முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
பேங்க் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2026: 205 அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு- உங்கள் கனவு வங்கிப் பணிக்கு விண்ணப்பிக்க இதுவே நேரம்!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியா (BOI), பல்வேறு பிரிவுகளில் ஸ்கேல் 4 (Scale 4) வரையிலான அதிகாரி (Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்தின் மூலம் மொத்தம் 205 அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் bankofindia.bank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு 2026 செப்டம்பர் 10 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது. விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றைத் தீர்மானிப்பதற்கான அடிப்படைத் தேதியாக 2026 ஆகஸ்ட் 1 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் பணி நிலைக்கேற்ப (Scale) அடிப்படை சம்பளமும், அதனுடன் வங்கி விதிகளுக்கு உட்பட்ட இதர படிகள் மற்றும் சலுகைகளும் வழங்கப்படும்.
தேர்வு முறை
விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை மற்றும் தகுதியைப் பொறுத்து, ஆன்லைன் தேர்வு மற்றும்/ அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆவணங்கள் சரிபார்ப்பு
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும்போது கல்வித் தகுதி, கட்டாயச் சான்றிதழ்கள் மற்றும் பணி அனுபவம் ஆகியவற்றிற்கான ஆதார ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும்.
இவ்வாறு பதிவு செய்யும் போது பதிவேற்றம் செய்யப்படும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு அடுத்தகட்டத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள் அல்லது நிராகரிக்கப்படுவார்கள். ஆவணங்களைப் பின்னர் சமர்ப்பிக்கவோ அல்லது அதுகுறித்து பின்பு விசாரிக்கவோ எவ்வித அனுமதியும் வழங்கப்பட மாட்டாது என அறிவிப்பில் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு விவரம்
இதற்கான ஆன்லைன் தேர்வு மொத்தம் 100 நிமிடங்களுக்கு நடைபெறும். இதில் 25 மதிப்பெண்களுக்கு ஆங்கில மொழித் தேர்வும், விண்ணப்பிக்கும் துறை சம்பந்தப்பட்ட தொழில்முறை அறிவுத் தேர்வு (Professional Knowledge Test) 100 மதிப்பெண்களுக்கும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு என்பதால், தேர்வர்கள் கவனத்துடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டியது முக்கியம்.
இந்த வேலை தொடர்பான கூடுதல் விவரங்களை, வங்கி வெளியிட்ட https://bankofindia.bank.in/documents/20121/28761619/FINAL_NOTICE-sep-2.pdf என்ற முழு அறிவிக்கையை க்ளிக் செய்து அறியலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















