மேலும் அறிய

குமுறல் முடிந்தது... குளிர்ச்சி தொடங்கியது! மயிலாடுதுறை எல்லையைத் தொட்டது மேட்டூர் நீர்!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை திருவாலங்காடு கதவணையை வந்தடைந்ததை அடுத்து அதிகாரிகள் மலர் தூவி வரவேற்று 803 கனஅடி நீரைத் திறந்து விட்டனர்.

மயிலாடுதுறை: தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா மாவட்டங்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீரானது, தனது நீண்ட நெடிய பயணத்தைக் கடந்து தற்போது கடைமடை மாவட்டமான மயிலாடுதுறையை வந்தடைந்துள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக பாசனத்திற்குத் தண்ணீரின்றி வாடி நின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பும் பாசன திட்டமும்

பொதுவாக டெல்டா மாவட்டங்களின் குறுவை மற்றும் சம்பா சாகுபடிப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுவது தொன்றுதொட்டு வரும் வழக்கமாகும். ஆனால் இந்த ஆண்டு காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தாலும், அணையின் நீர்மட்டம் குறைந்த அளவிலேயே இருந்ததாலும் வழக்கமான தேதியில் தண்ணீரைத் திறக்க இயலாத சூழல் நிலவியது. இதனால் டெல்டா விவசாயிகள் தங்களது சாகுபடிப் பணிகளைத் தொடங்குவதில் பெரும் தாமதமும் கவலையும் அடைந்திருந்தனர். இந்த நிலையை போக்கும் வகையில், தென்மேற்கு பருவமழை கை கொடுத்ததைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீரை முறைப்படி திறந்து வைத்தார். தொடக்கத்தில் பாசனத்தின் தொடக்கக் கட்டத் தேவைகளுக்காக விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு, பின்னர் அணையின் நீர்வரத்து மற்றும் தேவைகளுக்கேற்ப இதன் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டது. இந்த சுழற்சியில் முதற்கட்டமாக 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அரசினாலும் நீர்வள ஆதாரத்துறையினாலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கடைமடை எல்லையில் நீர் வரத்தும் சிறப்பு வரவேற்பும்

மேட்டூரில் இருந்து புறப்பட்ட காவிரி நீரானது திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து, இன்று காலை 10 மணி அளவில் காவிரி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையை வந்தடைந்தது. மயிலாடுதுறை மாவட்டத்தின் நுழைவு வாயிலான திருவாலங்காடு முதல் கதவணை மற்றும் விக்ரமன் ஆறுகளின் தலைப்பு பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்கியை நீர் வந்தடைந்த போது, அப்பகுதியில் திருவிழா போன்ற சூழல் நிலவியது. கரையெங்கும் திரண்டிருந்த ஏராளமான விவசாயிகளும் பொதுமக்களும் காவிரி தாயை வணங்கி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து, நிகழ்விடத்தில் முகாமிட்டிருந்த நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் மற்றும் உதவி பொறியாளர் யாஷிகா ஆகியோரின் முன்னிலையில் காவிரி அன்னையை வரவேற்கும் சிறப்பு நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்றன. காவிரி ஆற்றிற்குப் புனித தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதிகாரிகளும் பொதுமக்களும் ஆற்றின் நீரில் மலர்களைத் தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பாசனத் தேவைகளுக்காக கதவணைகள் உயர்த்தப்பட்டு, நொடிக்கு 803 கன அடி தண்ணீர் விக்ரமன் ஆறு மற்றும் காவிரி முதன்மை ஆறுகளில் திறந்து விடப்பட்டது. துள்ளி ஓடி வரும் காவிரி நீரைக் கண்டு கரையோரம் திரண்டிருந்த விவசாயிகள் கைகூப்பி தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

விநியோக முறையும் அதிகாரிகளின் விளக்கமும்

காவிரி நீர் விநியோகம் தொடர்பாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் விரிவான விளக்கங்களை அளித்துள்ளனர். மேட்டூர் அணையின் பாரம்பரிய நீர் மேலாண்மை விதிகளின் படி, ஆற்றில் திறக்கப்படும் நீரானது முதன்முதலில் காவிரி கடலுடன் சங்கமிக்கும் பூம்புகாருக்குச் சற்று முன்னதாக அமைந்துள்ள மேலையூர் கடைமடை கதவணை பகுதியைச் சென்று அடைய வேண்டும். இவ்வாறு பிரதான ஆற்றில் நீர் கடைமடை வரை முழுமையாகச் சென்றடைந்த பிறகே, அதன் குறுக்கே உள்ள பிற கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்கள் மற்றும் விநியோகக் கால்வாய்களுக்குத் தண்ணீர் பிரித்து அனுப்பப்படுவது வழக்கமாகும்.

இதனடிப்படையில், தற்போது திறந்து விடப்பட்டுள்ள நீரானது அடுத்த ஓரிரு தினங்களில் மேலையூர் கடைமடை கதவணையை முழுமையாகச் சென்றடையும் என்றும், அதன் பின்னர் அனைத்துக் கிளை ஆறுகள் மற்றும் கிராமப்புற வாய்க்கால்களுக்குத் தண்ணீர் முறைப்படி பகிர்ந்து அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குதடையின்றி நீர் சென்று சேருவதை உறுதி செய்ய நீர்வளத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கோரிக்கையும் எதிர்பார்ப்பும்

நீண்ட எதிர்பார்ப்பிற்குப் பிறகு காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்துள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள காவிரி டெல்டா விவசாயிகள், அரசுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளனர். தாமதமாக நீர் வந்து சேர்ந்துள்ளதால், சம்பா சாகுபடி பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனர். எனவே, பாசனக் கால்வாய்களில் தண்ணீரை 'முறை வைப்பு' (சுழற்சி முறை) அடிப்படையில் திறக்காமல், தொடர்ந்து இடைவெளியின்றி முழு கொள்ளளவில் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தடைபடாத நீர் விநியோகம் இருந்தால் மட்டுமே கடைக்கோடி வயல்கள் வரை நீர் சென்று சேர்ந்து, சம்பா மற்றும் தாளடி சாகுபடிகளை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். காவிரி நீர் வரத்தால் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் விவசாயப் பணிகள் தற்போது களைய கட்டத் தொடங்கியுள்ளன.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
தமிழின் முதல் நாவல் தந்த வேதநாயகம் பிள்ளையின் 200-வது பிறந்தநாள்: அவரது சொந்த ஊரில் குவிந்த தமிழ் ஆர்வலர்கள்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் குண்டாஸ்... 68 தொட்ட கைது நடவடிக்கை...
மூன்று கண்கள், கருட சிறகுகளுடன் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில்: மகாளய அமாவாசையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
மூன்று கண்கள், கருட சிறகுகளுடன் அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயில்: மகாளய அமாவாசையில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
வடரங்கம் பால வடரங்கநாதர் கோயில் திருக்கல்யாணம்: திரண்டு வந்து தரிசித்த ஏராளமான பக்தர்கள்!
வடரங்கம் பால வடரங்கநாதர் கோயில் திருக்கல்யாணம்: திரண்டு வந்து தரிசித்த ஏராளமான பக்தர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
Embed widget