மேலும் அறிய

சின்ன பந்தல்... செல்ல விநாயகர்... பிரம்மாண்ட சிலைகளை ஓரங்கட்டிய குட்டிஸ் விநாயகர்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை ஓரங்கட்ட வைக்கும் விதமாக குட்டிஸ்கள் தங்கள் கையால் செய்த விநாயகர் சிலை வழிபாடு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மயிலாடுதுறை: நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், வண்ணமயமான பிரம்மாண்ட சிலைகளுக்கு மத்தியில் மயிலாடுதுறை அருகே சிறுவர்கள் தங்கள் பிஞ்சு கரங்களால் களிமண்ணை பிசைந்து செய்த விநாயகர் சிலைகள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. பிரம்மாண்டமான வடிவங்களை விடவும், சிறார்கள் களிமண்ணில் வடித்த விநாயகருக்கு தனி மவுசும் ஆன்மீக ஈர்ப்பும் இருப்பது விநாயகர் சதுர்த்தி விழாவின் சிறப்பம்சமாக மாறியுள்ளது.

மாவட்டமெங்கும் 600 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழாக்குழுவினராலும் பொதுமக்களாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மயிலாடுதுறை நகரில் உள்ள முக்கிய ஆலயங்கள் மற்றும் சந்திப்புகளில் சிங்கமுக விநாயகர், ஐந்து தலை நாக விநாயகர், கற்பக விநாயகர், கஜமுக விநாயகர் எனப் பல்வேறு அழகிய வடிவங்களில் சுமார் 10 அடி உயரத்திற்கும் மேலான பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறையின் உரிய அனுமதியுடன் மாவட்டம் முழுவதும் சுமார் 600 விநாயகர் சிலைகள் வரை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு படையல்களுடன் பொதுமக்கள் பக்திச் பரவசத்துடன் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

விவசாயம் செழிக்க மழை வேண்டி சிறார்களின் களிமண் விநாயகர்

பெரியவர்கள் அமைத்துள்ள பிரம்மாண்ட பந்தல்களுக்கு இடையே, மயிலாடுதுறை அருகே உள்ள பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் காட்டிய ஆன்மீக ஆர்வமும் சமூக அக்கறையும் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. அக்கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தாங்களாகவே களிமண்ணை எடுத்து வந்து தங்கள் பிஞ்சு விரல்களால் விநாயகர் சிலையை அழகாக வடித்தெடுத்துள்ளனர். பின்னர் தாங்களே சிறிய பந்தல் அமைத்து, அந்த களிமண் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து, மலர்களாலும் படையல்களாலும் அலங்கரித்து உற்சாகத்துடன் வழிபாடு நடத்தினர். 

மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்க முடியும், விவசாயம் செழித்தால் மட்டுமே அனைவருக்கும் உணவு கிடைக்கும் என்பதை உணர்ந்த அந்தச் சிறுவர்கள், தங்களுக்குச் சாப்பாடு அளிக்கும் விவசாயம் செழிக்க மழை பெய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் இந்த வழிபாட்டை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். சிறுவர்களின் இந்த நெகிழ்ச்சியான வழிபாட்டை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிட, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடற்கரையில் கரைக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்

விநாயகர் சதுர்த்தி வழிபாடுகள் நிறைவுற்றதும், பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. அந்த வகையில் சங்கரன்பந்தல் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் தரங்கம்பாடி கடற்கரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படவுள்ளன.

அதேபோல் மயிலாடுதுறை கோட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் வரும் 15-ஆம் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டு நீர்நிலைகள் மற்றும் பூம்புகார் கடலில் கரைக்கப்பட இருக்கின்றன. சீர்காழியில் உப்பனாற்றிலும் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சிலை ஊர்வலம் மற்றும் விசர்ஜன நிகழ்வுகள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா தலைமையில் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
Mayiladuthurai Power Shutdown (06.10.2026) : மயிலாடுதுறையில் 5 மணி நேரம் மின்தடை! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா? - முழு விவரம்
எஸ்.பி. சினேகா பிரியா மேற்பார்வையில் கெத்து காட்டிய மயிலாடுதுறை பெண் காவலர்கள்!  
எஸ்.பி. சினேகா பிரியா மேற்பார்வையில் கெத்து காட்டிய மயிலாடுதுறை பெண் காவலர்கள்!  
கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்! ஒற்றை ரயில் பாதை இனி இரட்டிப்பு... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்
கும்பகோணம் மக்களுக்கு குட் நியூஸ்! ஒற்றை ரயில் பாதை இனி இரட்டிப்பு... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Gold and silver rate today : இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
இன்று நகைப்பிரியர்களுக்கு குஷியா.? தங்கத்தின் விலை குறைந்ததா.? உயர்ந்ததா.? விலை நிலவரம் இதோ..
TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை - அரசு திட்டம்
Embed widget