மேலும் அறிய

கோவில்பட்டி மக்களின் கனவு நனவானது! வந்தே பாரத் ரயில் இனி இங்கு நிற்கும்: துரை வைகோ பெருமிதம்

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது, மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் ரயில் இனி கோவில்பட்டியிலும் நின்று செல்லும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மதிமுக மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது என்று எம்பி துரை வைகோ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துரை வைகோ ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது, மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி ஒரு வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும். இங்கு வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

கோவில்பட்டி மக்களின் கனவு நனவானது! வந்தே பாரத் ரயில் இனி இங்கு நிற்கும்: துரை வைகோ பெருமிதம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 21.09.2023 அன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார். அப்போது கோவில்பட்டியில் ரயில் நின்று செல்ல வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைத்தார். அதன் பிறகு, நான்கே நாட்களில், அதாவது 25.09.2023 அன்று, மதிமுக சார்பில் கோவில்பட்டியில் ஒரு மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துரை வைகோ தலைமை தாங்கினார். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரை வைகோ, கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும். அதற்கான முயற்சிகளை மறுமலர்ச்சி திமுக முன்னெடுக்கும் எனக் கூறினார்.

கோவில்பட்டி மக்களின் கனவு நனவானது! வந்தே பாரத் ரயில் இனி இங்கு நிற்கும்: துரை வைகோ பெருமிதம்

கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று போராட்டம் நடத்திய ஒரே இயக்கம் மதிமுக மட்டுமே என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், 18.08.2025 அன்று, துரை வைகோ மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். ரயில்வே துறை அதிகாரிகளை சந்திக்கும் போதெல்லாம் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது ரயில்வே துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மறுமலர்ச்சி திமுகவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி என்று துரை வைகோ  தெரிவித்துள்ளார். கோவில்பட்டி மக்களின் குரலாக தலைவர் வைகோ அவர்களும், நானும் தொடர்ந்து இக்கோரிக்கையை ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி வந்தோம்.

கோவில்பட்டி மக்களின் கனவு நனவானது! வந்தே பாரத் ரயில் இனி இங்கு நிற்கும்: துரை வைகோ பெருமிதம்

தற்போது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டு உள்ளது என்று அவர் கூறியுள்ளார். இந்த கோரிக்கையை நிறைவேற்றிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மதிமுக சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் துரை வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் தினமும்  நெல்லையிலிருந்து  காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது. மறுபுறம், சென்னை எழும்பூரிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அன்று இரவு 10.40 மணிக்கு நெல்லை சந்திப்பை சென்று சேர்கிறது. தற்போது இந்த ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Embed widget