மேலும் அறிய
Advertisement
Tungsten Protest: டங்க்ஸ்டன் எதிர்ப்பு... ஸ்தம்பித்த மதுரை... மக்களால் திக்குமுக்காடிய தமுக்கம்
Tungsten Protest in Madurai: ஆதரவாக தன்னெழுச்சி போராட்டமாக மாறிய டங்க்ஸ்டன் எதிர்ப்பு போராட்டம் . சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் சாரை சாரையாக அணிவகுத்த டிராக்டர்கள் மற்றும் வாகனங்கள்.
போராட்டத்தை அறிந்து மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
தபால் நிலையம் முன்பாக போராட்டம்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி , நரசிங்கம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு ஏலம் விடுத்துள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசு டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரியும், மேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முல்லை பெரியாறு ஒரு போகபாசன விவசாய பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என கோரி மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை மேலூர் முல்லைப் பெரியாறு, ஒரு போக பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி இன்று மதுரை மேலூர் பகுதியில் இருந்து மதுரை மாநகர் தமுக்கம் தலைமை தபால் நிலையம் முன்பாக போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று காலை 10 மணி அளவில் மதுரை மேலூர் பகுதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வணிகர்கள் கடைகளை அடைத்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மேலூர் தெற்குதெரு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் நடந்தபடி பேரணியாக வந்து நரசிங்கம்பட்டி பகுதியில் கூடியிருந்த விவசாயிகளோடு சேர்ந்து மதுரை மேலூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடை பயணத்தை மேற்கொண்டனர். டங்க்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி நடைபெற்ற இந்த நடை பயண பேரணியில் விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என திருச்சி தேசிய நெடுஞ்சாலை முழுவதிலும் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோர் பேரணியாக வருகை தந்த போது மத்திய அரசுக்கு எதிராகவும் மாநில அரசு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு BAN TUNGSTEN என்ற பதாகைகளை ஏந்தியவாறு 20 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தனர்.
போராட்டம் பல வடிவங்களில் நடத்துவோம் என பெண்கள் விவசாயிகள் தெரிவித்தனர்
இதனையடுத்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தமுக்கம் பகுதியில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரடியாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பாகவும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற நிலையில் மூன்று முறை காவல்துறை தரப்பில் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்பாக போராட்டத்தை விடுத்து கலைந்து சென்றனர். மேலும் போராட்டக் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய போது டங்க்ஸ்டன் திட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்யும் வரை நாம் தொடர்ந்து போராட்டத்தை நடத்தவுள்ளோம் எனவும் இந்தப் போராட்டத்தை அறிந்து மத்திய அரசு உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்வதற்கான, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்ட நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர். டங்ஸ்யன் திட்டத்தை நிறைவேற்றினால் மேலூர் மக்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை ஏற்படும் எனவே இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தங்களது போராட்டம் பல வடிவங்களில் நடத்துவோம் என பெண்கள் விவசாயிகள் தெரிவித்தனர்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தேர்தல் 2024
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion