மேலும் அறிய

முதலமைச்சர் கைகளால் விருது பெற ஒரு அரிய வாய்ப்பு: நீங்களும் தகுதியானவரா என்று பாருங்கள்!

தமிழக அரசின் மகளிர் நல விருதுகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுத்தியுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண்கள் முன்னேற்றத்திற்காக மிகச்சிறந்த முறையில் சேவையாற்றி வரும் சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு, நடப்பு 2026-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சரால் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், செய்திக்குறிப்பு ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள விரிவான செய்தி விவரம் பின்வருமாறு;

விருதுக்கான தகுதி அளவுகோல்கள்

பெண்கள் நலம், அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கௌரவிக்கும் பொருட்டு இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான தகுதிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக சேவகர்களுக்கான தகுதிகள்

*இருப்பிடம்: விருதுக்கு விண்ணப்பிக்கும் சமூக சேவகர்கள் கண்டிப்பாகத் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராக இருக்க வேண்டும்.

* வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் அவசியம்.

* சேவைக் காலம்: குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த பல்வேறு நற்பணிகளில் மற்றும் மகளிர் மேம்பாட்டு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டவராக இருக்க வேண்டும்.

* பங்களிப்பு: பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான தனித்துவமான செயல்பாடுகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல் மற்றும் நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, பெண்களின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்குத் தொண்டாற்றியவராக இருத்தல் வேண்டும்.

தொண்டு நிறுவனங்களுக்கான தகுதிகள்

* அரசு அங்கீகாரம்: சமூக சேவை புரிந்து வரும் தொண்டு நிறுவனங்கள் கண்டிப்பாக அரசு அங்கீகாரம் பெற்ற (Registered NGO) அமைப்பாக இருக்க வேண்டும்.

* செயல்பாடுகள்: பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தன்னிறைவு போன்ற முன்னேற்றப் பாதைகளுக்குச் சிறப்பாக வழிவகுத்து, சேவை புரிந்து வரும் நிறுவனமாக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கிய தேதிகள்

இந்த விருதுகளுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ள மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரு முறைகளிலும் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள விண்ணப்பம் (ஆன்லைன்)

தகுதியான விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ விருதுகள் இணையதளமான https://awards.tn.gov.inஎன்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 19.06.2026

மேற்படி இணையதளம் வழியாகப் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே தகுதிப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நேரடி ஆவணங்கள் சமர்ப்பிப்பு (ஆஃப்லைன் நடைமுறை)

இணையதளத்தில் விண்ணப்பித்த பின்னர், விண்ணப்பதாரர்கள் தங்களது ஆவணங்களை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும். 

படிவம் பெறுதல்: இணையதளத்தில் விண்ணப்பித்த நகலுடன் (Online Application Printout), மயிலாடுதுறை மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரில் தொடர்புகொண்டு, இந்த விருதுக்கான பிரத்யேக விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

காவல்துறை சான்றிதழ்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், சமூக சேவகர் வசிக்கும் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட "குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை" (No Criminal Case Background)** என்பதற்கான அசல் நன்னடத்தைச் சான்றிதழை இணைக்க வேண்டும்.

ஆவணத் தொகுப்பு (Booklet): தாங்கள் ஆற்றிய சமூக சேவைகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய விரிவான ஆவணங்களைத் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியாக 3 செட் புத்தக வடிவில் (3 Sets of Booklet) தயார் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் 3 செட் ஆவணத் தொகுப்புகள் (Booklets) வந்து சேர வேண்டிய முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம்,

அறை எண். 527, 5-வது தளம்,

மாவட்ட ஆட்சியரகம்,

மயிலாடுதுறை – 609305.

ஆவணங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 22.06.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலமாகச் சென்றடையும்படி அனுப்ப வேண்டும்.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் பெண்களின் வாழ்வாதார உயர்விற்கும், சமூக விழிப்புணர்விற்கும் அரும்பாடுபட்டு வரும் தகுதியான சமூக சேவகர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, அரசின் உயரிய விருதினைப் பெற விரைந்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
1.70 கோடி ரூபாய் TAMCO கடன்: மயிலாடுதுறையில் மாஸ் காட்டிய சிறுபான்மையினர் நலத்துறை!
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
'சைலன்ட்'டாக வீணான டீசல்... 'வயலன்ட்'டான சமூக ஆர்வலர்கள்! - அமைச்சர் காரில் ஓடிய ஏசியால் சர்ச்சை...
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
கர்நாடகாவுக்கு பதிலடி? மயிலாடுதுறையில் கரைபுரண்டு ஓடப்போகும் செயற்கை பக்தி வெள்ளம்!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
“எதிர்ப்பு தெரிவிச்சு என்ன ஆகப்போகுது?” - கடந்த 50 ஆண்டுகளில் நடக்காதது இப்போ மட்டும் நடந்திடுமா..? மேகதாது விவகாரத்தில் அமைச்சர் ஷாஜகான் அதிரடி பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget