![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தேனி: போலீசார் பாதுகாப்புடன் பேருந்தில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - காரணம் என்ன..?
தேனி மாவட்டம், போடி அருகே டொம்புச்சேரியில் ஒரு சமூக மாணவர்கள் பேருந்து சீட்டில் அமர்ந்து பயணிக்க மற்றொரு சமூக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்.
![தேனி: போலீசார் பாதுகாப்புடன் பேருந்தில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - காரணம் என்ன..? Theni: Do you know the police security detail for Bodi government school students to travel by bus TNN தேனி: போலீசார் பாதுகாப்புடன் பேருந்தில் பயணிக்கும் அரசு பள்ளி மாணவர்கள் - காரணம் என்ன..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/20/1a37c0aa0ef99a0221c1b1f0790df7711663668139916193_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தேனி மாவட்டம், போடி அருகே டொம்புச்சேரியில் ஒரு சமூக பிரிவை சேர்ந்த மாணவர்கள் பேருந்து உள்ளே சீட்டில் அமர்ந்து பயணிக்க மற்றொரு சமூக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் போலீசார் பாதுகாப்புடன் மாணவர்கள் பள்ளி சென்று வருகின்றனர்.
தேனி: சின்னமனூர் அருகே பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
டொம்புச்சேரி பட்டாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த குறிப்பிட்ட சமூக மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் போடி, திருமலாபுரம் பள்ளிகளில் படிக்கின்றனர். இவர்கள் சின்னமனுாரில் இருந்து குச்சனுார், உப்புக்கோட்டை, டொம்புச்சேரி, பெருமாள்கவுண்டன்பட்டி வழியாக போடி செல்லும் அரசு பேருந்தில் தினமும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். டொம்புச்சேரியில் காலை 7:30 மணிக்கு அரசு பேருந்து ஏறும் பட்டியலின பிரிவு மாணவர்களை சீட்டில் உட்காரக்கூடாது என, பெருமாள்கவுண்டன்பட்டியில் ஏறும் மாணவர்களில் தற்போது பட்டியலினத்தில் இருக்கும் மற்றொறு சமூக மாணவர்களை தகாத வார்த்தைகளால் கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட டொம்புசேரி பகுதி மாணவ,மாணவிகள் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தனர். புகாரில் பேருந்தில் எங்களை வரவிடாமல் செய்யவும், மீறி ஏறினால் சீட்டில் அமரவிடாமல் தடுக்கவும் பேப்பர்கள், சாக்பீஸ் கொண்டு எறிவது, ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவது, பாலியல் ரீதியான தொந்தரவு கொடுப்பது என அராஜகம் செய்கின்றனர் எனப் புகார் அளித்தனர். இதையடுத்து பெருமாள்கவுண்டன்பட்டி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இருதரப்பினடையே போடி பங்கஜம் பள்ளியில் அமைதி பேச்சுவார்த்தை சி.இ.ஓ., செந்திவேல் முருகன் தலைமையில் நடந்தது. இதில் பெருமாள்கவுண்டன்பட்டி மாணவர்கள் தரப்பினர் பங்கேற்கவில்லை. இதனால் அசம்பாவிதம் ஏற்படாமல் பேருந்தில் செல்லும் மாணவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
"ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பில் இருக்கக்கூடாதா? ஏன்? அதென்ன தடை செய்யப்பட்ட அமைப்பா?” : கொதித்த ஆளுநர்..
மாணவர்கள் பயணிக்கும் டவுன் பஸ்சில் 'வாக்கி டாக்கி'யுடன் இரு போலீசார் பாதுகாப்பிற்கு சென்று வருகின்றனர். டொம்புசேரி முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை பழனிசெட்டிபட்டி போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடனும், பெருமாள்கவுண்டன்பட்டி முதல் போடி வரை போடி தாலுகா போலீஸார் ஒருவர் வாக்கி டாக்கியுடன் பேருந்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)