அண்ணாமலை கையில் கொடுத்த மனு.. கால் மணி நேரத்தில் சாலையில் கிடந்த பரிதாபம்.. மனு அளித்த பெண் அதிர்ச்சி..!
மனு அளித்த கால் மணி நேரத்தில், அந்த மனு சாலையில் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அந்த மனுவை அளித்த பெண் தெரிவித்துள்ளார்.
என் மண் - என் மக்கள் என்ற தலைப்பில் தமிழக பா.ஜ.க., மாநிலத்தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 28-ம் தேதி ராமேஸ்வரத்தில் துவங்கிய இந்த பயணத்தின் தொடர்ச்சியாக நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது திருப்பத்தூரில் உள்ள நான்கு முக்கு பகுதியில் பெண் ஒருவர் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனு பெரியகடை வீதி பகுதியில் கீழே கிடந்தது மனு அளித்த பெண்ணுக்கு பெரும் அதிர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.
'என் மண் - என் மக்கள்" என்ற தலைப்பில் பி.ஜே.பி., மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரிடம் 7-ம் நாளாக திருப்பத்தூர் சட்ட மன்ற தொகுதியில் ரமா என்ற பெண் கொடுத்த மனு சாலையில் கிடந்த, தகவல் தெரிந்ததும் மனு கொடுத்த பெண் அதிர்ந்தார்.#abpnadu | @SRajaJourno | pic.twitter.com/UJ7zgEEeib
— arunchinna (@arunreporter92) August 4, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்