மேலும் அறிய

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் 15 வருடங்களுக்குப் பிறகு குடல் இறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.  உத்தமபாளையத்தில் அரசு மருத்துவமனை தாலுகா அரசு மருத்துவமனையாக உள்ளது. இங்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். உள்நோயாளிகளாக 72 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. இந்த நிலையில் மருத்துவமனைக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்  மருத்துவர் பற்றாக்குறையால், 15 வருடங்களாக அறுவை சிகிச்சை இல்லாமல் பூட்டிக்கிடந்த அறுவை சிகிச்சை அரங்கு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு, முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இதில் கம்பம் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியை சேர்ந்த 35 வயதாகும்   ராமமூர்த்தி , என்பவர் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக  உத்தமபாளையம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  அவருக்கு  தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி நேற்று அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் தலைமை மருத்துவர் டாக்டர். பாரதி தலைமையில், மயக்கவியல் டாக்டர் மனோஜ், அறுவை சிகிச்சை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் வைரவன்,  உள்ளிட்ட குழுவினர்,  குடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர்.

'வெளியூர் போறீங்களா? இதை செய்யுங்க; வீட்டுக்கு நாங்க காவல்' - வேலூர் போலீசாரின் அதிரடி திட்டம்!

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இது குறித்து அறுவைச் சிகிச்சை நிபுணர் வைரவன் கூறுகையில், "குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு தேனி மற்றும் மதுரைக்கு இப்பகுதி மக்கள் செல்ல வேண்டும். தனியார் மருத்துவமனையில் அதிகமாக பணம் செலவாகும்.  ஆகையால் இப்பகுதி பொதுமக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  மேலும்,  தமிழக அரசு இந்த மருத்துவமனையில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு சிகிச்சைகள் வழங்கிட உத்தரவிட்டுள்ளது.

தேனி: 15 வருஷமா பூட்டியேதான் கிடந்தது.. மீண்டும் திறக்கப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கம்.!

இதற்கு முழு உறுதுணையாக தேனி மாவட்ட கலெக்டர், மாவட்ட சுகாதார துறை மற்றும் மாவட்ட இணை இயக்குனர் அவர்களின் ஆலோசனைப்படி . அறுவை சிகிச்சை அரங்கு திறக்கப்பட்டு, குடலிறக்கம்  அறுவை சிகிச்சை  செய்யப்பட்டுள்ளது.  தொடர்ந்து  பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிறப்பான டாக்டர்கள் குழுவினர் தற்போது உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்  உள்ளனர்.  எனவே பொதுமக்கள் இம்மருத்துவமனையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

தலைப்பு செய்திகள்

மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
மதுரை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள உள்ள top நிறுவனங்கள்... இளைஞர்கள் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க !
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம்கிசான் நிதி பெற ஆதார், e-KYC கட்டாயம்! சிவகங்கை விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
சிவகாசி - திருத்தங்கல் ரயில்வே மேம்பாலம்: மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவர பணிகள் தீவுரம் !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !
ராமநாதபுரத்தில் இலவச தனியார் வேலைவாய்ப்பு முகாம்... இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget