மேலும் அறிய

அடப்பாவமே.. மதியம் 12 மணிக்கு வந்தவங்களுக்கு அதிர்ச்சி! மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தமாக டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.10 கூடுதல் கட்டண விவகாரத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் முன்னறிவிப்பின்றி பூட்டப்பட்டதால் மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் முன்னறிவிப்பின்றி இன்று திடீரென மூடப்பட்டதால், மதுப்பிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் விவகாரத்தில் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் காலி பாட்டில்களை கையாளுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வலியுறுத்தி, ஊழியர்கள் அனைவரும் தஞ்சாவூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்கச் சென்றுள்ளதால் இந்த அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.

ரூ.10 கூடுதல் கட்டண விவகாரமும் தற்காலிக முடக்கமும்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களின் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட, கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக நீண்ட நாட்களாகப் புகார்கள் எழுந்து வந்தன. இந்த விவகாரம் அண்மைக்காலமாகப் பெரும் பொது விவாதப் பொருளாக மாறியதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி, "மதுபானங்களுக்கு கூடுதல் விலை பெற்றால் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி சட்டத்திற்குப் புறம்பாக கூடுதலாக 10 ரூபாய் வசூல் செய்ததாக, கடந்த சில நாட்களில் மட்டும் 4 டாஸ்மாக் ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிர்வாகத்தின் இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கை, டாஸ்மாக் ஊழியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. தங்களுக்குப் பின்னால் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாமல், நிர்வாகம் தங்களைப் பலியாடாக்குவதாக ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ஊழியர்களின் 6 அம்சக் கோரிக்கைகள்

தங்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், கடைகளை நடத்துவதில் உள்ள கடுமையான நடைமுறைச் சிரமங்களுக்குத் தீர்வு காணவும் வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகப் போராட்டத்தில் குதித்துள்ளனர். அவர்கள் முன்வைக்கும் முக்கிய 6 அம்சக் கோரிக்கைகள்;

*கூடுதல் பணியாளர்கள் நியமனம்: தினசரி ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக விற்பனையாகும் டாஸ்மாக் கடைகளுக்கு, உடனடியாக தலா 4 பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். தற்போதைய பணியாளர் பற்றாக்குறையால் பணிச்சுமை தாங்க முடியாத அளவில் உள்ளது.

* முறையான கடை வாடகை: டாஸ்மாக் நிர்வாகம் வழங்கும் மாதாந்திர வாடகை போதுமானதாக இல்லை. இதனால் கடை ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கட்டிட உரிமையாளர்களுக்கு தினசரி வாடகையாக 5,000 ரூபாய் வரை கொடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே, தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப போதுமான வாடகையை நிர்வாகமே முழுமையாக நிர்ணயம் செய்து வழங்க வேண்டும்.

*காலி பாட்டில் சேகரிப்புப் பணியாளர்கள்: காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவதற்கு எனத் தனியாகப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்குரிய ஊதியத்தையும் நிர்வாகமே நேரடியாக வழங்க வேண்டும்.

*சுமைதூக்கும் கூலி உயர்வு: மதுபானப் பெட்டிகளை லாரிகளில் இருந்து இறக்குவதற்குக் கூலியாக (இறக்கு கூலி) பெட்டி ஒன்றுக்கு ரூபாய் 8 வீதம் வழங்கப்பட வேண்டும்.

*சேதமாகும் பாட்டில்களுக்கு இழப்பீடு: போக்குவரத்தின் போதோ அல்லது கையாளுதலின் போதோ உடையும் மது பாட்டில்களுக்குரிய நஷ்டத் தொகையை ஊழியர்கள் தலையில் கட்டாமல், நிர்வாகமே முழுமையாக ஏற்க வேண்டும்.

*காவல்துறை பாதுகாப்பு: கடைகளிலும், பணப் பரிவர்த்தனையின் போதும் ஊழியர்களுக்கு உரிய முறையில் காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் நேரில் அளிப்பதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் இன்று திரண்டு சென்றனர்.

கடை வாசலில் தவிக்கும் ‘குடிமகன்கள்’

ஊழியர்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூருக்குப் புறப்பட்டுச் சென்றதால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 43 டாஸ்மாக் மதுபானக் கடைகளும் இன்று காலை முதல் பூட்டப்பட்டுக் கிடந்தன. கடைகள் அடைக்கப்படும் என்பது குறித்து எவ்வித முன்னறிவிப்பும் இல்லாததால், வழக்கம்போல் மதியம் 12 மணிக்கு மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் கடைகள் பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். "மதியம் கடை திறக்கும் என்று காத்துக் கொண்டிருந்தோம். ஆனால் ஒரு கடையைக் கூட திறக்கவில்லை. யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை" என்று ஏமாற்றத்துடன் தெரிவித்தார் அங்கிருந்த மதுப்பிரியர் ஒருவர்.

தீவிரம் காட்டிய பல மதுப்பிரியர்கள், "எப்படியும் கடை திறந்துவிடுவார்கள்" என்ற நம்பிக்கையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் கடைகளின் வாசலிலேயே மணி கணக்காகக் தவம் கிடக்கத் தொடங்கினர். சிலர் பக்கத்து மாவட்ட எல்லைகளை நோக்கி மதுபானம் வாங்குவதற்காகப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

மனமகிழ் மன்றத்தில் ‘நோ என்ட்ரி’ (No Entry) போர்டு

மயிலாடுதுறை நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால், மதுப்பிரியர்களின் பார்வை அங்குள்ள ஒரே ஒரு தனியார் மனமகிழ் மன்றத்தின் (Recreation Club) மீது திரும்பியது. அங்கும் கூட்டம் அலைமோதத் தொடங்கிய சூழலில், அந்த நிர்வாகம் உடனடியாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, மன்றத்தின் முகப்பில் "மயிலாடுதுறை மனமகிழ் மன்றத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானம் வழங்கப்படும்" என்ற அறிவிப்புப் பலகை (Notice Board) வைக்கப்பட்டது. இதனால் பொதுவான மதுப்பிரியர்கள் அங்கேயும் மதுபானம் கிடைக்காமல் ஏமாற்றத்துடன், பெருமூச்சுடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.

அடுத்து என்ன? - பரபரக்கும் சூழல்

தஞ்சாவூரில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் ஊழியர்களின் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து, கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த மதுப்பிரியர்களும் காத்துக்கிடக்கின்றனர். இந்தத் திடீர் முடக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
அரசு பணி வாய்ப்பு: வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக். 17 கடைசி நாள்.
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
புனிதப் பயணம் செல்வோர் கவனத்திற்கு: தமிழ்நாடு அரசின் ரூ.37,000 மானியம் பெற ரெடியா?
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
மத்திய கல்வி நிறுவனங்களில் BC, MBC மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
Embed widget