மேலும் அறிய
மீனவர் ராஜ்குமார் இலங்கை சுட்டுக்கொல்லப்பட்டாரா? - அறிக்கை தாக்கல் செய்ய தாசில்தாருக்கு உத்தரவு
’’இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் ராஜ்கிரண் உயிரிழந்தாக கூறப்படுகிறது’’
இலங்கை கடற்படை ரோந்து கப்பல் இடித்ததால் நடுக்கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படும் கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. கோட்டைபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய 3 பேரும் படகில் நடுகடலில் அக்டோபர் 19 ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன் மற்றும் சேவியர் ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து, இறந்த மீனவர் ராஜ்கிரணின் உடலை சர்வதேச எல்லையில் இலங்கை கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. இந்த உடலை, ராஜ்கிரணின் மனைவி பிருந்தா உட்பட உறவினர்களிடம் பெட்டியில் இருந்த உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்து விட்டனர். எனவே, ராஜ்கிரண், இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. போட்டோவில் அவர் முகத்தில் உடலில் காயங்கள் இருந்தது. எனவே, இது குறித்து தமிழக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். ராஜ்கிரண், உடலை மறு பிரேத பரிசோதனை செய்து எவ்வாறு இறந்தார் என கண்டறிய வேண்டும். உயர் காவல் அதிகாரி தரப்பில் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்." என கூறியிருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், " மீனவர் ராஜ்கிரண் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டுள்ளாரா? என கேள்வி எழுப்பி இது குறித்து கோட்டைப்பட்டினம் தாசில்தார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மார்த்தாண்டத்தை சேர்ந்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
குமரி மாவட்டம் முளன்குழியைச் சேர்ந்த ரோஸ்மேரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், " எனது கணவர் ராணுவ வீரராக ஓய்வு பெற்றவர். எனது இளைய மகன் லிவின்ராஜ் மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிவருகிறார். கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் மார்த்தாண்டம் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு காவலர்கள் எனது மகனை விசாரிக்க வேண்டும் என கூறி அழைத்துச் சென்றனர். ஷபிதா மற்றும் ராணி ஆகிய இருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தனர். மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு வழக்கறிஞருடன் சென்றபோது அங்கு எனது மகன் இல்லை. தக்கலை துணை காவல் கண்காணிப்பாளரிடம் விசாரணைக்கு அழைத்துச் சென்றிருப்பதாக தெரிவித்தனர். ஷபிதா மற்றும் ராணி ஆகிய இருவரும் அளித்த பொய் புகாரின் அடிப்படையில், எனது மகனை அழைத்துச் சென்று காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் ஏப்ரல் 30ஆம் தேதி எனது மகன் உயிரிழந்தார். இந்த வழக்கை குமரி மாவட்ட காவல்துறையினர் விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை அவர்கள் விசாரித்தால் எனது மகனின் மரணத்திற்கான காரணம் தெரியவராது. ஆகவே இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
தலைப்பு செய்திகள்
உலகம்
தமிழ்நாடு
தமிழ்நாடு
லைப்ஸ்டைல்
ட்ரெண்டிங் செய்திகள்
வினய் லால்Columnist
Opinion