(Source: ECI/ABP News/ABP Majha)
பெரியகுளம் அரசு நில அபகரிப்பு வழக்கு; சிபிசிஐடியின் பதில் திருப்தி அளிக்கவில்லை- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.
மற்றொரு வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த குமரகுருபரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் பழமை வாய்ந்த பாண்டியராஜன் கோவிலில் பூசாரியாகவும், விவசாயமும் செய்து வருகிறேன். ஆதிச்சநல்லூர் அகழாய்வுக்காக ஒதுக்கப்பட்ட பரப்பில் அதிக பரப்பை உடையது கருங்குளம் வருவாய் கிராமம். இந்த இடமே அருங்காட்சியகம் அமைப்பதற்கு பொருத்தமான இடமாக அமையும். ஆதிச்சநல்லூர் அகழாய்வு இந்தியாவின் குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம், வரலாறு, அரசியல், விவசாயம் தொடர்பான விபரங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் சான்றாக உள்ளது. இவ்வளவு சிறப்பு மிக்க ஆதிச்சநல்லூரும், பழமையான பாண்டியராஜா கோவிலும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நிலையில் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்காக தேர்வு செய்த இடம், அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அகழாய்வு நடந்த இடத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படுவதே சிறப்பாக அமையும். தொல்லியல் துறையின் விதிகளும் இதையே உறுதிப்படுத்துகிறது. ஆனால் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதற்காக சங்கர் கணேஷ் மற்றும் சிலரால் 3 ஏக்கர் 24 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அகழாய்வு நடந்த இடத்தில் இருந்து 300 மீட்டர் தொலைவில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் 500 செண்ட் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அகழாய்வு அருங்காட்சியகம் அமைப்பதற்காக பயன்படுத்தக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆதிச்சநல்லூரில் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தடை விதிப்பதோடு, கருங்குளம் புளியங்குளம் கிராமத்தில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், விஜயகுமார் அமர்வு இது அரசின் கொள்கை ரீதியான முடிவு. இதில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்