலாடுதுறைக்கு விழுந்த பலத்த அடி! 23-வது இடத்திலிருந்து 33-க்கு சரிந்தது ஏன்?
TN 10th Result 2026: பத்தாம் வகுப்பு ரிசல்ட்: மயிலாடுதுறைக்கு விழுந்த பலத்த அடி! 23-வது இடத்திலிருந்து 33-க்கு சரிந்தது ஏன்?
நாற்பது ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது: காரைக்கால் - பேரளம் தண்டவாளங்களில் மீண்டும் கேட்கும் ரயில்வே ஹார்ன்!
நாற்பது ஆண்டு கால ஏக்கம் தீர்ந்தது: காரைக்கால் - பேரளம் தண்டவாளங்களில் மீண்டும் கேட்கும் ரயில்வே ஹார்ன்!
மின் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு மின்னல் வேகத் தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
மின் நுகர்வோரின் பிரச்சினைகளுக்கு மின்னல் வேகத் தீர்வு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே...
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
₹10 எக்ஸ்ட்ரா வாங்குவது ஏன்? - சீக்ரெட் லிஸ்ட்டை உடைத்த டாஸ்மாக் ஊழியர்கள்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay Reels | அதிகாரியா? FAN BOY-ஆ?முதல்வர் மீட்டிங் LEAKED! REELS எடுத்த நபர் யார்?
Twisha Sharma : MISS புனே திடீர் மரணம்! சிக்கிய EX.நீதிபதி குடும்பம்..வரதட்சணை கொடுமை?
Tasmac Issue | ’’பாட்டிலுக்கு 10 ரூபாய்!’’TASMAC ஊழியர்கள் STRIKE..மயிலாடுதுறையில் பரபரப்பு
Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
TN 10th Result 2026: மே 22 முதல் SSLC மதிப்பெண் சான்றிதழ்; மறுகூட்டல், மறுமதிப்பீடு எப்போது?
Aadhav Arjuna: ”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
”விசிக, IUML-க்கு அமைச்சர் பதவி கொடுக்க தயார்” எடப்பாடியை கடுமையாக சாடிய ஆதவ் அர்ஜுனா
Gold and silver rate today : அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை இதோ..
அதிரடியாக 15,000 ரூபாய் சரிந்தது.! தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு குஷி- இன்றைய விலை இதோ..
TN 10th Result 2026: தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்
தனியார் பள்ளிகளை அலறவிட்ட மகளிர் பள்ளிகள் - ஆண்கள் நிலவரம்? - SSLC ரிசல்ட் விவரங்கள்
TN 10th Result Centums: அறிவியலில் சென்டம் அதிகம்.. வியப்பை ஏற்படுத்திய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
TN 10th Result Centums: அறிவியலில் சென்டம் அதிகம்.. வியப்பை ஏற்படுத்திய 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!
10th Result District Wise: 10ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை! டாப் 5 மாவட்டங்களில் கொங்கு மிஸ்ஸிங்- லிஸ்ட்
10th Result District Wise: 10ஆம் வகுப்பில் முதலிடம் பிடித்த புதுக்கோட்டை! டாப் 5 மாவட்டங்களில் கொங்கு மிஸ்ஸிங்- லிஸ்ட்
TN 10th Result 2026: வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 5 வழிகளில் காணலாம்- எவ்ளோ தேர்ச்சி?
TN 10th Result 2026: வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்; 5 வழிகளில் காணலாம்- எவ்ளோ தேர்ச்சி?
TN Cabinet: இஸ்லாமியர், ரசிகர் மன்ற நிர்வாகிகள், டெல்டாக்காரர் - CM விஜயின் புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி?
இஸ்லாமியர், ரசிகர் மன்ற நிர்வாகிகள், டெல்டாக்காரர் - CM விஜயின் புதிய அமைச்சரவை பட்டியல் ரெடி?
Embed widget