Urban Local Body Election | கம்பம் சேர்மேன் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகர செயலாளர்கள்
கம்பம் நகர திமுக கட்சியினருக்கிடையேயான உட்கட்சி பிரச்சினையால் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவியுள்ளது.
தேனி மாவட்டத்தில் தேனி அல்லிநகரம், பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், சின்னமனூர் என மொத்தம் 6 நகராட்சிகள் உள்ளன. தற்போது நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஆறு நகராட்சிகளில் சேர்ந்து மொத்தம் 177 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. அதிமுக-திமுக இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக வேட்பாளர்கள் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தை பொறுத்த வரைக்கும், திமுக கட்சியினர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் உட்கட்சி பிரச்சினைகள் பல இருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக கம்பம் நகராட்சியில் போட்டியிடும் வார்டுகளில் திமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று பல்வேறு குளறுபடிகளுக்கு இடையில் ஒருவழியாக இறுதிகட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இன்று கடைசி நாளில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில், கம்பம் நகராட்சியில் மட்டும் திமுக நகர செயலாளர்கள் இரண்டு நகர செயலாளர்கள் உள்ளனர். கம்பம் வடக்கு, கம்பம் தெற்கு என இந்த இரு நகரச் செயலாளர்கள் இருப்பதால் கம்பத்தில் திமுக சார்பில் வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு சிக்கல்களும் போட்டியும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கம்பம் நகர தலைவர் பதவிக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டு வருகிறது. கம்பம் வடக்கு நகர செயலாளராக நெப்போலியன் என்பவரும் கம்பம் தெற்கு நகர செயலாளராக செல்வக்குமார் என்பவரும் உள்ளனர்.
இந்த இருவருக்கும் இடையேயான போட்டியே திமுக வார்டு சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பதில் பல்வேறு போட்டிகளும் சிக்கல்களும் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இறுதிகட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் திமுகவிற்கு கம்பத்தில் மட்டும்தான் இரண்டு நகரச் செயலாளர்கள் இருப்பதால் உள்கட்சி பிரச்சினைகள் அதிகமாக இருந்து வருவதாக தெரிகிறது.
தேனி தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனின் ஆதரவாளர்களான இந்த இரு நகரச் செயலாளர்களுக்குமிடையே கடுமையான போட்டி நிலவி வருவதால் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரவாளர்களும் தற்போது கம்பம் நகர தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தற்போது கம்பம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு திமுகவில் கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கம்பம் நகரில் திமுகவினருக்கிடையே இந்த உட்கட்சி பிரச்சினை ஏற்படுவதால் கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் ராமகிருஷ்ணனுக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் கம்பம் நகராட்சி நகர் மன்ற தலைவர் பதவிக்கு பல்வேறு முனைப்போட்டிகள் உருவாகியுள்ளதும் இந்த நகராட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை எதிர்பார்க்கலாம்.
தேனி மாவட்ட சுற்றுலாத்தலங்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்:- Theni | மரமும்.. செடியும்... சில்லென காற்றும்.. இவ்வளவு அழகா தேனி? விசிட் ரிப்போர்ட்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்