மேலும் அறிய

மயிலாடுதுறையில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் : கொள்முதல் நிலையங்கள் திறந்தும் பயனில்லை - விவசாயிகள் வேதனை..

மயிலாடுதுறையில் சர்வர் கோளாறால் நெல் கொள்முதல் தடைபட்டதால் நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இணையதள சர்வர் பிரச்சனை காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் இயக்கம் முற்றிலும் முடங்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், சித்தர்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் முன்பாக வீதியில் இறங்கி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போதிய தண்ணீர் இல்லாத நிலையிலும் நிலத்தடி நீரை மட்டுமே நம்பி சாகுபடி செய்த குறுவை நெல்லை விற்க முடியாமல், ஆயிரக்கணக்கான மூட்டைகளுடன் கொளுத்தும் வெயிலிலும் மழையிலும் காத்துக்கிடக்கும் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி விவசாயிகள் குரலெழுப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறுவை அறுவடையும் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகளும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடப்பு குறுவைப் பருவத்தில் போதிய மேட்டூர் பாசன நீர் கிடைக்காத போதிலும், விவசாயிகள் தங்களின் சொந்த முயற்சியால் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சுமார் 98 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தீவிரமாக சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். தற்பொழுது பயிர்கள் நன்கு விளைந்து மாவட்டம் முழுவதும் குறுவை அறுவடை பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை உடனுக்குடன் அரசுக்கு விற்பனை செய்வதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் மாவட்டம் முழுவதும் 110 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க அரசு சார்பில் முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், அரசு அனுமதி அளித்திருந்த போதிலும் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியப் போதிய சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்படாததால், இதுவரை வெறும் 31 இடங்களில் மட்டுமே கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அரைகுறையாகச் செயல்பட்டு வருகின்றன. 

எஞ்சிய 79 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர். திறக்கப்பட்டுள்ள குறைந்த அளவிலான மையங்களையாவது நம்பி விவசாயிகள் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை அங்கு கொண்டு வந்து குவித்துள்ளனர். ஒவ்வொரு கொள்முதல் நிலைய வளாகத்திலும் சுமார் 5,000 முதல் 10,000 நெல் மூட்டைகள் வரை விற்பனைக்காகக் திறந்தவெளியில் தேங்கிக் கிடக்கின்றன. மழை பெய்தால் நெல் மூட்டைகள் முளைத்து வீணாகிவிடும் என்ற அச்சத்தில் விவசாயிகள் அல்லும்பகலும் அங்கேயே தங்கிப் பாதுகாத்து வருகின்றனர்.

முடங்கிய ஆன்லைன் கொள்முதல் சேவை

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், இன்று வழக்கம்போல் விவசாயிகள் நெல்லை அளவீடு செய்வதற்காகக் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு வந்தபோது அவர்களுக்குப் பேரிடியாகச் செய்தி காத்திருந்தது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயன்பாட்டில் உள்ள மென்பொருளின் கணினி சர்வர் திடீரெனப் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாகத் தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் நெல் வரவு வைக்கும் பணிகள் மற்றும் விவசாயிகளுக்குப் ரசீது வழங்கும் பணிகள் முற்றிலும் தடைபட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்கனவே ஒருசில இடங்களில் மட்டுமே இயங்கி வந்த 31 கொள்முதல் நிலையங்களும் இந்தச் சர்வர் பிரச்சனை காரணமாக இன்று காலை முதல் எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரெனச் செயல்பாட்டை நிறுத்தின. இதனால் அறுவடை செய்த நெல்லுடன் பல நாட்களாகக் காத்துக்கிடந்த விவசாயிகள் அதிர்ச்சியும் கடும் அவதியும் அடைந்தனர்.

நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலகம் முற்றுகை

அரசு கொள்முதல் நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டதைத் தொடர்ந்து, பொறுமையிழந்த விவசாயிகள் பல்வேறு கிராமங்களிலிருந்தும் ஒன்றிணைந்து மயிலாடுதுறையை அடுத்துள்ள சித்தர்காட் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை கோரியும் அலுவலகத்தின் நுழைவாயில் முன்பாகச் சாலையில் அமர்ந்து விவசாயிகள் திடீர் சாலை மறியல் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “திறக்கப்படாத அனைத்துக் கொள்முதல் நிலையங்களையும் உடனடியாகத் திறக்க வேண்டும், சர்வர் பிரச்சனையை நிரந்தரமாகச் சரிசெய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் ஆட்களை உடனடியாக நியமிக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காரசாரமான முழக்கங்களை எழுப்பினர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுச் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை மற்றும் உறுதிமொழி

போராட்டம் குறித்துத் தகவலறிந்த காவல் துறையினரும், நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, சென்னை தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இணையதள சர்வர் முடங்கியதாகவும், அதனைச் சரிசெய்யும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். மேலும், நிலுவையில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாகக் கொள்முதல் செய்ய ஏதுவாகக் கூடுதல் தொழிலாளர்களை நியமிக்கவும், மூடப்பட்டுள்ள எஞ்சிய கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறந்து தடையின்றி நெல் கொள்முதல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைளையும் எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த எழுத்துப்பூர்வமான உறுதிமொழியைத் தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர். எனினும், வாக்குறுதி அளித்தபடி உடனடியாகச் சர்வர் பிரச்சனையைச் சரிசெய்து கொள்முதல் விரைவுபடுத்தப்படாவிட்டால் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
திடீரென மாற்றப்பட்ட ரயில் சேவை: ரயில் பயணிகளுக்கு ரயில்வே-யின் அவசர செய்தி!
இயற்கை வேளாண் பண்ணையை மீட்கக் கோரி மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
இயற்கை வேளாண் பண்ணையை மீட்கக் கோரி மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
"அரசு செய்யல... நாங்களே பண்ணிக்கிறோம்!" - ஆட்சியாளர்களுக்கு பாடம் புகட்டிய கிராமம்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget