மேலும் அறிய

தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கொலை குற்றத்துக்கு சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனை, 1,000 அபராதமும், செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஒரு மாதம் தண்டனை விதிப்பு

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்துரை (59). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவுன்தாய் (49). இவர்களுக்கு சவுந்திரபாண்டியன் என்ற மகன் உள்ளார்.  இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். அப்போது பவுன்தாய் தனது மகன் சவுந்தரபாண்டியனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தார்.

தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இதையடுத்து அவருடைய வீட்டில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த திருமண ஏற்பாடு தொடர்பாக சின்னத்துரையிடம் பவுன்தாய் தெரிவிக்கவில்லை. தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் மகனுக்கு திருமண ஏற்பாடு செய்ததை அறிந்து சின்னத்துரை ஆத்திரம் அடைந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சின்னத்துரை வந்து தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவுன்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

மேலும் சின்னத்துரை மறைத்து வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சின்னத்துரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதற்கிடையே நவம்பர் 20ஆம் தேதி அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ராஜராஜேஸ்வரி ஆஜராகி வாதாடினார்.

தேனியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி வெங்கடேசன் நேற்று தீர்ப்பு கூறினார். மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு சின்னத்துரைக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், அதை செலுத்த தவறினால் மேலும் ஒரு ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றத்துக்கு ஒரு மாதம் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சின்னத்துரையை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

தகவல்கள் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,

முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டமானது 138 புள்ளி 70 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு தற்போது 534 கன அடி நீரை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு 2 மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget