மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா நிலவரம் என்ன?
மதுரையில் கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1236-ஆக உள்ளது.
மதுரை மாவட்டத்தில், இன்று 2 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 91050-ஆக உயர்ந்துள்ளது. வைரைஸ் தொற்றிலிருந்து குணமடைந்து ஒருவர் வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 89810-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1236 இருக்கிறது. இந்நிலையில் இன்று வரையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், தேனி, திண்டுக்கல் , தூத்துக்குடி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 0 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56839-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்கள் எண்ணிக்கை பூஜியமாக உள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 56285-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554 -ஆக இருக்கிறது.
தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 0 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50603-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 0 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 50069-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 533-ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37480-ஆக உயர்ந்துள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 36813-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 665 இருக்கிறது. இன்று நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் இரண்டு பேருக்கு கொரோனா நோய் தொற்று பரவல் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64968-ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 64519-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 448 இருக்கிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருபவர்கள் எண்ணிக்கை இரண்டு பேராக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்