மேலும் அறிய

அலக்கழிக்கப்படும் மக்கள்: மயிலாடுதுறை குறைதீர்க்கும் கூட்டத்தில் மலையெனக் குவிந்த மனுக்கள்...

மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஒரேநாளில் 442 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், நூற்றுக்கணக்கான கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளுடன் திரண்டதால் அப்பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய அரசு பொறுப்பேற்ற பிறகும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டும் வகையில் பொதுமக்கள் திரளாக வந்து மனுக்களை அளித்து வருகின்றனர்.

அரசு இயந்திரத்தின் மந்தமான செயல்பாடும், அடிப்படைச் சேவைகளைக்கூட தங்குதடையின்றி வழங்க முடியாத புதிய ஆட்சியின் நிர்வாகக் குறைபாடுகளுமே இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் மீண்டும் மீண்டும் குவிவதற்கு முதன்மையாக அமைவதாகச் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

அடிப்படைத் தேவைகளுக்காக அலக்கழிக்கப்படும் பொதுமக்கள்

இன்றைய கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 41 மனுக்களும், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தி 64 மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டன. புதிய அரசு ஆட்சிக்கு வந்தும் கிராமப்புறங்களில் முறையான குடிநீர் வசதி, சாலை வசதி மற்றும் தெருவிளக்குகள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படவில்லை என்பதை இந்த மனுக்களின் எண்ணிக்கை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அதோடு, நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சினைகள் தொடர்பாக 28 மனுக்களும், பல்வேறு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றக் கோரி 27 மனுக்களும் பெறப்பட்டுள்ளன.

கள நிலவரத்தில் அரசு அதிகாரிகளின் கண்காணிப்பு இன்மை மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்காத அலட்சியப் போக்கின் காரணமாகவே ஆக்கிரமிப்புகளும் நிலத்தகராறுகளும் அதிகரித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மகளிர் உரிமைகளும் முடங்கிப்போன வாக்குறுதிகளும்

மக்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகள் வெறும் காகித அளவிலேயே முடங்கிக் கிடப்பதை நிரூபிக்கும் வகையில், மகளிர் உரிமைத்தொகை வேண்டி மட்டும் அதிகபட்சமாக 149 மனுக்கள் குவிந்துள்ளன. புதிய ஆட்சியின் கீழ் தகுதியான பல மகளிரின் பெயர்கள் திட்டமிட்டு விடுக்கப்படுவதாகவும், முறையீடு செய்தும் பல மாதங்களாகத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் தாய்மார்கள் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்தனர்.

மேலும் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 37 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, உதவித்தொகை, வங்கிக்கடன் மற்றும் உபகரணங்கள் கோரி 23 மனுக்களும் வந்துள்ளன. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிலவும் நிர்வாகச் சிக்கல்களால் விளிம்புநிலை மக்கள் தங்களின் வாழ்வாதார உதவித்தொகையைப் பெற முடியாமல் அரசு அலுவலகங்களை நோக்கி தினமும் அலைய வேண்டிய அவலநிலை நீடிக்கிறது.

வேலையில்லாத் திண்டாட்டமும் பெருகும் புகார்களும்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிய புதிய ஆட்சியின் அவல நிலையைச் சுட்டிக்காட்டும் விதமாக, வேலைவாய்ப்பு கோரி 24 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது தவிர, துறை சார்ந்த அதிகாரிகளின் முறைகேடுகள் மற்றும் செயல்பாடற்ற தன்மையைக் கண்டித்து பல்வேறு புகார்கள் தொடர்பாக 49 மனுக்கள் என மொத்தம் 442 மனுக்கள் இன்றைய ஒரே நாளில் பெறப்பட்டுள்ளன.

கூட்டத்தின் முடிவில், வரப்பெற்ற மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தெளிவான விவரங்களை மனுதாரர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதிகாரிகளின் முன்னிலையும் மக்களின் எதிர்பார்ப்பும்

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, சமூகப் பாதுகாப்புத் திட்டத் துணை ஆட்சியர் கீதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். இருப்பினும், வாரம் தோறும் பலநூறு மனுக்களைப் பெற்றுக்கொண்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதோடு கடமை முடிந்துவிடுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெறப்பட்ட 442 மனுக்கள் மீது வெறும் காகித அளவிலான விசாரணைகளோடு நிறுத்திக் கொள்ளாமல், புதிய ஆட்சியின் செயல்பாடற்ற தன்மையை மாற்றி, மக்களின் கோரிக்கைகளுக்குக் களத்தில் விரைந்து தீர்வுகாண அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor
Advertisement

தலைப்பு செய்திகள்

போதையில் பறந்த வாகனங்கள், அதிரடியாகப் பறிமுதல் செய்த போலீஸ்: சீர்காழியில் ஒரே நாளில் 100 வழக்குகள் பதிவு!
போதையில் பறந்த வாகனங்கள், அதிரடியாகப் பறிமுதல் செய்த போலீஸ்: சீர்காழியில் ஒரே நாளில் 100 வழக்குகள் பதிவு!
உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
உங்கள் வாக்குச்சாவடி இடம் மாறியுள்ளதா? தேர்தல் துறையின் முக்கிய அறிவிப்பு..
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள் - முழு விவரம்!
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
மீன்வளர்ப்பு மானியத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி? 
Advertisement
Advertisement

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh: முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
முடியாத சிறைவாசம்..! அன்பில் மகேஷ் ஜாமின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் - நவ.16 வரை புழல் தானா?
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
தேதி குறிக்கும் தேர்தல் ஆணையம்.. 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் எப்போது? ஜனவரியில் வருது அறிவிப்பு!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK vs DMK: புத்தக ஊழலை கையில் எடுத்த தவெக... சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த திமுக! பரபரக்கும் அரசியல் களம்!
TVK Vijay: மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
மீட்டிங்க போடுங்க..! சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள் - வார்னிங்கா? நடவடிக்கையா? CM விஜய் முடிவு?
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Skanda Sashti festival 2026: அரோகரா..! தொடங்கியது கந்தசஷ்டி திருவிழா! திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்!
Anbil Mahesh: 16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
16 நாட்களாக சிறையில்..! அன்பில் மகேஷிற்கு இன்று ஜாமின் கிடைக்குமா? நீதிமன்ற தீர்ப்பு என்ன?
Renault SUV: 5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
5 ஸ்டார் காருக்கு ரூ.2.10 லட்சம் அதிரடி தள்ளுபடி..! 4.99% வட்டியில் EMI - 19KM மைலேஜ் SUV-யின் விவரங்கள்
Car Tips: ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
ஸ்டார்ட் செய்ததும் காரை டாப் ஸ்பீடிற்கு முறுக்கலாமா? பெட்ரோல், டீசல், CNG கார்களுக்கான டிப்ஸ்
Embed widget